முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் முதல் மாதத்திலேயே முத்திரை பதித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்த கார் இந்திய வாடிக்கையாளர்கள் பலரின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது. எனவே முக்கியமான பேசு பொருளாகவும் இந்த கார் மாறியுள்ளது.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

சிறப்பான இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் ஆகிய அம்சங்களுடன், அனைவரையும் கவரக்கூடிய வகையிலான டிசைனையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் பெற்றுள்ளது. எனவே டொயோட்டா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் மாடல்களில் ஒன்றாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாறியுள்ளது.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

டொயோட்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் 1,163 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் கடந்த செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. சொல்லப்போனால் இதுதான் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரின் முதல் மாத விற்பனை நிலவரம் ஆகும்.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

எனவே வரும் மாதங்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். E, S, G மற்றும் V என டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரின் ஆரம்ப விலையை டொயோட்டா நிறுவனம் 10.45 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் பல்வேறு அம்சங்களை மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அதாவது இந்த 2 கார்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இங்கே நாம் பேசி கொண்டுள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரும் கூட வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் கே15சி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎன்ஜிஏ ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் என டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

சிறப்பான இன்ஜின் ஆப்ஷன்களுடன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, சர்ரவுண்ட்-வியூ கேமரா, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பெரிய சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மொபைல் கனெக்டிவிட்டி வசதிகள் என டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் ஏராளமான வசதிகளையும் பெற்றுள்ளது.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

மேலும் முழு எல்இடி லைட்கள், ட்யூயல் டோன் அலாய் வீல்கள், கீலெஸ் எண்ட்ரி, எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற அம்சங்களையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் பெற்றுள்ளது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்திய சந்தையில் மேலும் பல்வேறு புதிய கார்களை களமிறக்குவதற்கும் டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

இதில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova HyCross) மற்றும் அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் (Next-gen Toyota Fortuner) போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர அப்டேட் செய்யப்பட்ட புதிய அர்பன் க்ரூஸர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் மாதத்திலேயே முத்திரை பதித்த டொயோட்டா கார்... வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய இரண்டும் வெவ்வேறு கார்கள் ஆகும். இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரானது, ஏற்கனவே விற்பனையில் உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலைதான் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 8, 2022, 13:06 [IST]
English summary
Toyota urban cruiser hyryder september 2022 sales
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+