மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மாருதி சுசுகி சியாஸ் செடான் காருக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய விர்சுஸ் (Volkswagen Virtus) செடான் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்சுஸ் (Volkswagen Virtus) எனும் புதுமுக மிட்-சைஸ் செடான் ரக காரை வெளியீடு செய்துள்ளது. அண்மையில் அறிமுகமான ஸ்கோடா ஸ்லாவியா காரின் சிறப்பம்சங்களைத் தழுவிய ஓர் வாகனமாகவே இந்த விர்சுஸ் காரை ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியிருக்கின்றது. இக்காரின் வருகை வெண்டோ கார் மாடலை ரீபிளேஸ் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

ஏற்கனவே இந்தியாவில் மிட்-சைஸ் செடான் ரக கார் பிரிவில் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா உள்ளிட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இவற்றின் வரிசையில் இணைந்து, அவற்றிற்கு கூடுதலாக போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது, புதிய விர்சுஸ் கார்.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

இந்தியாவில் செடான் ரக கார்களைக் காட்டிலும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழலை புதிய விர்சுஸ் எப்படி கையாள இருக்கின்றது என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. அதேவேலையில், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் வாயிலாக இக்கார் மக்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகின்றது.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

2022 ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரை அலங்கரிக்கும் வகையில் எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப் 'L' வடிவ எல்இடி டிஆர்எல்-களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், குரோம் பூச்சு ஹைலைட்டுகளுடன் சிங்கிள் ஸ்லேட் ரக க்ரில், பனி மின் விளக்குடன் கூடிய ஏர் டேம், கருப்பு நிற ஓஆர்விஎம்-கள் உள்ளிட்டவையும் விர்சுஸ் காரின் கவர்ச்சியைக் கூட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

இதுமட்டுமின்றி, அலாய் வீல்கள், ஜிடி லைன் பேட்ஜ், குரோம் பூச்சுக் கொண்ட ஹேண்டில்கள், சுறா மீனின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா, வால் பகுதியில் மின் விளக்குகள், பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் ஆறு விதமான நிற தேர்வு உள்ளிட்டவற்றுடனும் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் கார் காட்சியளிக்கின்றது.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

இந்த காரின் வெளிப்புறம் மட்டுமில்லைங்க உட்புறமும் மிகவும் அசத்தலானதாக இருக்கின்றது. பயண பிரியர்களை ஈர்க்கும் வகையில் 10 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒயர்லெஸ் சார்ஜர், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் விர்சுஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

இதில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் சிறப்பு வசதியாக ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பன்முக சிறப்பம்சங்களுடனேயே விர்சுஸ் கார் தற்போது வெளியீட்டைப் பெற்றிருக்கின்றது. மிக விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தையும் அது பெற இருக்கின்றது.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

எஞ்ஜினை பொருத்த வரை விர்சுஸ் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளில் கிடைக்க இருக்கினறது. இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினானது அதிகபட்சமாக 114 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினானது 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இரு மோட்டார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழக்கமான அம்சமாக வழங்கப்பட இருக்கின்றது. அதேவேலையில் 6 ஸ்பீடு டாரக் கன்வெர்டர் தானியங்கி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி யூனிட்டுகள் ஆப்ஷனாக வழங்கப்பட இருக்கின்றது.

மாருதி சியாஸ் காருக்கு ஆப்பு வைக்க ஃபோக்ஸ்வேகன் தயார்... இதோ வெளியீட்டை பெற்றது விர்சுஸ் புதுமுக செடான் கார்!

இதுமட்டுமின்றி, கூடுதல் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குகின்ற வகையில் 40 வகையான பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. மிக முக்கியமாக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மல்டி கொள்ளிசன் பிரேக், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் டிஃப்ளேஷன் வார்னிங், சைடு இம்பேக்ட் புரடெக்ஷன் பீம் டூர்கள், இம்பேக்ட் அப்சார்பிங் பாடி என பன்முக அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 8, 2022, 12:50 [IST]
English summary
Volkswagen unveiled mid size sedan virtus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+