எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

கியா நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புதிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள 3 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட், கேரன்ஸ், கார்னிவல் மற்றும் இவி6 எலெக்ட்ரிக் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளதால், செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய 3 கார்களும், ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

அதே நேரத்தில் கார்னிவல் மற்றும் இவி6 எலெக்ட்ரிக் ஆகிய 2 கார்களும் விலை உயர்ந்தவை. எனவே அதற்கு ஏற்ற வகையிலான வரவேற்பை அவையும் பெற்று கொண்டுதான் வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவில் தனது வியாபாரத்தை மேலும் பெருக்கி கொள்ளும் வகையில், பல்வேறு புதிய மாடல்களை கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

இதில், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் கியா ஸ்போர்டேஜ் ஆகிய 3 கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த 3 கார்கள் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Kia Seltos Facelift)

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் தற்போது சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாகின. கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிசைன் பல்வேறு விதங்களில் மாற்றப்படவுள்ளது. அத்துடன் கூடுதலாக பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

ஆனால் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் நடப்பாண்டின் இறுதிக்குள்ளாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2023ம் ஆண்டின் முதல் பாதியில்தான் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift)

இந்தியாவின் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 என மிக வலிமையான போட்டி மாடல்களை கியா சொனெட் கார் எதிர்கொண்டு வருகிறது. இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய 2 கார்களின் புதிய மாடல்கள் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

எனவே கியா நிறுவனத்திற்கும் சொனெட் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான நேரம் வந்து விட்டது என்பதுதான் உண்மை. கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை போலவே, கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும், டிசைன் மாற்றங்களுடன், வசதிகளின் பட்டியலும் அதிகரிக்கப்படவுள்ளது.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

அதேபோல் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் கியா நிறுவனம் சொனெட் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளதால், கியா நிறுவனம் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

கியா ஸ்போர்டேஜ் (Kia Sportage)

ஹூண்டாய் நிறுவனம் வெகு சமீபத்தில் புதிய டூஸான் காரை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இதை தொடர்ந்து கியா நிறுவனமும் ஸ்போர்டேஜ் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஹூண்டாய் டூஸான் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம்தான் கியா ஸ்போர்டேஜ் காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எல்லாமே சூப்பர்... கியா இத்தனை புதிய கார்களை அறிமுகம் செய்ய போகுதா? நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற எஸ்யூவி கார்களில் இருந்து, மேம்பட்ட புதிய ஒரு மாடலுக்கு மாற நினைப்பவர்களுக்கு கியா ஸ்போர்டேஜ் நல்ல ஆப்ஷனாக இருக்கும். அந்த அளவிற்கு பல்வேறு அதிநவீன வசதிகள் நிரம்பிய காராக கியா ஸ்போர்டேஜ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது தவிர கியா ஸ்போர்டேஜ் காரின் ஒரு சில வேரியண்ட்களில் அடாஸ் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்படலாம்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 20, 2022, 19:15 [IST]
English summary
Upcoming kia cars in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+