கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் 2 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.

Recommended Video

Toyota Urban Cruiser Hyryder Tamil Walkaround | ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின், கியர் பாக்ஸ், வசதிகள்

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே நிறைய நிறுவனங்கள் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதில், ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று. ஹூண்டாய் நடப்பு 2022ம் ஆண்டிலேய 2 புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த 2 எலெக்ட்ரிக் கார்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Kona Facelift)

இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். இது பிரீமியமான எலெக்ட்ரிக் கார் ஆகும். நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற மற்றும் சக்தி வாய்ந்த ஒரு எலெக்ட்ரிக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன். ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்யவுள்ளது.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலில், ஹூண்டாய் நிறுவனம் டிசைனை மட்டும் அப்டேட் செய்யப்போவதில்லை. இதனுடன், பல்வேறு வசதிகளையும் கூடுதலாக வழங்கவுள்ளது.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

அத்துடன் சக்தி வாய்ந்த பவர்ட்ரெயினும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் மாடலில், மூடப்பட்ட வகையிலான முன் பக்க க்ரில் அமைப்பு மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

பின் பகுதியை பொறுத்தவரையில், புதிய கிடைமட்டமான டெயில்லைட்கள் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது. அங்கு தற்போதைய நிலையில் 2 பேட்டரி ஆப்ஷன்களுடன், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிடைத்து வருகிறது.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

அவை 64 kWh மற்றும் 39.2 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 64 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 484 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் எனவும், 39.2 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 305 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படுவதை காட்டிலும், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5)

ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் மாடலை போலவே, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தைக்கு சிபியூ (CBU) வழியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

அதாவது முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இந்த எலெக்ட்ரிக் கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்தியாவில் உற்பத்தி நடக்காது என்ற காரணத்தால், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும், சர்வதேச சந்தைகளில் 2 பேட்டரி ஆப்ஷன்களுடன்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

இதில், 58kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடலைதான் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்களுக்கும் சற்று அதிகமாக பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா! ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள்! சீக்கிரம் வரப்போகுது!

கியா நிறுவனம் வெகு சமீபத்தில் இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கும், இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 24, 2022, 17:29 [IST]
English summary
Upcoming hyundai electric cars kona facelift ioniq 5
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+