இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

இந்தியாவில் கடந்த ஒரு சில வருடங்களாக சிஎன்ஜி கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் இன்னும் நிறைய பேர் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து கொண்டே வருவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் நிறைய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய சிஎன்ஜி கார்களின் பட்டியலில், நிறைய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களும் இருக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சிஎன்ஜி தேர்வில் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம். சரி, வாருங்கள் செய்திக்குள் செல்லலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா சிஎன்ஜி

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா. இதன் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த எஸ்யூவி காரில், மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி பவர்ட்ரெயின் தேர்வையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் சிஎன்ஜி மாடலில் டிரான்ஸ்மிஷன் பணிகளை 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கவனித்து கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம், ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களை தற்போது தொடர்ச்சியாக புதுப்பித்து வருகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

டாடா நெக்ஸான் சிஎன்ஜி

இதுவும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்தான். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் சிஎன்ஜி வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, கேமராவின் கண்களில் ஏற்கனவே சிக்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உடன் சிஎன்ஜி தேர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. சிஎன்ஜி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், விற்பனை மேலும் உயரலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

கியா சொனெட் சிஎன்ஜி

கியா சொனெட் சிஎன்ஜி கார் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட இதன் ஸ்பை படங்கள் வெளியாகின. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, கியா சொனெட் காரின் ஜிடி வெர்ஷன் ஆகும். இது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

எனவே கியா சொனெட் கார் டர்போ சிஎன்ஜி இன்ஜினை பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கியா சொனெட் சிஎன்ஜி காரில் என்ன கியர் பாக்ஸ் வழங்கப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. கியா சொனெட் காரும், சப்-4 மீட்டர் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மாருதி, டாடா, கியா நிறுவனங்கள் தீவிரம்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சிஎன்ஜி கார்களின் விற்பனையில், மாருதி சுஸுகி நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி கார்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்ற வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2022, 14:35 [IST]
English summary
Upcoming cng compact suv s in india maruti suzuki vitara brezza tata nexon kia sonet
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+