இளைஞர்கள் புதுசா கார் வாங்க ரூ2.75 லட்சம் மானியம் வழங்கும் அரசு... ஆனால் அதை வாங்க 3 விதிமுறைகள் இருக்கிறது
18-25 வயதுடைய இளைஞர்களுக்கு கார் வாங்க அரசு ரூ2.75 லட்சம் வரை மானியம் வழங்கியிருக்கிறது. இதை பெறுவதற்கு 3 விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கும் வரும் நபர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும்.
Recommended Video
இது குறித்த விரிவான மற்றும் தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று பழைய உலகம் முழுவதும் வானங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் வாகனங்களால் ஏற்படும் மாசுகளும் அதிகமாகி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைக்கு ஒரு கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசுவை குறைக்க உலக நாடுகள் முழுவதும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சில நாடுகளில் காற்று மாசு பெரிய அளவில் குறையவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியன் ஸ்டேட் அரசு இளைஞர்கள் பழைய வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தால் அவர்கள் புதிய வாகனம் வாங்குவதற்கு ரூ2.75 லட்சம் மானியமாக வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் இளைஞர்கள் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் பலனைப் பெற ஆஸ்திரேலியாவின் விக்டோரியா ஸ்டேட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவருக்கு 18-25 வரை வயது இருக்க வேண்டும். அவர் தற்போது 16 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். இது மட்டுமல்ல இந்த வாகனம் ANCAP ரேட்டிங்கில் 1 அல்லது 2 அல்லது ஒரு ஸ்டார் ரேட்டிங் கூடப் பெறாத வாகனமாக இருக்க வேண்டும்.

இப்படியாக 3 விதிமுறைகளுக்குள்ளும் ஒருவர் அடங்கினால் அவர் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் காரை மாற்றிக்கொள்ள 5000 ஆஸ்திரேலிய டாலர் இந்திய மதிப்பில் ரூ2.75 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இது மட்டுமல்ல அந்த இளைஞர் இந்த திட்டத்தின் படி புதிய காரையே அல்லது ஏற்கனவே பயன்படுத்திய காரையே வாங்கலாம்.

ஆனால் இவர் வாங்கும் கார் 2012ம் ஆண்டிற்குப் பிறகு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த காரின் விலை 30 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அடுத்த விதிமுறையாக இந்த கார் ANCAP ரேட்டிங்கில் குறைந்தபட்சம் 4 ஸ்டார் பெற்ற காராக இருக்க வேண்டும். என அந்த சட்டம் சொல்கிறது.

இந்த சட்டத்திற்கு அந்நாட்டு அரசு "Unsafe2Safe" எனப் பெயரிட்டுள்ளது. இந்த செலவை மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியடைவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செப் 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

இந்த திட்டம் விக்டோரியன் ஸ்டேட் அரசு 6.9 மில்லியன் ஆஸ்திரேலிய பணத்தை இந்த திட்டத்தின் மூலம் நகரில் பயன்பாட்டில் உள்ள 1000 பழைய கார்களை நீக்கி புதிய கார்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சாலையில் பாதுகாப்பான கார்கள் ஓடும் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த திட்டத்தை முழுவதும் இளைஞர்களுக்காக மட்டுமே வழங்கியதற்கான காரணம் இந்த வயது இளைஞர்கள் தான் அப்பகுதியில் கார்களை ஓட்டி அதிகம் விபத்துக்களில் சிக்குகின்றனர் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படியான விபத்துக்களில் பழைய கார்கள் சிக்கினால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்கிறது. அதை தடுக்கவே அரசு இளைஞர்களுக்கு இந்த திட்டத்தை அறிவித்துப் பாதுகாப்பான காரை தான் வாங்க வேண்டும் என உத்தரவையும் போட்டுள்ளது. இப்படி ஒரு திட்டம் இந்தியாவிற்கு வந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் எந்த பாதுகாப்பான காரை வாங்குவீர்கள்...


Click it and Unblock the Notifications