விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

ஹூண்டாய் நிறுவனம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் திகழ்கிறது. ஆனால் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது இடத்திற்கு மிக கடுமையான சவால்களை ஏற்படுத்தி வருகிறது.

விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

எனவே இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்வதற்காக பல்வேறு புதிய மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் திகழ்கிறது.

விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில், புதிய முன் பகுதி, புதிய எல்இடி ஹெட்லைட்கள், புதிய வசதிகள், மேம்படுத்தப்பட்ட புதிய கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

அதேபோல் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் அடாஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் தற்போது விற்பனையில் உள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரிலும் வழங்கப்படும். இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்பதால், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

அதேபோல் ஏற்கனவே விற்பனையில் உள்ள கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய கார்களுடன் ஹூண்டாய் கோனா போட்டியிட்டு வருகிறது.

விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

புதிய மாடலின் வருகைக்கு பின், இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் ஹூண்டாய் கோனா விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் புதிய வசதிகள், மேம்படுத்தப்பட்ட கேபின் ஆகியவை புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

இதுதவிர புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்னா ஆகிய கார்களையும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தனது கார்களின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி கொள்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 18, 2022, 19:27 [IST]
English summary
Upcoming hyundai cars in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+