12 ஆண்டு கால சகாப்தத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

12 ஆண்டு காலமாக விற்பனையில் இருந்து வரும் போலோ (Polo) காரை நாட்டை விற்பனையில் இருந்து அகற்ற ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் போலோ (Polo) கார் உற்பத்தியைத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. மஹாராஷ்டிரா மாநிலம் சக்கன் உற்பத்தி ஆலையில் வைத்தே இக்காரின் உற்பத்தி பணிகளை ஃபோக்ஸ்வேகன் மேற்கொண்டு வருகின்றது. இந்த பணிக்கே நிறுவனம் விரைவில் முற்று புள்ளி வைக்க திட்டமிட்டிருக்கின்றது.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

2010ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ காரின் உற்பத்தி பணிகளைத் தொடங்கியது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைத்த பின்னர், அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் மாடல் இதுவே ஆகும். இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இதுவரை 2.5 லட்சம் யூனிட் போலோ கார்கள் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன. இது பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு இந்தியாவில் கிடைத்த சிறப்பான வரவேற்பைக் குறிக்கின்றது.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

விற்பனைக்கு வந்த புதிதில் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே இக்கார் கண்டு வந்திருக்கின்றது. ஆனால், இப்போது அவ்வாறு இல்லை. ஆம், புதுமுகங்களின் வருகையால் போலோ காருக்கு கிடைத்து வந்த வரவேற்பு பல மடங்கு சரிந்துக் காணப்படுகின்றது. இதனாலயே இக்காரின் உற்பத்தி பணிக்கு முற்று புள்ளி வைக்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

அதேவேலையில், மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் விர்சுஸ் காரின் வருகையும் இக்காரின் வெளியேற்றத்திற்கு ஓர் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக விரைவில் ஃபோக்ஸ்வேகன் இக்காரை உலகளவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. இதன் வருகை வெண்டோ காருக்கும் ஆப்பு வைக்கும் அமைந்திருக்கின்றது. போலோ, வெண்டோ இவை இரண்டுமே நிறுவனத்தின் மிகவும் பழைய மாடல்களாக காட்சியளிக்கின்றன. தோராயமாக மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்டுகளே இவை விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

ஃபோக்ஸ்வேகன் 2018ம் ஆண்டிலேயே போலோ-வின் ஆறாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், இந்தியாவில் தற்போதும் ஐந்தாம் தலைமுறை போலோவே விற்பனையில் இருந்து வருகின்றது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக இது விற்பனையில் இருக்கின்றது. இதுவும் விற்பனைக்கு குறைவதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. அதேவேலையில் இந்த தகவல் போலோ கார் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

ஃபோக்ஸ்வேகன் போலோ கடந்து வந்த பாதை:

மார்ச் 2010:

போலோ முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமாகிய ஆண்டு 2010 ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வந்தது. இந்த எஞ்ஜின் மிக சிறப்பானவை ஆகும். இத்துடன், அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட காராகவும் அது களமிறங்கியது.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

செப்டம்பர் 2010:

கார் பிரியர்களைக் கவரும் வகையில் இரு மோட்டார் தேர்வுகளுடன் 1.6 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் எஞ்ஜின் தேர்வு செப்டம்பர் 2010 இல் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 2013:

பின்னர், ஏப்ரல் 2013 இல் 1.6 லிட்டர் பெட்ரோல் டீசல், உயர் தொழில்நுட்பங்கள் வாயிலாக ரீ-பிளேஸ் செய்யப்பட்டது. டைரக்ட் இன்ஜெக்சன் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் குயிக் ஷிஃப்டிங் ட்யூவல் க்ளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்ட 1.6 மோட்டார் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ஜிடி டிஎஸ்ஐ என்ற பெயரில் விற்பனைக்கு வழங்கியது ஃபோக்ஸ்வேகன்.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

செப்டம்பர் 2013:

போலோவின் உருவ அம்சங்களுடன் வெண்டோ 1.6 டிடிஐ டீசல் எஞ்ஜின் செப்டம்பர் 2013இல் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜூலை 2014:

1.2 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்ஜின்கள் இரண்டையும் ரீ-பிளேஸ் செய்யும் விதமாக 1.5 டிடிஐ இரு வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டுடன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. 90 பிஎச்பி மற்றும் 105 பிஎச்பி ஆகிய மாறுபட்ட திறன் வெளிப்பாட்டு அம்சங்களுடனேயே அது விற்பனைக்குக் கிடைத்தது.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

நவம்பர் 2016

மூன்று கதவுகள் கொண்ட ஜிடிஐ பேட்ஜ் கொண்ட போலோ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இதில், 192 எச்பி பவர் கொண்ட 1.8 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இக்கார் விற்பனைக்கு வழங்கப்பட்டது. இதனை சிபியூ வாயிலாக இறக்குமதி செய்து ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு வழங்கியது.

12 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட ஃபோக்ஸ்வேகன் திட்டம்... போலோ காரின் உற்பத்திக்கு விரைவில் முடிவு!

மார்ச் 2020

நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு காரணமாக புதிய மூன்று சிலிண்டர் 1.0 லிட்டர் எஞ்ஜினை விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதேவேலையில் புதிய விதிகள் காரணமாக டிடிஐ டீசல் எஞ்ஜினை வெளியேற்றியது.

2022

இந்த நிலையிலேயே ஒட்டுமொத்தமாக தற்போது போலோ காரின் உற்பத்தி பணிகளை நிறுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 22, 2022, 19:19 [IST]
English summary
Volkswagen polo production going to end soon in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+