நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பலரும் தற்போது புதிய கார்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வெகு விரைவில் பண்டிகை காலம் முடிவுக்கு வரவுள்ளது. எனினும் கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளன.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

எனவே நடப்பு 2022ம் ஆண்டு முடிவடைவதற்குள் பல்வேறு புதிய கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக வரும் நவம்பர் மாதம் ஏராளமான புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள முக்கியமான மாடல்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

2022 எம்ஜி ஹெக்டர்

நடப்பாண்டு இறுதிக்குள் புதிய ஹெக்டர் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. எனவே வரும் நவம்பர் மாத மத்தியில் புதிய ஹெக்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். அதற்கு முன்னதாக புதிய ஹெக்டர் காரின் வசதிகளை விவரிக்கும் டீசர்களை எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

இதன் மூலம் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 14 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். இது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும். மேலும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளையும் இது கொண்டிருக்கும்.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற புதிய ஹைப்ரிட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன்களில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் கிடைக்கிறது. இதை தொடர்ந்து தனது மிகவும் பிரபலமான இன்னோவா காருக்கும் ஹைப்ரிட் பவரை வழங்குவதற்கு டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் என்ற பெயரில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இதன் அறிமுகம் வெகு விரைவில் அரங்கேறலாம்.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி

மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து இந்த காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பு அக்டோபர் மாதத்திலேயே இந்த சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு வந்து விடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலும் வருதுங்க!

ஆனால் அக்டோபர் மாதம் முடிவடையவுள்ள நிலையில், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே வரும் நவம்பர் மாதம் இந்த புதிய சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் பலேனோ காரின் சிஎன்ஜி வெர்ஷனும் விரைவில் விற்பனைக்கு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2022, 23:58 [IST]
English summary
Upcoming cars in november 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+