மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியன் கணவரும், அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர் பயன்படுத்திய மெர்சிடிஸ் மேபேக் எஸ் 560 (Mercedes - Maybach S 560) சொகுசு கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைப் பார்க்கலாம்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் மிக மிக விலையுயர்ந்த காரில் வந்திறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர் பயன்படுத்திய சொகுசு காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

பாலிவுட்டின் மிகப் பெரிய பணக்கார தயாரிப்பாளர்களில் போனி கபூரும் ஒருவர். இவர் பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரைப்படங்கள் சிலவற்றையும் தயாரித்திருக்கின்றனர். அந்தவகையில், இவரின் தயாரிப்பில் வெளி வந்ததே நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் ஆகும். போனி கபூர் இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், அவரிடத்தில் மெர்சிடிஸ் மேபேக் எஸ் 560 (Mercedes-Maybach S560) சொகுசு காரும் பயன்பாட்டில் உள்ளது. இந்த காரிலேயே அண்மையில் மும்பை விமானத்திற்கு அவர் வந்திருக்கின்றார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சொகுசு கார் போனி கபூரின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டது அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. உண்மையில் போனி கபூரின் மகளும், பிரபல நடிகையுமான ஜான்வி கபூருக்காக வாங்கப்பட்டதே இந்த லக்சூரி வசதிகள் நிறைந்த மெர்சிடிஸ் மேபேக் எஸ் 560 கார் ஆகும்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

இருப்பினும் போனி கபூரும் இக்காரை சில நேரங்களில் பயன்படுத்துவார் என்பதை தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ வெளிக்காட்டுகின்றது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். வீடியோவில், மெர்சிடிஸ் மேபேக் எஸ் 560 காரின் பின்னிருக்கையில் இருந்து போனி கபூர் வெளியேறும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

2019ம் ஆண்டிலேயே இந்த கார் ஜான்வி காபூரின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டது. 7666 எனும் காஸ்ட்லியான பேன்சி இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவி பயன்படுத்திய எஸ்-கிளாஸ் காரும் இதே பதிவெண்ணையே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது ரூ. 2 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அண்மையிலேயே இக்காரின் புதிய தலைமுறை வெர்ஷனை மெர்சிடிஸ் நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியது. அது ஏராளமான சிறப்பு மற்றும் சொகுசு வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

இத்துடன், சிறப்பு கஸ்டமைசேஷன் வாயிலாக கூடுதல் அம்சங்களையும் மெர்சிடிஸ் இக்காரில் வழங்குகின்றது. ஆகையால், எக்ஸ்ட்ரீம் சொகுசு காராக மெர்சிடிஸ் மேபேக் எஸ்560 காட்சியளிக்கின்றது. இதேபோல், எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டிலும் இக்கார் சூப்பரான காராக காட்சியளிக்கின்றது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

4.0 லிட்டர் வி8 எஞ்ஜினே சொகுசு காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 469 பிஎச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜின் தானியங்கி டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது. மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இக்காரில் எண்ணற்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

அந்தவகையில், மசாஜ் மற்றும் பிரீமியம் லெதர் கொண்ட இருக்கைகள், பின் பக்க இருக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு திரை, பனோரமிக் சன்ரூஃப், மினி ஃப்ரீசர், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிகல்லி அட்ஜஸ்டபிள் இருக்கைகள் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் மெர்சிடிஸ் மேபேக் எஸ் 560 காரில் வழங்கப்பட்டுள்ளன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பயன்படுத்திய Mercedes-Maybach S560 கார்! இது எவ்ளோ சூப்பரான காருனு தெரியுமா?

இதுபோன்ற லக்சூரி அம்சங்கள் கொண்ட பல கார்கள் போனி கபூரின் இல்லத்தில் இருக்கின்றன. அந்தவகையில், அவரிடத்தில் போர்ஷே கேயென்னே, பென்ஸ் ஜிஎல்இ, ஆடி ஏ6, ரேஞ்ஜ் ரோவர் எவோக், பென்ஸ் எஸ்-கிளாஸ் எஸ்350 டி உள்ளிட்ட கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2022, 11:30 [IST]
English summary
Valimai producer boney kapoor spotted with mercedes maybach s560 luxury sedan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+