டாடா டியாகோ, டிகோர் கார்களைபோல் விரைவில் சிஎன்ஜி தேர்வில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமானவை!

மிக விரைவில் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக 7 கார்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவைகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பன் மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ. 100ஐ கடந்து எரிபொருள்கள் விற்கப்படுகின்றன. இந்த நிலை தினசரி வாகன பயன்பாட்டாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

இந்த நிலையால் இந்தியர்கள் பலர் தற்போது மாற்று திறன்களால் இயங்கும் வாகனத்தை தேர்வு செய்ய தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் சிஎன்ஜி-ஆல் இயங்கும் வாகனங்களுக்கு நல்-ஆதரவு கொடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

இதன் விளைவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதுமுக சிஎன்ஜி வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கியிருக்கின்றன. இன்று (ஜனவரி 19) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல கார் மாடல்களான டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மாடல்களில் சிஎன்ஜி தேர்வை அறிமுகப்படுத்தியது.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

இதுபோன்று இன்னும் பல பிரமான கார் மாடல்கள் மிக விரைவில் இந்தியாவில் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில், நடப்பாண்டிலேயே சிஎன்ஜி வாகனங்களாக இந்திய வாகன சந்தையை அலங்கரிக்க உள்ள ஏழு கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

மாருதி ப்ரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Vitara Brezza CNG)

மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே பலதரப்பட்ட மாடல்களில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அவற்றின் வரிசையில் மிக விரைவில் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரையும் நிறுவனம் சேர்க்க இருக்கின்றது. நாட்டின் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக விட்டாரா ப்ரெஸ்ஸா இருக்கின்றது. இந்த காரிலேயே மிக விரைவில் சிஎன்ஜி தேர்வு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2022ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் சிஎன்ஜி தேர்வு ப்ரெஸ்ஸா விற்பனைக்கு வரும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் சிஎன்ஜி (Maruti Suzuki Swift and Dzire)

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களாக ஸ்விஃப்ட் (ஹேட்ச்பேக் ரக கார்) மற்றும் டிசையர் (காம்பேக்ட் ஹேட்ச்பேக் ரக கார்) இருக்கின்றன. இவையும் நிறுவனத்தின் மிக அதிகமாக விற்பனையாகும் கார் மாடல்களாக இருக்கின்றன. இவற்றிலேயே சிஎன்ஜி கருவியை ஃபேக்டரிலேயே வைத்து ஃபிட் செய்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது மாருதி சுசுகி நிறுவனம். இவற்றின் அறிமுகம் நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவே செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி (Toyota Innova Crysta CNG)

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா இந்தியாவின் மிகவும் பிரபலமான எம்பிவி ரக காராக இருக்கின்றது. இந்த காரிலேயே தயாரிப்பு நிறுவனம் மிக விரைவில் சிஎன்ஜி தேர்வை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது விற்பனயைில் இருக்கும் 'ஜி ட்ரிம்' தேர்விலேயே சிஎன்ஜி தேர்வு அறிமகும் செய்யப்பட இருக்கின்றது. இது ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அதிக விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

டாடா பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch)

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி இருக்கின்றது. இது மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காரும்கூட. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தில் மோதல் ஆய்வில் இக்கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் என்ற பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

இத்தகைய சிறப்புமிக்க கார் மாடலிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக விரைவில் சிஎன்ஜி தேர்வுகளை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. சமீபத்திய சிஎன்ஜி தேர்வுகளான டிகோர் மற்றும் டியாகோவிற்கு அடுத்தபடியாக இந்த காரே நிறுவனத்தின்கீழ் சிஎன்ஜி வாகனமாக வெளி வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

மாருதி சுசுகி பலினோ சிஎன்ஜி (Maruti Baleno CNG could)

மாருதி சுசுகி நிறுவனத்தின் கீழ் விற்பனைக்கு வரும் மற்றுமொரு சிஎன்ஜி வாகனமாக பலினோ இருக்கின்றது. இந்தியாவின் மிக அதிகமாக விற்பனையாகும் இந்த கார் ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் வாகனமாகும். ஆகையால், இதன் சிஎன்ஜியின் வருகைமீது பலருக்கு அதிகமாக எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் அறிமுகமும் நட்பாண்டிற்குள்ளாகவே அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா டியாகோ, டிகோர் கார்களை போல் மிக விரைவில் சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள்... 7ம் பிரபலமான கார் மாடல்கள்!

ஹூண்டாய் வென்யூ சிஎன்ஜி (Hyundai Venue CNG)

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஹூண்டாய் வென்யூவும் ஒன்று. இந்த காரின் சிஎன்ஜி வருகை பற்றிய தகவல் பல நாட்களாக இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் அவுரா ஆகிய கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வுகளை வழங்கி வருகின்றது. இவற்றிற்கு அடுத்தபடியாக வென்யூ சிஎன்ஜி தேர்வே இந்திய வாகன சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 20, 2022, 10:34 [IST]
English summary
Upcoming top 7 cng cars in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+