சொகுசு கார் பிரியர் இல்ல வெறியர்! விஜய் தேவரகொண்டாவிடம் இத்தனை கார்களா?.. எல்லாமே செம்ம சூப்பரான காரா இருக்கே!
நடிகர் விஜய் தேவரகொண்டா பயன்படுத்தும் சூப்பர் மற்றும் விலையுயர்ந்த கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த கூடுதல் தகவல்களைக் கீழே காணலாம், வாங்க.

'கீதா கோவிந்தம்', 'அர்ஜுன் ரெட்டி' ஆகிய திரைப்படங்களின் வாயிலாக தெலுங்கு பேசும் மக்களை மட்டுமின்றி தென்னிந்தியாவின் பிற மொழி திரைப்பட ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா. தன்னுடைய மிக சிறப்பான நடிப்பினால் தற்போது பல கோடி மக்களை தன்னுடைய தீவிர ஃபேனாக மாற்றியிருக்கின்றார்.

குறிப்பாக, அவருக்கு இளம் பெண்கள் ரசிகர்கள் ஏராளம். ஆனால், விஜய் தேவரகொண்டாவோ வாகனங்கள் மீது அதீத காதல் கொண்டவராக இருக்கின்றார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜயிடம் பன்முக சொகுசு மற்றும் ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

நடிகர் வைத்திருக்கும் கார்களை வைத்து பார்த்தால், விஜய் ஓர் வழக்கமான கார் பிரியர் என்று கூறுவதற்கு பதிலா, அவரை மிக பெரிய கார் வெறியர் என்று கூறுவிடுவார்கள். அந்தளவிற்கு மிக அதிகளவில் சூப்பர் மற்றும் லக்சூரி கார்களை அவர் வைத்திருக்கின்றார்.

அப்படி என்னென்ன கார் மாடல்களை அவர் வைத்திருக்கின்றார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, விஜய் தேவரகொண்டாவிடம் இருக்கும் விலையுயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிகள் கொண்ட ஐந்து கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang)
கார் காதலர்கள் பலரின் விருப்பமான மாடலாக ஃபோர்டு மஸ்டாங் இருக்கின்றது. இது ஓர் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய சூப்பர் கார் ஆகும். இந்த காரை தற்போது விஜய் தேவரகொண்டாவும் பயன்படுத்தி வருகின்றார். தனக்கு மிகவும் பிடித்தமான கார் மாடல் மஸ்டாங் என விஜய் கடந்த கால பேட்டிகளின்போது தெரிவித்திருக்கின்றார்.

அவர் வைத்திருக்கும் மஸ்டாங் கார் சுமார் 75 லட்சம் மதிப்புடையது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 363 பிஎச்பி மற்றும் 515 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே காரில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டும் சேர்ந்து மஸ்டாங் காரை அதி-திறனை வெளியேற்றும் வாகனமாக மாற்றியிருக்கின்றது. இந்த திறனுக்காகவே பலர் இக்காரை கண்மூடித் தனமாக விரும்புகின்றனர். பலர் இக்காரின் சூப்பர் ஃபாஸ்ட் திறனை சாகசம் நிகழ்த்துவதற்கென்றே பயன்படுத்தி வருகின்றனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கிளாஸ் (Mercedes Benz GLC class)
நடிகர் விஜய் தேவரகொண்ட தனது அதிகபட்ச பயணங்களுக்கு இந்த காரையே பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத் சாலைகளில் இந்த காரில் வலம் வரும்போது அவரை பார்த்தவர்கள் ஏராளம் என கூறப்படுகின்றது. இந்த கிளாசிக் பென்ஸ் காரின் மதிப்பு ரூ. 60 லட்சம் இருக்குமாம்.

நடிகரின் கராஜில் இருக்கும் மிக விலையுயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிகள் கொண்ட கார் மாடல்களில் பென்ஸ் ஜிஎல்சி கிளாஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக தாராளமான இட வசதியை வழங்கும் எஸ்யூவி ரக கார் மாடலாக இது இருக்கின்றது. இக்காரின் 2021 வெர்ஷனில் மெர்சிடிஸ் மீ எனும் புதிய கார் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக பல்வேறு வசதிகளை குரல் கட்டளையின் வாயிலாக அதன் உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இத்ததுடன், பார்க்கிங் இடத்தைத் தேடி சென்று பார்க் செய்யும் நேவிகேஷன் சிஸ்டமும் அக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சொகுசு அம்சங்களும் இக்காரில் உள்ளன. எனவேதான் தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு இக்காரை விஜய் பயன்படுத்துகின்றார் என கூறப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5-series)
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் 5 சீரிஸ் கார் மாடலும் ஒன்று. இது செடான் ரக காராகும். பன்முக சொகுசு வசதிகள் மற்றும் ராயலான பயண அனுபவத்தை வழங்க சிறப்பு வசதிகளையும் இக்காரில் பிஎம்டபிள்யூ வழங்கியிருக்கின்றது. எனவேதான் தொழிலதிபர்கள் இக்காருக்கு மிகப் பெரிய ஃபேனாக இருக்கின்றனர்.

அந்தவகையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இந்த காரின் ஃபேனஸாக இருக்கின்றார். விஜய் வைத்திருக்கும் 5 சீரிஸ் சொகுசு செடானின் விலை ரூ. 65 லட்சம் அதிகம் இருக்கும் என கூறப்படுகின்றது. விஜய் மட்டுமின்றி இன்னும் பல திரை பிரபலங்கள் இக்காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர்.

வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC 90)
பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி கார் மாடலாக வால்வோ எக்ஸ்சி 90 காட்சியளிக்கின்றது. இக்கார் அதிக இடவசதியைக் கொண்டது மட்டுமல்ல அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதும்கூட. இதுமட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களும் மிக தாரளமாக வழங்கப்பட்டுள்ளன. எனவே இதன் விலையும் சற்று அதிகம். ரூ. 85 லட்சமாக வால்வோ எக்ஸ்சி90 இருக்கின்றது.

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover)
புதிய தலைமுறையினரை கவர்ந்த வாகனமாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் மாடல் இருக்கின்றது. இந்த காரின் மதிப்பு ரூ. 65 லட்சம் ஆகும். இக்காரையே விஜய் தனது சொகுசு கார் பயணங்களுக்கு பயன்படுத்தி வருகின்றார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள் மற்றும் நடிகர்கள் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், விஜய தேவர கொண்டாவும் இக்காரை பயன்படுத்தி வருகின்றார்.

பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அதிகளவில் வைத்திருப்பார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். இதற்கு விஜய்தேவரகொண்டாவும் விதிவிலக்கு அல்ல என்பது அவரது கார் கலெக்ஸனை பார்த்தாலே நமக்கு எளிதாக புரிகிறது.


Click it and Unblock the Notifications








