மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையில் டாடா நிறுவனம் அதிரடியான திட்டங்களை வகுத்துள்ளது.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

இந்தியாவில் தற்போதெல்லாம் டாடா கார்களின் விற்பனை அமோகமாக உள்ளது. இதனை தக்க வைத்து கொள்வதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

2023 டாடா ஹாரியர் (2023 Tata Harrier)

மேம்படுத்தப்பட்ட 2023 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்த புதிய மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளன.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

2023 டாடா ஹாரியர் காரில், ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில், அப்டேட் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்டீரியரில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி 2023 டாடா ஹாரியர் காரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படலாம்.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

மேலும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System) அடிப்படையிலான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் தற்போது அடாஸ் தொழில்நுட்ப வசதிகள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

2023 டாடா சஃபாரி (2023 Tata Safari)

2023 டாடா ஹாரியர் காரை போலவே, 2023 டாடா சஃபாரி காரிலும் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேட்டஸ்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம், அடாஸ் அடிப்படையிலான பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப் அஸிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற வசதிகள் 2023 டாடா சஃபாரி காரில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் டியாகோ எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இதன் மூலம் கிடைத்துள்ள உற்சாகத்தில் அடுத்த ஆண்டு பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

டாடா பன்ச் கார், மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா பன்ச் பதிவு செய்து வருகிறது. எனவே இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

ஒருவேளை டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாவிட்டால், டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால் எது முதலில் விற்பனைக்கு வரும்? என்பதில்தான் சந்தேகம் நிலவுகிறது.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

ஒட்டுமொத்தத்தில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளதால், அதனை நன்றாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், பன்ச் மற்றும் அல்ட்ராஸ் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி, ஹூண்டாயை வெச்சு செய்ய போறாங்க... பக்காவா ஸ்கெட்ச் போட்ட டாடா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

இந்த புதிய கார்களின் மூலம் மிகவும் முக்கியமான போட்டியாளர்களான மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி முதலிடத்தில் தொடரும் நிலையில், 2வது இடத்திற்கு டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முட்டி மோதி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 25, 2022, 22:17 [IST]
English summary
Upcoming tata cars in 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+