சுற்றி வளைத்து குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

அதிகரித்து கொண்டே வரும் போட்டியை சமாளிப்பதற்காக, ஹூண்டாய் நிறுவனம் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, 2வது மிகப்பெரிய கார் நிறுவனமான இருப்பது ஹூண்டாய். இந்த நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஒரு சில கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

இதன்படி ஹூண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். நீங்கள் புதிய ஹூண்டாய் காரை வாங்குவதற்கு திட்டமிட்டு கொண்டிருந்தால், இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மற்றும் வெனியூ என்-லைன்

ஹூண்டாய் வெனியூ, இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் வரும் வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரையில், டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் கூட, இன்ஜினில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

இதுதவிர ஹூண்டாய் வெனியூ காரின், என்-லைன் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹூண்டாய் வெனியூ என்-லைன் வெர்ஷனில், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 2 புதிய மாடல்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடப்பு 2022ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ, ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

இதன் வெளிப்புற டிசைனில்தான் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். ஆனால் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் காம்பினேஷன்தான், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு சில எலெக்ட்ரிக் கார்களில் ஹூண்டாய் கோனாவும் ஒன்று. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக நடப்பு 2022ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், டிசைன் மாற்றங்கள் செய்யப்படுவதுடன், புதிய வசதிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 39.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

டிசைன் மாற்றங்களுடன், கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டாலும் கூட, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இதே பேட்டரி தொகுப்புதான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

அதிகரிக்கும் போட்டி!

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் ஏற்கனவே போட்டி நிறைந்தது. இந்த சூழலில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வரவுள்ளது, டாடா நெக்ஸான் காரின் சமீபத்திய எழுச்சி போன்ற காரணங்களால் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றி சுற்றி குடைச்சல் கொடுக்கும் டாடா... போட்டியை சமாளிக்க ஹூண்டாய் செய்ய போகும் அதிரடி... என்னனு தெரியுமா?

அதேபோல் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களின் வருகையால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிப்பதற்கும், எலெக்ட்ரிக் எஸ்யூவி செக்மெண்ட்டில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் வருகையால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிப்பதற்கும், க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் கோனாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் மிகவும் அவசியமாகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, May 16, 2022, 23:31 [IST]
English summary
Upcoming hyundai facelift cars in india
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+