வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு கார் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியீட்டைப் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

டொயோட்டாவின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு கார் வெகு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி வெளியீடு செய்ய இருக்கின்றார். இந்த நிகழ்வு வரும் 28 ஆம் தேதி அன்று அரங்கேற இருக்கின்றது.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

சமீபத்தில், மொபிலிட்டியின் எதிர்காலம் குறித்த 62வது ஏசிஎம்ஏ ஆண்டு (62nd ACMA Annual Session' on Future of Mobility) நிகழ்ச்சி, தலைநகர் டெல்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய மத்தி அமைச்சர் நிதின் கட்காரி, டொயோட்டாவின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் காரின் வருகையை உறுதிப்படுத்தினார்.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

ஆனால், டொயோட்டா நிறுவனம் அதன் எந்த மாடலை ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை. உற்பத்தி நிறுவனமான டொயோட்டாவும் இதுகுறித்து தகவல்களை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த காரின் வருகையை எதிர்நோக்கி இந்திய வாகன பிரியர்கள் காத்திருக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்தியாவின் தேவையாக மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. அண்மைக் காலங்களுக்கு அதிகரித்துக் காணப்படும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் உள்ளன. இதன் காரணத்தினலாயே இவற்றிற்கான மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்களை இந்தியா தேடிக் கொண்டிருக்கின்றது.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

இதன் அடிப்படையிலேயே தற்போது சிஎன்ஜி, ஹைபிரிட், மின்சாரம் மற்றும் பிற பையோ ஃப்யூவல் திறனில் இயங்கும் வாகனங்களின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையிலேயே ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றையே அரசு அடுத்ததாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் என்றால் என்ன?

இந்தியாவில் தற்போது மக்கள் பெருக்கத்திற்கு இணையாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றின் இயக்கத்திற்காக பெருமளவில் கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இதனால் ஏற்படும் அந்நிய செலவாணியைக் குறைக்கும் பொருட்டே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

அதில், ஒன்றே ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்கள். ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் என்றால் ஏதோ தனி வகை ஆயில் என நினைத்துவிட வேண்டாம். அதிகளவில் பெட்ரோல் உடன் எத்தனால் அல்லது மெத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆகும். தற்போதும், பெட்ரோலில் கணிசமான அளவில் இவை கலக்கப்படுகின்றன.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

ஆனால், தற்போது கலக்கப்படும் அளவைக் காட்டிலும் சற்று கூடுதல் அளவிலேயே எத்தனால் அல்லது மெத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்பட இருக்கின்றது. கரும்பு போன்ற பிற விவசாய கழிவுகளில் இருந்தே இந்த எரிபொருள் தயாரிக்கப்படுகின்றது. இது மிகவும் சுத்தமான ஆல்கஹால் வகையும் ஆகும். இதனை உற்பத்தி செய்ய மிகக் குறைவான செலவே ஆகும்.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

எனவேதான் தற்போதைய மோடி அரசாங்கம் இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூவலை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த வாகனம் கலப்பு எரிபொருள் (blended fuel) மற்றும் வழக்கமான எரிபொருள் (standalone fuel) ஆகிய இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் மட்டுமே இல்லைங்க இன்னும் சில நிறுவனங்களும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வசதியுடன் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இ85 (ethanol power 85) ரக வாகனங்களையே நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

வரும் 28ம் தேதி வெளியாகிறது அனைவரும் எதிர்பார்த்த கார்... இதை யாரு வெளியீடு செய்ய போறாங்க தெரியுமா?

இந்த நிலையிலேயே அனைத்து நிறுவனங்களுக்கும் முன்னோடியாக, அதாவது, முதல் நிறுவனமாக டொயோட்டா அதன் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கக் கூடிய காரை வரும் 28 ஆம்ம தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுமட்டுமின்றி, நிறுவனம் இந்தியாவிற்கான ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கக் கூடிய காரையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இதன் சோதனையோட்ட பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2022, 10:34 [IST]
English summary
Union minister nitin gadkari to be taking off covers off toyota flex fuel powered car
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+