சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

விரைவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின்கீழ் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் சிஎன்ஜி கார்களின் பட்டியலைக் கீழே உள்ள பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் காணலாம்.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

இந்தியாவில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டில் மின் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. எலெக்ட்ரிக் வாகனங்கள், அதிரடியாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்த பலனை வழங்குகின்றன.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

இதன் விளைவாகவே பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியுள்ளனர். இதேபோல், வாகன பிரியர்கள் பலர் சிஎன்ஜியால் இயங்கும் வாகன இயக்கத்திற்கும் மாறி வருகின்றனர். இந்த வாகனங்களுக்கு மாறுவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிக வேகத்தில் உயர்ந்து வருகின்றது. இதற்கு சிஎன்ஜி மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை ஓர் சான்றாக கூறலாம்.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

தேவை அதிகரித்திருப்பதால் பல மடங்கு சிஎன்ஜி விற்பனை நிலையங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. இவ்வாறு, சிஎன்ஜி வாகன சந்தை விரிவடைந்து வருவதனால், இந்திய வாகன உற்பத்தியாளர்கள், அதனால் இயங்கும் வாகனத்தைக் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

தென்கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனமும் இந்த விஷயத்தில் அதிக ஆர்வத்தைக் கொண்டுள்ளன. இதன் வெளிப்பாடாக சில சிஎன்ஜி கார் மாடல்களை அவை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

நிறுவனங்கள், அதன் எந்த புகழ்வாய்ந்த கார் மாடலில் சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இதுமட்டுமின்றி, என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் அவற்றை எதிர்பார்க்கலாம் என்பது பற்றியும் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

கியா சொனெட் சிஎன்ஜி (Kia Sonet CNG)

கியா நிறுவனம் விற்பனைச் செய்து வரும் சூப்பரான கார் மாடல்களில் சொனெட்டும் ஒன்று. இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரை தற்போது எச்டிஇ, எச்டிகே, எச்டிகே-ப்ளஸ், எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் ஏஇ, எச்டிஎக்ஸ்-ப்ளஸ், ஜிடிஎக்ஸ்-ப்ளஸ் ஆகிய ட்ரிம்களில் கியா விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றில் புதிய தேர்வாக சிஎன்ஜி-யையும் நிறுவனம் சேர்க்க இருக்கின்றது.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

சொனெட் சிஎன்ஜி 1.0 லிட்டர் எஞ்ஜின் தேர்வில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் வழங்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி மாறுபாட்டின் காரணமாக நிறுவனத்தின் வழக்கமான 1.0 லிட்டர் எஞ்ஜின் வெளிப்படுத்துவதைவிட சற்று குறைவான பவர் மற்றும் டார்க்கை அது வெளியேற்றும். இதன் வருகை மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரஸ்ஸா சிஎன்ஜிக்கு நேரடி போட்டியாக அமையும்.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

ஹூண்டாய் வென்யூ சின்ஜி (Hyundai Venue CNG)

கியா சொனெட் சிஎன்ஜி மற்றும் ஹூண்டாய் வென்யூ சிஎன்ஜி ஆகிய இரண்டும் பெரியளவில் வித்தியாசமின்றி சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளன. ஆமாங்க, உருவத்தில் இரு கார்களும் மாறுபட்டுக் காணப்பட்டாலும் அவை எஞ்ஜினைப் பொருத்தவரை ஒரே மாதிரியானதாக இருக்கும். இந்த காரிலும், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

கியா கேரன்ஸ் சிஎன்ஜி (Kia Carens CNG)

விற்பனையில் சக்கைப் போடுபோட்டுக் கொண்டிருக்கும் கியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் கேரன்ஸ் மாடலும் ஒன்று. இது ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்புக் கொண்ட எம்பிவி ரக காராகும். இக்காரை கியா நிறுவனம் சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிஎன்ஜி தேர்வில் உருவாகியிருக்கும் கேரன்ஸ் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.

சிஎன்ஜி கார்களை வாங்க போறீங்களா?.. வெயிட் பண்ணுங்க... கியா-ஹூண்டாய் ரெண்டு பேரும் செம்ம பிளானில் இருக்காங்க!

1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினையே சிஎன்ஜி-க்கு ஏற்ப மாற்றி நிறுவனம் வழங்க இருக்கின்றது. கியாவின் கேரன்ஸ் எம்பிவி காரில் ஆறு முதல் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா மேற்கொண்டிருக்கும் யுக்தி, அக்காருக்கு நாட்டில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2022, 10:41 [IST]
English summary
Upcoming cng cars list from kia and hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+