என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் பழைய பன்னீர் செல்வமாக மாறி கெத்து காட்டவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 3 புதிய கார்களை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் ஆகியவைதான் அந்த 3 புதிய கார்கள்.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

இந்த 3 கார்களும் நடப்பாண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள டொயோட்டா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த 3 புதிய கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder)

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் வெகு சமீபத்தில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்கள் இந்த செக்மெண்ட்டில்தான் போட்டியிட்டு வருகின்றன.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

கூடிய விரைவில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரும் இந்த செக்மெண்ட்டில் களமிறங்கவுள்ளது. 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என 2 பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் கிடைக்கும். வரும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில், அதாவது ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் (All-New Toyota Urban Cruiser)

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போட்டியிட்டு வருகிறது.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

இந்த சூழலில், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பிறகு, அர்பன் க்ரூஸர் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் வெளிப்புற டிசைன் மற்றும் கேபின் அப்டேட் செய்யப்படுவதுடன், பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் புதிய 1.5 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த புதிய மாடலில் கொடுக்கப்படவுள்ளது.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் (Toyota Innova Hycross Hybrid)

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் காரும் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் சேர்த்து, இந்த புதிய மாடலும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் புதிய TNGA-C பிளாட்பார்ம் ஆகியவைதான், புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் காரின் ஹைலைட்கள். ஆனால் புதிய இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பதை டொயோட்டா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

யூகத்தின் அடிப்படையில், நடப்பாண்டு இறுதிக்குள் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் காரின் வருகையில், இந்திய சந்தையில் சமீப காலமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மிகவும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய மாடலின் வருகை, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பெரிய கியா கேரன்ஸ்... வருகிறது இன்னோவா காரின் புதிய மாடல்... பழைய பன்னீர் செல்வமாக மாறும் டொயோட்டா!

இவை தவிர ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடல், அடுத்த ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆதிக்கம் மேலும் உயரலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 21, 2022, 13:39 [IST]
English summary
Upcoming toyota cars in india
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+