சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் விர்டுஸ் (Volkswagen Virtus) காரின் அறிமுக நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தற்போது ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. இதன்படி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்தியாவில் வரும் ஜூன் 9ம் தேதி (June 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது மிட்-சைஸ் செடான் (Mid-size sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அத்துடன் இந்தியாவில் இந்த காரின் உற்பத்தி பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்களில், விர்டுஸ் செடான் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் கூட தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இந்த கார் இன்னும் விற்பனைக்கு வருவது மட்டும்தான் பாக்கி. முன்னதாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரும் ஜூன் 9ம் தேதி இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இந்தியாவில் இருந்து 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) காருக்கும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும் இரண்டாவது ஃபோக்ஸ்வேகன் கார் என்ற பெருமையை விர்டுஸ் பெறுகிறது. முன்னதாக தற்போது மாதந்தோறும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார், இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருந்தது.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இந்தியாவின் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில், ஹோண்டா சிட்டி (Honda City), ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களுடன் ஸ்கோடா ஸ்லாவியா காருடனும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் போட்டியிடும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில், 2 டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும்.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இதன்படி 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் பெற்றுள்ளது. இதே இன்ஜின் தேர்வுகள்தான் ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவர் மற்றும் 175 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். வசதிகளை பொறுத்தவரையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் காரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இதுதவிர பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்களுடன் கூடிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் சார்ஜர், முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் கார் பெற்றிருக்கும்.

சீக்கிரம் கொண்டு வாங்க... இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் அறிமுக தேதி அறிவிப்பு! லான்ச் எப்போனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் திகழ்கிறது. இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வெண்ட்டோ (Volkswagen Vento) காருக்கு மாற்றாக, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 12, 2022, 17:04 [IST]
English summary
Volkswagen virtus midsize sedan india launch date announced
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+