Just In
- 54 min ago
விநோத தோற்றத்தில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!
- 12 hrs ago
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- 12 hrs ago
நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!
- 13 hrs ago
இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!
Don't Miss!
- News
அண்ணே இப்போதைக்கு வேணாம்! ஆனா கண்டிப்பா உண்டு! முன்னாள்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த இபிஎஸ்!
- Technology
ஒன் டைம் ஆஃபர்- அதிரடி தள்ளுபடியில் Iqoo Neo 6: விலைக்கேற்ற அம்சம் இருக்கா?
- Lifestyle
தவா மஸ்ரூம்
- Finance
பிளாஸ்டிக் தடை அமல்... முதல் நாளிலேயே இத்தனை கிலோ பறிமுதலா?
- Movies
நாசருக்கு சினிமா தான் மூச்சு.. வதந்தியை பரப்ப வேண்டாம்.. டென்ஷனான கமீலா நாசர்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த காருல போறதுக்கு எல்லாம் கொடுத்து வச்சுருக்கணும்... சூப்பரான காரில் ரசிகையை ரவுண்டு அழைத்து சென்ற நடிகர்!
பிரபல நடிகர் ஒருவர் அவரது விலையுயர்ந்த காரில் ரசிகை ஒருவரை ரவுண்டு அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ரவுண்டிற்கு நடிகர் பயன்படுத்திய காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் வித்யுத் ஜம்வால்-ம் ஒருவர். கமேண்டோ சீரிஸில் நடித்ததன் வாயிலாகவே பாலிவுட்டின் ஸ்டார் ஆக்டர்களில் ஒருவராக அவர் மாறினார். இவர் தமிழ் திரையுலகிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அஜித்தின் பில்லா 2, விஜயின் துப்பாக்கி ஆகிய படங்களில் அவர் நடித்திருக்கின்றார்.

இதுதவிர நடிகர் சூர்யாவுக்கு நெருங்கிய நண்பனாக அஞ்ஜான் திரைபடத்திலும் அவர் நடித்துள்ளார். இதேபோல், தெலுங்கு திரையுலகிலும் அவர் சில படங்களில் அவர் நடித்திருக்கின்றார். எனவே, தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி மக்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

இந்த நிலையிலேயே தன்னுடைய ரசிகர்களை ஆரவாரப்படுத்தும் வகையில் தன்னுடைய ரசிகை ஒருவரை விலையுயர்ந்த காரில் அழைத்து சென்று உற்சாகப்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. நடிகர் தனது ரசிகையை அழைத்துச் செல்ல பயன்படுத்தியது அஸ்டன் மார்ட்டின் டிபி9 கார் ஆகும்.

இந்தியாவின் மிக மிக விலையுயர்ந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். ரூ. 3.5 கோடிக்கும் அதிகமான விலையில் இந்த அல்ட்ரா லக்சூரி கார் விற்கப்படுகின்றது. இத்தகைய விலையுயர்ந்த காரிலேயே வித்யுத் ஜம்வால் அவரது ரசிகரை ஒரு ரவுண்டு அழைத்துச் சென்றார். அந்த பெண் மகிழ்ச்சியுடன் அவருடன் செல்வதை நம்மால் காண முடிகின்றது. வித்யுத் ஜம்வால் தற்போது குதா ஹாபிஸ் பாகம் இரண்டுக்கான புரமோஷனை பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வாறு, இந்த பணிக்காக வந்த இடத்திலேயே இத்தகைய செயலை அவர் செய்திருக்கின்றார்.

அஸ்டன் மார்ட்டின் ஓர் கிராண்ட் டூரர் ரக காராகும். இந்த காரில் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய 6.0 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 510 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும். தானியங்கி டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாரில் இணைக்கப்பட்டுள்ளது.

காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 295 கிமீ ஆகும். இது, மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.6 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் திறனையும் கொண்டிருக்கின்றது. அஸ்டன் மார்ட்டின் டிபி9 கார் சார்ந்து இன்னும் பல்வேறு சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, இந்த கார் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் இடம் பெற்றது என்பதாகும்.

இத்தகைய சூப்பரான வரலாற்றைக் கொண்ட அல்ட்ரா லக்சூரி காரையே நடிகர் வித்யுத் இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றார். இதுமட்டுமின்றி அண்மையில் டிரையம்ப் நிறுவனத்தின் ராக்கெட் 3ஆர் பைக்கை வாங்கி அவரது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார்.

இது ஓர் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கில் 2.5 லிட்டர் இன்-லைன் 3 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது லிக்யூடு கூல்டு அம்சம் கொண்ட மோட்டாராகும். 167 பிஎஸ் மற்றும் 221 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். இந்த திறன் சிறிய எஞ்ஜின் கொண்ட கார்களுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 19 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. நடிகர் வித்யுத் ஜம்வால் இதுபோன்று இன்னும் சில விலையுயர்ந்த பைக்குகளை பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில், டுகாட்டி டியாவல் 1260 பைக்கையும் அவர் வைத்திருக்கின்றார். இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 19.45 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலே பார்த்த இரு பைக்குகளிலேயே மிக மிக அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட டூ-வீலராக டிரையம்ப் ராக்கெட் 3ஆர் இருக்கின்றது. இந்த பைக்கில் ஐஎம்யூ அடிப்படையிலான கார்னரிங் டிராக்சன் கன்ட்ரோல், ஏபிஎஸ், ரைடு-பை-ஒயர், ஹில் ஹோல்டு அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோ, சாவியில்லாமல் ஆன் செய்யும் வசதி, வண்ண டிஎஃப்டி திரை, இன்டெக்ரேடட் கோ-ப்ரோ கன்ட்ரோல்கள் மற்றும் பன்முக ரைடிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!
-
இதற்காக எல்லாம் வாகன ஓட்டிகளை நிறுத்த கூடாது... கர்நாடகா டிஜிபி அதிரடி உத்தரவு... தமிழ்நாட்லயும் போட்டா பரவால!
-
பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?