பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. ரேட்ட பத்தி மட்டும் கேட்றாதீங்க!

பாலிவுட்டின் தொலைக்காட்சி உலகத்தைச் சேர்ந்த ஆங்கர் ஒருவர் மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர காரை வாங்கியிருப்பது இந்தி திரையுலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

பாலிவுட் சின்னத் திரையுலகின் மிகவும் ஃபேமஸான நபர்களில் ஒருவர் மணீஷ் பால். இவரே, மிக மிக விலையுயர்ந்த சொகுசு காரை தற்போது வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணீஷ் பால் டிவி ஆங்கராக மட்டுமின்றி மாடல், நடிகர் மற்றும் காமெடியன் ஆகிய ரோல்களையும் பாலிவுட் திரையுலகில் மேற்கொண்டு வருகின்றார். இவரே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிக மிக விலையுயர்ந்த கார் மாடலான மேபேக் ஜிஎல்எஸ்600 (Mercedes Maybach GLS600) ஆடம்பர வாகனத்தை வாங்கியிருக்கின்றார்.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

இதனை ஓர் சாதாரணமான லக்சூரி கார்களில் ஒன்றாக ஒப்பிட்டுவிட முடியாது. ஏனெனில், சொகுசு அம்சங்கள் இக்காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவேதான், இக்காரை பயன்படுத்துவோர் இதனை நடமாடும் அரண்மனையாக பார்க்கின்றனர். அந்தளவிற்கு சிறப்பு வசதிகளையும், தொழில்நுட்ப வசதிகளையும் மிக அதிகளவில் கொண்டிருக்கும் காராக மேபேக் ஜிஎல்எஸ் 600 இருக்கின்றது.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 2.47 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இன்னும் பல லட்சங்கள் அதிகமான விலையிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய மிக மிக விலையுயர்ந்த காரையே பாலிவுட்டின் சின்னத் திரை பிரபலம் மணீஷ் பால் தற்போது வாங்கியிருக்கின்றார்.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

அவரின் இந்த கொள்முதல் பாலிவுட் சின்ன திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த வெள்ளித்திரையையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய இரு கவர்ச்சியான நிறங்கள் கொண்ட ஜிஎல்எஸ்600 காரையே அவர் தற்போது வாங்கியிருக்கின்றார். இந்த காரை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பென்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

அவை அனைத்தும் தற்போது விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இந்த காரை நடமாடும் மாளிகையாக எண்ணுகின்றனர். எனவேதான் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சில நாட்களிலேயே அனைத்து யூனிட்டுகளுக்கும் செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

பன்மடங்கு சிறந்த வாகனமாக மேபேக் ஜிஎல்எஸ்600 காட்சியளிக்கின்றது. இந்த காரில் மேபேக்-இன் பிரத்யேக க்ரில், 22 இன்ச் அலாய் வீல், மேபேக் எனும் பேட்ஜ்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, மசாஜ், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட், கூலிங் மற்றும் ஹீட்டிங் ஆகிய வசதிகள் கொண்ட இருக்கைகள், சிறிய பொழுதுபோக்கு திரைகள், பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் சிறிய குளிர்சாதன பெட்டி, பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மேபேக் எம்பளம் பொருந்திய ஃபூட் பெடல்கள், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பிசியன்ட் மின் விளக்கு மற்றும் 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான், சாவியில்லா நுழைவு போன்ற ஆச்சரியமளிக்கும் தொழில்நுட்ப அம்சங்களும் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரில் இடம் பெற்றிருக்கின்றன.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

இக்காரில் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக ஏஎம்ஜி-யின் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 557 பிஎஸ் பவரையும், 730 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், அனைத்து வீல் இயக்கம் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

இதுதவிர, 48 வோல்ட் மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பம் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த சிஸ்டம் கூடுதலாக 22 பிஎஸ் பவரையும் 250 என்எம் வழங்க உதவுகின்றது. இது மிக சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் ஓவர் டேக்கிங்கின் போது அதிக திறனுடன் செயல்பட உதவியாக இருக்கும்.

பாலிவுட்ல டிவி ஆங்கரா இருக்கவரே இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரா!.. செம்ம சூப்பருங்க! ஆனா விலையை மட்டுமே கேட்காதீங்க!

இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட ஆடம்பர காரையே பாலிவுட் டிவி உலகைச் சேர்ந்த மணீஷ் பால் தற்போது வாங்கியிருக்கின்றார். இந்த காரை பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த ரன்வீர் சிங், கிரிதி சனோன், அர்ஜூன் கபூர், ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Wednesday, March 2, 2022, 10:44 [IST]
English summary
Tv anchor maniesh paul buys mercedes maybach gls600
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+