பணக்காரங்க எல்லாம் டீசல் காரையும் ஏழைங்க எல்லாம் பெட்ரோல் காரையும் தான் விரும்புறாங்க... என்ன நடக்குது?
இந்தியாவில் பெட்ரோல் கார்கள் அதிகமாக விற்பனையானாலும் ஒரு சில செக்மெண்டில் மட்டும் டீசல் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகிறது இது குறித்து விபரமாக காணலாம் வாருங்கள்.
மாதம் பிறந்துவிட்டாலே ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனங்களும் கடந்த மாத தங்கள் விற்பனை அறிக்கைகளை வெளியிடும். அந்த வகையில் கடந்த மாதம் இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்கள் நல்ல விற்பனையை பெற்றிருந்தன. இந்த நிறுவனங்கள் தங்கள் விற்பனை அறிக்கையை விளக்கமாக கொடுத்துள்ளன நிலையில் இந்த அறிக்கையில் மூலம் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் மக்கள் எதை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து T-BHP செய்த விற்பனை ஆய்வின் படி டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களை தான் மக்கள்அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் சில செக்மெண்ட்களில் பெட்ரோல் கார்களுக்கே மவுசு அதிகமாகியுள்ளது. மக்கள் ஹேட்ச் பேக் மற்றும் செடான் கார்களை வாங்கும் போது பெட்ரோல் கார்களையே அதிகம் தேர்வு செய்கின்றனர். ஆனால் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை பொருத்தவரை டீசல் கார்களுக்கே மவுசு இருக்கிறது.

எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களான மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, எம்ஜி க்ளோஸ்டர் ஆகிய கார்கள் 100 சதவீதம் டீசல் வேரியன்ட் கார்கள் மட்டுமே விற்பனையாகிறது. ஏன் என்றால் இந்த கார்களில் டீசல் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது.
இதுவே டொயோட்டா ஃபார்ச்சூனர், டொயோட்டா இன்னோவா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஆகிய கார்களில் மார்கெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கார்கள் இருகு்கிறது. இதில் 95 சதவீத விற்பனவை டீசல் கார்களிலிருந்தே வருகிறது.
இதுவே மோனோக்யூ ப்ரேமை அடிப்படையாக கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவிகளை பொருத்தவரை டாடா ஹாரியர், டாடா சஃபாரி, ஜீப் மெரிடியன் மற்றும் சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் ஆகிய கார்கள், எஸ்யூவிகளான கியா கார்னிவல், மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களில் டீசல் வேரியன்ட் மட்டுமே இருப்பதால் அதில் டீசல் கார்கள் மட்டுமே விற்பனையாகிறது.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் இருக்கும் ஹூண்டாய் டுஸான், ஹூண்டாய் அல்காஸர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களில் பெரும்பாலும் டீசல் வேரின்டின் விற்பனையே அதிகமாக இருக்கிறது. எம்ஜிஹெக்டரில் மட்டும் 36 சதவீத மட்டுமே டீசல் வேரியன்ட் இருக்கிறது மற்ற அனைத்து கார்களிடம் டீசல் வேரியன்டின் விற்பனை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
சிறிய ரக எஸ்யூவிகளான கம்பேக்ட் எஸ்யூவிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் இருக்கின்றனர். ஆனால் இதில் எல்லாம் டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களின் விற்பனை தான் அதிகமாக இருக்கிறது உதாரணமாக கியா செல்டோஸ் 43 சதவீதம், கியா சோனட் 45 சதவீதம், ஹூண்டாய் வென்யூ 22 சதவீதம், டாடா நெக்ஸான் 16 சதவீதம், ஹோண்டா டபிள்யூஆர்-வி 11 சதவீதம் என டீசல் கார்களின் விற்பனை குறைவாக இருக்கிறது.
ஆனால் இதே செக்மெண்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டாவில் 55 சதவீதமும், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் 51 சதவீதமும் டீசல் வேரியன்ட் விற்பனையாகிறது. ஆனால் செடான் கார்களான ஹோண்டா சிட்டி, ஹோண்டா அமேஸ், ஆகிய கார்களில் வெறும் 6 சதவீதம் தான் டீசல் வேரியன்ட் விற்பனையாகிறது. ஹூண்டாய் வெர்னாவில் 41 சதவீதம் டீசல் வேரியன்ட் விற்பனையாகிறது. இதே போல ஹேட்ச் பேக் காரில் ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய 2 கார்கள் மட்டும் தான் டீசல் வேரின்ட் ஆப்ஷனில் உள்ளன. அது இரண்டும் 11 சதவீத விற்பனையை பெறுகிறது.
அப்படி பார்க்க வேண்டும் என்றால் அதிக விலை கொண்ட கார்களில் எல்லாம் டீசல் கார்கள் தான் விற்பனையாகிறது. ஆனால் ரூ10 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான விலையில் உள்ள கார்களில் எல்லாம் அதிகம் பெட்ரோல் கார் தான் விற்பனையாகிறது. இந்த வித்தியாசம் ஏன் நிகழ்கிறது? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








