இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் 3,672 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெறும் 2,025 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 81.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அசத்தியுள்ளது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சந்தை பங்கு 1.1 சதவீதம் ஆகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இது வெறும் 0.6 சதவீதம் மட்டுமே. கார்களின் விற்பனை அதிகரிப்பால், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் சந்தை பங்கு 0.5 சதவீதம் உயர்ந்து, 1.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் கார் என்ற பெருமையை ஃபோக்ஸ்வேகன் டைகுன் பெற்றுள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2,380 டைகுன் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட முடியாது. நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் கார்களின் பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் போலோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

இது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். நடப்பாண்டு மார்ச் மாதம் 1,086 போலோ கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 1,888 ஆக இருந்தது. இது 42 சதவீத வீழ்ச்சியாகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையை விட்டு விடைபெறவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் வெண்ட்டோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 175 வெண்ட்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 137 ஆக இருந்தது. இது 28 சதவீத வளர்ச்சியாகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெண்ட்டோ காருக்கு பதிலாக வெகு விரைவில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய மிட்-சைஸ் செடான் ரக கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் நான்காவது மற்றும் கடைசி இடத்தை ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 31 டிகுவான் கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஏனெனில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக கடந்த 2020ம் ஆண்டே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவான் காரை விற்பனையில் இருந்து விலக்கி விட்டது. அதன்பின் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டிகுவான் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் விற்பனையில் இல்லை என்பதால், அந்த மாதத்துடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட இயலாது. ஃபோக்ஸ்வேகன் மற்றும் அதன் குழுமத்தை சேர்ந்த ஸ்கோடா ஆகிய 2 நிறுவனங்களும் தற்போது இந்திய சந்தையில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டுள்ளன.

இந்திய சந்தையை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கிடுகிடு!

எனவே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை போலவே, ஸ்கோடா நிறுவனமும் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஸ்கோடா நிறுவனம் குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஸ்லாவியா மிட்-சைஸ் செடான் ஆகிய 2 கார்களை இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், விர்டுஸ் மிட்-சைஸ் செடான் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 27, 2022, 22:00 [IST]
English summary
Volkswagen india model wise sales report march 2022 taigun leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+