எல்லா நிறுவனங்களையும் ஓரங்கட்ட திட்டம்... விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 3 மாருதி கார் மாடல்கள்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின்கீழ் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் மூன்று கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி இந்திய வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக விரைவில் சில புதுமுக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. மிக சமீபத்தில்தான் இந்நிறுவனம் பிரெஸ்ஸா காரின் அறிமுகத்தை நாட்டில் அரங்கேற்றியது. இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரமான வரவேற்பைுக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இன்னும் சில கார் மாடல்களையும் அது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்திற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்டை தக்க வைத்த்ுக் கொள்ளும் நோக்கில் இம்மாதிரியான முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கியிருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே நேற்றைய (ஜூன் 20) தினம் கிராண்ட் விட்டாரா எனும் காரை புதுமுக காரை மாருதி சுஸுகி வெளியீடு செய்தது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கான அறிமுகத்தை பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் சில கார் மாடல்களும் அடுத்தடுத்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் கீழ் விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றன. அவற்றின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022 மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto)
மாருதி சுஸுகி அதன் புகழ்பெற்ற கார் மாடலான ஆல்டோவின் புதிய தலைமுறை வெர்ஷனையே விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கின்றது. மிகப் பெரிய மாற்றத்திற்கு இக்காரை மாருதி உட்படுத்திக் கொண்டிருக்கின்றது. காரின் ஸ்டைல் மற்றும் சிறப்பு வசதிகள் அனைத்திலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, புதிய 1.0 லிட்டர் கே10சி ட்யூவல்ஜெட் பெட்ரோல் மோட்டாரும் புதிய ஆல்டோவில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 67 பிஎச்பி மற்றும் 89 என்எம் டாமுன்தைர்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, விற்பனையில் உள்ள ஆல்டோவில் பயன்படுத்தப்பட்டு வரும் 796 சிசி மோட்டார் தேர்விலும் ஆல்டோ விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், குறிப்பிட்ட சில தேர்வுகளில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன், சிஎன்ஜி தேர்விலும் இப்புதிய தலைமுறை ஆல்டோ எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக இட வசதி, ஸ்மார்ட் போன் இணைப்பு, நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய தோற்றத்திலான டேஷ்போர்டு, எஞ்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் மற்றும் சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி ஈகோ (Maruti Suzuki Eeco)
மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் ஈகோ காரின் அப்டேட்டட் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காருக்கு பல ஆண்டுகளாக எந்தவொரு அப்டேட்டையும் வழங்காத நிலையில், தற்போது அதனை அப்டேட் செய்யும் பணியில் மாருதி களமிறங்கியிருக்கின்றது.

புதுப்பித்தலின் அடிப்படையில் மாருதி ஈகோ காரில் பவர் ஸ்டியரிங் அம்சம் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, காரின் டிசைனிலும் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கணிசமான மாற்றங்களுடனேயே மாருதி ஈகோ எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேலையில், இக்காரின் ஸ்லைடிங் ரக டூர் மற்றும் 7 சீட்டர் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது. இதேபோல், மோட்டார் விஷயத்திலும் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகின்றது. ஈகோவின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்கும் விதமாக மிக கணிசமான மாற்றங்களை மட்டுமே மேற்கொள்ள மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)
இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவிலை அதகளப்படுத்தும் வகையிலேயே நிறுவனம் விரைவில் கிராண்ட் விட்டாராவை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் வருகை வரும் ஆகஸ்டு மாதம் அரங்கேற இருக்கின்றது.

மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இரண்டுமே 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்விலேயே வழங்கப்பட இருக்கின்றது. இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷன் லிட்டருக்கு 28 கிமீ வரை மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆல்கிரிப் அனைத்து வீல் டிரைவ் சிஸ்டமும் இக்காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








