விஜய் தனது பீஸ்ட் பட குழுவை ஒரு ரவுண்டு கூட்டி போன ரோல்ஸ் ராய்ஸ் காரோட விலை இவ்வளவா... தலையே சுத்துது!!
பீஸ்ட் பட குழு ஒரு ரவுண்டு போன ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரின் சிறப்பு வசதிகள் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை காணலாம், வாங்க.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான திரை நட்சத்திரங்களில் நம்ம இளைய தளபதி விஜயும் ஒருவர். இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் நாளை (ஏப்ரல் 13) முதல் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டிக்கெட் புக்கிங் தற்போது சூடுபிடித்துக் காணப்படுகின்றது.

பல தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காத நிலை தென்படுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர். ஒரு சில தீவிர ஃபேன்கள் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்டு, போலீஸாரிடத்தில் லத்தி சார்ஜையும் பெற்று கலைந்து சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயும் அவரது பீஸ்ட் பட குழுவினரும் விஜய்க்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரில் ஓர் ஜாலி ரவுண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த ஜாலி ரவுண்டில் இயக்குநர் நெல்சன், நடிகை பூஜா ஹெக்டே, முத்துராஜ், சத்திஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கின்றனர்.

விஜய் காரை இயக்க அவருக்கு அருகில் நடிகர் சத்திஷும், பின்னிருக்கையில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பிற பீஸ்ட் குழுவினர் அமர்ந்திருந்தனர். இவர்களுடனேயே ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்னையை ஓர் ரவுண்டு அடித்திருக்கின்றார் நடிகர் விஜய். இவர்கள் பயணித்த இந்த ரோல்ஸ் ராய்ஸ் அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட லக்சூரி காராகும்.

இதன் விலையும் பல மடங்கு அதிகம். இவைகுறித்த முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பிரத்யேகமாக நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நடிகர் விஜய் பயன்படுத்தி வருவது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் மாடலாகும். இந்த காரை அவர் 2012ம் ஆண்டிலேயே வாங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. அப்போதே 3.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக் கொடுத்து அக்கார் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பிரத்யேகமாக இச்சொகுசு காரை இங்கிலாந்து நாட்டில் இருந்து விஜய் இறக்குமதி செய்திருக்கின்றனர். ஆகையால், இன்னும் பல மடங்கு அதிக விலைக் கொண்டதாக விஜய் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காட்சியளிக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) காரில் 6.6 லிட்டர் வி12 ரக எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 570 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறனை வெளிப்படுத்தும் காராகவே கோஸ்ட் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இன்னும் பல்வேறு லக்சூரி அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இக்காரில் பயணிக்கும்போது நாம் காருக்குள் பயணிக்கின்ற அனுபவமே இருக்காது. மாறாக, உல்லாச கப்பலில் இருப்பதைப் போன்ற அனுபவமே கிடைக்கும். பள்ளம், மேடு மற்றும் கரடு-முரடான பாதைகளில் சென்றால் கூட அவைகளினால் ஏற்படும் அதிர்வுகள் இக்காரில் தெரியவே தெரியாது.

இந்த அம்சத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் கொண்டிருக்கின்றன. எனவேதான் செல்வந்தர்கள் பலரின் மிக விருப்பமான காராக ரோல்ஸ் ராய்ஸ் இருக்கின்றது. சொகுசான பயண அனுபவத்துடன் சேர்த்து வீட்டிற்குள் அனுபவத்தையும் இந்த கார் வழங்கும்.

அதாவது, இக்காரில் மினி கூலர் குளிர்பானங்களை சில்லுனு வைத்திருப்பதற்காகவும், ஷேம்பைன் பாட்டில் ஹோல்டர் மற்றும் குவளைகள் தாங்கிகள் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். இதுபோன்று இன்னும் பல எண்ணிலடங்கா சொகுசு வசதிகளைக் கொண்டதாக நடிகர் விஜய் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இருக்கின்றது.

இந்த கார் மட்டுமில்லைங்க இன்னும் பல சொகுசு கார்கள் நடிகர் விஜய் இடத்தில் உள்ளது. ஆடி ஏ8, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6, மினி கூப்பர் எஸ் உள்ளிட்ட சூப்பரான லக்சூரி கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன. இந்த கார் மாடல்கள் ஒவ்வொன்றும்கூட பல லட்சம் விலைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








