அனைத்துமே கிரெட்டாவுக்கு ஆப்பு வைக்க வருகின்றன! விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5எஸ்யூவி கார்கள்

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் 5 எஸ்யூவி கார்களின் பட்டியலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

இந்தியாவின் டாப் செல்லிங் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராக ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா இருக்கின்றது. பல ஆண்டுகளாக இக்கார் விற்பனையில் இருக்கின்றபோதிலும் இந்தியர்கள் மத்தியில் சற்றும் மவுசு குறையாமல் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காருக்கு டஃப் கொடுக்கும் வகையில் விரைவில் இந்திய சந்தையில் சில கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

மொத்தம் ஐந்து கார் மாடல்கள் இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார் சந்தையை குறி வைத்து விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றன. அவை என்ன மாடல்கள் என்பது பற்றிய தகவலையும், அந்த வாகனங்களில் இடம் பெற இருக்கும் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்களையுமே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara):

மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்தின் கூட்டு முயற்சியின் அடிப்படையில் உருவாக்கிய கார் மாடலே கிராண்ட் விட்டாரா. தற்போது விற்பனையில் இருக்கும் எஸ்-கிராஸ் காரை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக கிராண்ட் விட்டாரை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. வரும் ஜூலை 20ம் தேதி இக்கார் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா காரை ஸ்ட்ராங்கான ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த ஹைபிரிட் அம்சத்தை தனியாக சார்ஜ் செய்ய வேண்டியிருக்காது. காரின் இயக்கத்தின் வாயிலாகவே அது சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Hyryder):

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் எப்படி மாருதி நிறுவனத்திற்காக கிராண்ட் விட்டாரா உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, இதேபோல், இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டாவிற்காக உருவாக்கப்பட்டதே ஹைரைடர். இதுவும் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

இரு விதமான மோட்டார் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதுமாதிரியான மோட்டார் தேர்வே முன்னதாக பார்த்த மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி காரிலும் கிடைக்க இருக்கின்றது.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Kia Seltos Facelift):

கியா நிறுவனம் வெகு விரைவில் புதுப்பிக்கப்பட்ட செஸ்டோஸ் காரை இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. கியா நிறுவனம் அப்டேட்டாக செல்டோஸின் முன், பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை லேசாக மாற்றியமைத்திருக்கின்றது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் உள்ளிட்டவை மாற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, காரின் உட்பகுதியிலும் அதிக தொழில்நுட்ப வசதிகளையும் கியா வாரி வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

புதிய ரெனால்ட் டஸ்டர் (New Renault Duster):

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய தலைமுறை டஸ்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, உலக சந்தையில் மூன்றாம் தலைமுறை டஸ்டர் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்த டஸ்டர் காரை மிக சமீபத்திலேயே ரெனால்ட் நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றியது குறிப்பிடத்தகுந்தது.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

ரெனால்ட் நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் காரை சிஎம்எஃப்-பி பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே உருவாக்கியிருக்கின்றது. இக்காரை வெகு விரைவில் உலகளவில் வெளியீடு செய்ய ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்குள் அதன் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிலும் இந்த ஆண்டுகளுக்குள்ளாகவே அதன் கால் தடத்தை எதிர்பார்க்கலாம்.

அனைத்துமே கிரெட்டாவிற்கும் ஆப்பு வைக்க வருகிறது... விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 எஸ்யூவி கார்கள்!

ஹைண்டா மிட்-சைஸ் எஸ்யூவி (Honda Mid-size SUV):

ஹோண்டா நிறுவனம் புதுமுக மிட்-சைஸ் எஸ்யூவி காரை உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. தற்போது, இக்காரை 3ஆர்ஏ எனும் குறியீட்டு பெயரைக் கொண்டு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் வருகை 2024ம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஸ்யூவி காரை தனது புதிய எலெக்ட்ரானிக் ஆர்கிடெக்சரை பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்டி ஹைபிரிட் காரைபோல் மிக சூப்பரான ஹைபிரிட் அம்சத்துடன் நிறுவனத்தின் புதுமுக மிட்-சைஸ் எஸ்யூவி கார் சந்தையைக் களம் காணும் என யூகிக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 19, 2022, 8:30 [IST]
English summary
Upcoming 5 new midsize suv cars list
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+