இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

இந்திய சந்தையில் தற்போது எஸ்யூவி கார்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இந்த சூழலில், 10 லட்ச ரூபாய் விலைக்குள் எஸ்யூவி செக்மெண்ட்டில் களமிறங்கவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி (Hyundai Micro SUV)

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவுள்ளது. இதில், கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தனது மைக்ரோ எஸ்யூவி காரை காட்சிக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து 2023ம் ஆண்டின் மத்தியில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள மைக்ரோ எஸ்யூவி காராக டாடா பன்ச் திகழ்கிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்த கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்ந்து விட்டது. அப்படிப்பட்ட டாடா பன்ச் காருடன், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி கார் போட்டியிடும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி (Honda Compact SUV)

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் வரவேற்பு நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே இந்த செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரின் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன் ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் போட்டியிடும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

ஹோண்டா அமேஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், ஹோண்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹோண்டா நிறுவனத்திற்கே உரித்தான பாணியில் இந்த புதிய கார் டிசைன் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

சிட்ரோன் சி3 7 சீட்டர் (Citroen C3 7-Seater)

இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார்களில் ஒன்று சிட்ரோன் சி3. இது சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் ஆகும். விலை குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை சிட்ரோன் சி3 கார் கவர்ந்துள்ளது. இந்த சூழலில் சி3 காரின் புதிய 7 சீட்டர் வெர்ஷனை சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

சிட்ரோன் நிறுவனம் சி3 காரின் 7 சீட்டர் வெர்ஷனை தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி, இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளன. சிட்ரோன் சி3 காரின் 7 சீட்டர் வெர்ஷன் அனேகமாக அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

புதிய தலைமுறை டொயோட்டா அர்பன் க்ரூஸர் (New-Gen Toyota Urban Cruiser)

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி ரக கார்கள்... எல்லாமே நல்லா இருந்தா என்னப்பா பண்றது!

எனவே நடப்பாண்டு இறுதிக்குள் டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் க்ரூஸர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனை செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 12, 2022, 23:43 [IST]
English summary
Upcoming suvs under rs 10 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+