பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

பிரியாவிடை பெறவுள்ள ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் லெஜெண்ட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) காரின் உற்பத்தி கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உற்பத்தி செய்த முதல் கார் இதுதான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

மஹாராஷ்டிர மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சஹான் தொழிற்சாலையில் முதல் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உற்பத்தி செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் போலோ காரானது, பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த செக்மெண்ட்டில் 2 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்ட முதல் 'மேட் இன் இந்தியா' பிரீமியம் ஹேட்ச்பேக் என்ற பெருமை ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு உள்ளது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

இன்று நாம் அனைவரும் கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் பற்றி அதிகமாக பேசி கொண்டுள்ளோம். இது தொடர்பான விழிப்புணர்வுகள் தற்போதுதான் அதிகரித்துள்ளன. ஆனால் கடந்த 2014ம் ஆண்டிலேயே, குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், ஃபோக்ஸ்வேகன் போலோ கார் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று விட்டது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கொண்டாடும் விதமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் போலோ காரின் லெஜெண்ட் எடிசனை (Legend Edition) தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஜிடி டிஎஸ்ஐ வேரியண்ட் (GT TSI Variant) அடிப்படையில், இந்த புதிய லெஜெண்ட் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்மில் 109 பிஹெச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்மில் 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் போலோ லெஜெண்ட் எடிசனின் பக்கவாட்டு பகுதியில், பாடி கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபோக்ஸ்வேகன் போலோ லெஜெண்ட் எடிசனை ஸ்போர்ட்டியாக காட்டுகிறது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

அத்துடன் ஃபெண்டர் (Fender) மற்றும் பூட் (Boot) பகுதியில், லெஜெண்ட் எடிசன் பேட்ஜ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர்த்து விட்டு பார்த்தால், வழக்கமான ஜிடி டிஎஸ்ஐ வேரியண்ட்டின் டிசைன் அம்சங்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஃபோக்ஸ்வேகன் போலோ லெஜெண்ட் எடிசன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் (700) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் போலோ காரை விற்பனையில் இருந்து விலக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெறவுள்ளது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் போலோ காரின் உற்பத்தியை நிறுத்த தற்போது தயாராகி விட்டது. பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் 'லெஜெண்ட்' என்று பெயரெடுத்த போலோ காருக்கு, சிறப்பான பிரியாவிடையை அளிக்கும் வகையிலும், இந்த காரை கௌரவிக்கும் வகையிலும், லெஜெண்ட் எடிசனை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ வேரியண்ட் விற்பனை செய்யப்படும் அதே விலையில், இந்த லெஜெண்ட் எடிசனும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10.25 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே இந்த லெஜெண்ட் எடிசனை வாங்க முடியும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்ததாக விர்டுஸ் (Volkswagen Virtus) என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் உள்ளிட்ட கார்களுடன், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் போட்டியிடும்.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

இந்தியாவில் விர்டுஸ் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. சமீபத்தில்தான் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து கூடிய விரைவில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

வரும் மே மாதம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த டைகுன் (Volkswagen Taigun) காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரை, பிரபலங்களும் வாங்கி வருகின்றனர்.

பிரியாவிடை பெறுகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ... 'லெஜெண்ட் எடிசன்' அறிமுகம்... 700 பேருக்கு மட்டுமே கிடைக்கும்!

இதில் பிரபல இளம் நடிகை கௌரி கிஷன் முக்கியமானவர். '96' திரைப்படத்தில் நடித்திருந்த இவர், சமீபத்தில்தான் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை டெலிவரி எடுத்தார். கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு ஃபோக்ஸ்வேகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி கார் விற்பனையில் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 4, 2022, 13:41 [IST]
English summary
Volkswagen polo legend edition launched here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+