இந்தியாவின் மலிவு விலை 7சீட்டர் கார் இப்போது கூடுதல் மைலேஜை தரும்! பன்முக அப்டேட்டுகளுடன் மாருதி ஈகோ அறிமுகம்!

முன்பைவிட 25 சதவீதம் அதிகம் மைலேஜ் தரும் திறன் கொண்ட காராக அப்டேட்டட் மாருதி சுஸுகி ஈகோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி, அதன் பிரபல எம்பிவி கார் மாடல்களில் ஒன்றான ஈகோவை அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலுக்கு ரூ. 5.10 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஈகோ

இத்தகைய மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் மலிவு விலை எம்விபி கார் மாடல்களில் ஒன்றாக மாருதி ஈகோ இருக்கின்றது. இந்த வாகனத்தை ஒட்டுமொத்தமாகக 13 வேரியண்டுகளில் மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 5 இருக்கை தேர்வு, 7 இருக்கை தேர்வு, கார்கோ, டூர் மற்றும் ஆம்புலன்ஸ் என வெவ்வேறு அவதாரங்களிலும் ஈகோ விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இதுமட்டுமின்றி பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளிலும் இந்த கார் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இத்தகைய பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் காரையே நிறுவனம் தற்போது அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மிக முக்கியமாக மெக்கானிக்கல் அம்சங்களில் மிக சிறப்பான மாற்றங்களை மாருதி மேற்கொண்டிருக்கின்றது. இதனால், முந்தைய மாடல்களைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக அப்டேட் செய்யப்பட்ட மாருதி ஈகோ மாறியிருக்கின்றது.

ஈகோ

அப்டேட் செய்யப்பட்ட மாருதி ஈகோ காரில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரே டிசையர், ஸ்விஃப்ட், பலினோ உள்ளிட்ட முன்னணி கார் மாடல்களில் மாருதி சுஸுகி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த மோட்டாரை பெட்ரோலில் இயக்கும்போது 6,000 ஆர்பிஎம்மை 80.76 பிஎஸ் பவரையும், 3000 ஆர்பிஎம்மில் 104.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

அதுவே சிஎன்ஜியில் இயங்கும்போது இதே மோட்டார் 71.65 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும். தற்போது நிறுவனம் அளித்திருக்கும் உறுதியின்படி பெட்ரோலில் இயங்கும் மாருதி ஈகோ லிட்டருக்கு 20.20 கிமீ மைலேஜையும், சிஎன்ஜியில் இயங்கும் ஈகோ ஒரு கிலோவிற்கு 27.05 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஈகோ

இந்த மைலேஜ் திறன் முந்தைய வெர்ஷன்களைக் காட்டிலும் 25 சதவீதம் மற்றும் 29 சதவீதம் அதிகம் ஆகும். மைலேஜ் விஷயத்தில் மட்டுமில்லைங்க சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த ஈகோ கார் மிக சூப்பரானதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக டிரைவரை மையமாகக் கொண்டு பன்முக சிறப்பம்சங்களை இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கியிருக்கின்றது.

சாய்ந்துக் கொள்ளும் வசதிக் கொண்ட முன்னிருக்கை, ஏர் ஃபில்டர், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் டோம் லேம்ப்புகள் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்டியரிங் வீல், ரோட்டரி கன்ட்ரோல்கள், ஏசி மற்றும் ஹீட்டர் உள்ளிட்ட அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்ட மாருதி ஈகோ காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன் பாதுகாப்பு அம்சங்களாக எஞ்ஜின் இம்மொபிலைசர், இலுமினேட்டட் ஹசார்டு ஸ்விட்ச், டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், சைல்டு லாக் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பன்மடங்கு சிறப்பு வசதிளுடனேயே அப்டேட் செய்யப்பட்ட மாருதி சுஸுகி ஈகோ தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஆகையால், முந்தைய வெர்ஷனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே அப்டேட்ட செய்யப்பட்ட ஈகோவிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் 9.75 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈகோ காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், எம்பிவி காரின் தலைவனாக இக்கார் காட்சியளிக்கின்றது.

Most Read Articles
English summary
Updated maruti suzuki eeco launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X