பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

பஞ்சரானாலும் 80 கிமீ தூரம் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய டயரை பிரிட்ஜஸ்டோன் (Bridgestone) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த டயர்குறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

வாகனங்களின் சீரான இயக்கத்தில் டயர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எனவேதான் தினமும் வாகனங்களை வெளியே எடுத்துச் செல்லும் முன் அவற்றைக் கவனிக்க வேண்டும் என வாகனத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதில், காற்று இல்லாமல் போனாலோ அல்லது வேறு ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலே அது மிக பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

குறிப்பாக, காற்றில்லாத வாகனங்களை, அசால்டாக என்ன நடக்கப் போகின்றது என கூறி எடுத்துச் சென்றால், எப்போதும் இல்லாத வகையில் திடீரென பஞ்சாராகி நிற்கும். நகரத்திற்குள் பஞ்சர் ஆகிவிட்டால் ஓகே, அதை, எப்படியாவது அதை சரி செய்துவிடலாம். மாறாக ஆளரவமற்ற இடங்களில் அல்லது நெடுஞ்சாலைகளில் பஞ்சரானால் எப்படி சரி செய்வது.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு பிரபல டயர் உற்பத்தி நிறுவமான பிரிட்ஜஸ்டோன் (Bridgestone), புதிய டயர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த புதுமுக டயர் பஞ்சர் ஆகியிருந்தாலும் சுமார் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே புதிய டயரின் சிறப்பு வசதி ஆகும்.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

டிரைவ் குவார்ட் பிளஸ் (DriveGuard Plus) எனும் பிரீமியம் தர டூரிங் டயரை (premium touring tyre)-ஐயே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டயருக்கு 65 ஆயிரம் மைல்கள் வாரண்டியை வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது 1,04,607 கிமீ வாரண்டி வழங்கப்பட இருக்கின்றது.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

பிரிட்ஜஸ்டோன் நிறுவனம் டிரைவ் குவார்ட் பிளஸ் டயரை ரன்-ஃபிளாட் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பமானது அனைத்து கால நிலைகளிலும் சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும். ஈரம், பனி காலம் என அனைத்தையும் இது சமாளிக்கும்.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

இதுமட்டுமின்றி, பஞ்சாராகி இருக்கின்ற நேரத்திலும் 80 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் மற்றும் அந்த நேரத்தில் மணிக்கு 129 கிமீ வேகத்தில் செல்லலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூப்பரான டயரையே நிறுவனம் தற்போது நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சாலைகள் கரடு-முரடானவை மட்டுமல்ல. அவை எந்தநேரத்தில் வேண்டுமானாலும் டயர்களை பதம்பார்த்து (பஞ்சராக்கி) விடலாம். இதுபோன்ற நம் நாட்டின் சாலைக்கு ஏற்ற தயாரிப்பாக புதிய டிரைவ் குவார்ட் பிளஸ் இருக்கின்றது.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

ஆனால், இந்த டயரை பிரிட்ஜஸ்டோன் தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த டயர் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த குறிப்பிட்ட நாடுகளின் அனைத்து பிரிட்ஜஸ்டோன் டயர் விற்பனையகங்களிலும் மிக தாராளமாக டிரைவ் குவார்ட் பிளஸ் டயர் விற்பனைக்குக் கிடைக்கும் வகையில் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கின்றது.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

இந்த டயர் பயணத்தின்போது அதிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பிரிட்ஜஸ்டோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அமைதியான மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தவும் இந்த டயர் உதவுமாம்.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

புதிய பிரிட்ஜஸ்டோன் டிரைவ் குவார்ட் பிளஸ் டயர் பிரத்யேகமாக செடான் மற்றும் கிராஸோவர் ரக கார்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆடி க்யூ 3 (Audi Q3), பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series), இன்ஃபினிட்டி க்யூ50 (Infiniti Q50), லெக்சஸ் என்எக்ஸ் (Lexus NX), மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் (Mercedes-Benz C-Class) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஜிஎல்பி கிராஸோவர் (Mercedes-Benz GLA and GLB crossovers) கார்களுக்கு ஏற்ற தயாரிப்பாக அந்த டயர் காட்சியளிக்கின்றது.

பஞ்சரே ஆனாலும் 80 கிமீ பயணிக்கும்... பிரிட்ஜஸ்டோனின் சூப்பரான வசதி கொண்ட டிரைவ் குவார்ட் பிளஸ் டயர்!

டயர் விஷயத்தில் எப்போது அதிக கவனம் தேவை என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். ஏனெனில் டயரில் ஏற்படும் கோளாறு நசிக்கல்களை சந்திக்க வைத்திடும். குறிப்பாக, காற்றில்லாத டயர்களால் மைலேஜ் குறைதல், எளிதில் பஞ்சர் ஆகுதல், சீரற்ற இயக்கம் உள்ளிட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதேபோல், அதிக பயன்பாட்டால் ஏற்படும் அதிக தேய்மானம் கிரிப்பான இயக்கத்தை வழங்காது. இதனால், விபத்து போன்ற கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும். ஆகையால், டயர் விஷயத்தில் எந்த சமரசமும் வேண்டாம் என்பதை அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 28, 2022, 15:46 [IST]
English summary
Us based tyre maker bridgestone launches driveguard plus premium touring tyre
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+