புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் மாடலின் டாப்-வேரியண்ட்டாக கொண்டுவரப்பட உள்ள ஜிடி லைன் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

உலகளவில் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து அடுத்ததாக நடுத்தர-அளவு செடான் காராக விர்டுஸ் வெளியீடு செய்யப்பட உள்ளது. இதன்படி உலகளவில் வருகிற மார்ச் 8ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ள விர்டுஸ் ஆனது தற்போதைய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் மாடலின் அடுத்த தலைமுறையாக கொண்டுவரப்பட உள்ளது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

இதனால் சர்வதேச நாட்டு சந்தைகள் பலவற்றில் வெண்டோ கார்களின் விற்பனையை நிறுத்தி கொள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாராகி வருகிறது. வெண்டோவின் தயாரிப்பு & விற்பனை நிறுத்தம் நடப்பு 2022ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விர்டுஸை உலகளவில் பிரபலப்படுத்தும் முயற்சிகளிலும் ஃபோக்ஸ்வேகன் ஈடுப்பட்டு வருகிறது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

இந்த வகையில் விர்டுஸ் காரின் டீசர் படங்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும், விர்டுஸ் டாப் ஜிடி லைன் வேரியண்ட் தொடர்பான டீசர் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் புதிய விர்டுஸ் காரின் எல்இடி ஹெட்லேம்ப்கள், L-வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் ஒளிர்வதுபோல் காட்டப்பட்டுள்ளதால், அவற்றின் வடிவத்தினை தெளிவாக காண முடிகிறது. முன்பக்கத்தில் இந்த கார் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட, அளவில் பெரிய க்ரில் அமைப்பை கொண்டுள்ளது. வேரியண்ட்டின் பெயரை காட்டும் வகையில் முன்பக்க பம்பரில் ஜிடி லைன் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

பக்கவாட்டில் கருப்பு நிற B-பில்லர்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, பளிச்சிடும் நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் & மேற்கூரை மற்றும் புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை நம்மை வசீகரிக்கின்றன. இந்த காரில், பின்பக்கத்தில் நம்பர் ப்ளேட் பொருத்தும் பகுதி பின்கதவில் வழங்கப்பட உள்ளதை மேலுள்ள புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

மற்றப்படி புதிய விர்டுஸ் நடுத்தர-அளவு செடான் காரின் உட்புற கேபின் இந்த வீடியோவில் காட்டப்படவில்லை. ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா செடான் வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட அதே எம்க்யூபி-ஏ0-இன் (இந்தியா) இயக்குத்தளத்தின் அடிப்படையில்தான் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

இந்திய சந்தையில் தனது 2வது இன்னிங்ஸாக ஃபோக்ஸ்வேகன் க்ரூப் இந்தியா 2.0 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக, முழுக்க முழுக்க இந்திய சந்தைக்கும், இந்திய வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டதே புதிய எம்க்யூபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரம் ஆகும். இதில் வடிவமைக்கப்பட்ட முதல் காராக ஸ்கோடா குஷாக் கடந்த 2021ஆம் ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகனின் டைகுன் எஸ்யூவி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் காராக ஸ்லாவியா மிக விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. கிட்டத்தட்ட ஸ்லாவியா மாதிரியான புதிய செடான் கார் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்தும் களமிறக்கப்பட உள்ளது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

இதனால் ஸ்லாவியாவில் இருந்து பெரும்பான்மையான அம்சங்களையும், உடற் பாகங்களையும் பெற்றுவரவுள்ள விர்டுஸ் மாடலை "புதிய உலக செடான்" என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அழைக்கிறது. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் அதன் சர்வதேச விர்டுஸ் மாடலையே பெரிதும் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரின் நீளம் 4,482மிமீ, அகலம் 1,751மிமீ மற்றும் உயரம் 1,472மிமீ ஆக உள்ளது.

புதிய விர்டுஸ் செடானின் டாப் வேரியண்ட் இப்படித்தான் இருக்கும்!! டீசரின் மூலம் வெளிக்காட்டிய ஃபோக்ஸ்வேகன்!

இது தற்போதைய வெண்டோ உடன் ஒப்பிடுகையில் 92மிமீ நீளமானது, 52மிமீ அகலமானது மற்றும் 5மிமீ உயரமானது ஆகும். அதேபோல், வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் வெண்டோவை காட்டிலும் புதிய விர்டுஸில் ஏறக்குறைய 100மிமீ அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் காரின் வீல்பேஸ் நீளம் 2,553மிமீ ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 26, 2022, 7:31 [IST]
English summary
Volkswagen virtus gt line top variant teased ahead of 2022 march 8 launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+