விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார் தொடர்பான புதிய டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் அதன் புதிய நடுத்தர-அளவு செடான் காராக விர்டுஸ் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் தான் தற்போது இந்த செடான் கார் தொடர்பான டீசரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

இந்த டீசர் படத்தில் புதிய விர்டுஸ் காரின் வெளிப்புற தோற்றம் முழுவதுமாக காட்டப்படவில்லை. பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடி மற்றும் மேற்கூரையின் ஒரு பகுதி என விர்டுஸின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த டீசர் படத்தில், 'முடுக்கத்திற்கு அர்த்தம் உற்சாகமா?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

இதற்கு முன்னர், "புதிய உலகளாவிய செடான்" (The New Global Sedan) என்ற தலைப்பிலும் விர்டுஸின் புதிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அந்த படத்தில் புதிய விர்டுஸ் காரின் பக்கவாட்டு பகுதி காட்டப்பட்டு இருந்தது. இதன் மூலமாக இந்த காரின் முன்பக்க ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்-களையும், புதிய வடிவில் முன் பம்பரையும் பார்க்க முடிந்தது. மேலும் காரின் பக்கவாட்டின் முன்பகுதியும் அந்த டீசர் படத்தில் காட்சியளித்து இருந்தது.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கே உண்டான பருமனான முன்பக்க பொனெட் விர்டுஸ் மாடலில் வெகுவாக தாழ்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனருக்கு கூடுதல் விசாலமான பார்வை கிடைக்கும். புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார் உலகளவில் வருகிற 2022 மார்ச் 8ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ளது. ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய 5-இருக்கை செடான் கார் ஏற்கனவே தென் அமெரிக்க நாடுகளில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

இந்திய சந்தையில் வருகிற மார்ச் மாதத்தின் 3வது வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள விர்டுஸ் செடான் அதன்பின்பே லத்தீன் அமெரிக்க நாடுகளில் நுழையவுள்ளது. ஃபோக்ஸ்வேகனும், ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் கூட்டணியில் உள்ளது உலகறிந்த விஷயம். ஆதலால் இதேபோல் ஸ்கோடா பிராண்டில் இருந்து களமிறக்கப்பட உள்ள ஸ்லாவியா மாடலில் இருந்து பெரும்பான்மையான ஒற்றுமைகளை விர்டுஸ் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

ஏனெனில் ஸ்கோடா ஸ்லாவியாவும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலும் கூட்டணியில் உருவாக்கப்பட்ட எக்யூபி ஏ0 இந்தியா இயக்குத்தளத்தில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டன. இந்த புதிய இயக்குத்தளம் ஆனது ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ கூட்டணி நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

இந்தியா 2.0 திட்டத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையினை இந்த கூட்டணி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடனான ஸ்லாவியா செடான் காரின் விற்பனை வருகிற பிப்.28ஆம் தேதி துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடனான ஸ்லாவியா கார்கள் மார்ச் 3இல் இருந்து விற்பனையை துவங்க உள்ளன.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

ஸ்கோடாவின் செடான் காராக இருந்த ராபிட்டிற்கு மாற்றாக ஸ்லாவியா கொண்டுவரப்படுகிறது. அதேபோல், ஃபோக்ஸ்வேகன் வரிசையில் வெண்டோவின் இடத்தை மாற்றிக்கொள்ளும் விதத்தில் விர்டுஸ் கொண்டுவரப்படுகிறது. எம்க்யூபி ஏ0 இந்தியா ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்கள் அனைத்தும் வழக்கத்தை காட்டிலும் அளவில் பெரியதானவைகளாக வெளிவருகின்றன.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

இதனால் தற்போதைய வெண்டோ செடான் காரை காட்டிலும் புதிய விர்டுஸ் எல்லா பரிமாண அளவுகளிலும் அதிகமானதாக இருக்கும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகரித்தால் உட்புறத்தில் கூடுதல் இடவசதி கிடைக்கும். ஸ்லாவியாவை போல், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலின் சோதனை மாதிரிகளும் கடந்த சில மாதங்களில் அவ்வப்போது பொது சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விர்டுஸ் செடான் காரை அறிமுகப்படுத்த ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்!! ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு அடுத்து இதுதானா?

ஸ்கோடா ஸ்லாவியா மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் நடுத்தர அளவு செடான் காருக்கு ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸுகி சியாஸ் உள்ளிட்டவையும் விற்பனையில் போட்டியாக விளங்கக்கூடும். தோற்றத்தை பொறுத்தவரையில், விர்டுஸ் செடான் மாடல் ஃபோக்ஸ்வேகனின் சமீபத்திய இந்திய அறிமுகங்களான டைகுன் மற்றும் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் காரில் இருந்து முன்பக்க ஸ்டைலினை பெற்றுள்ளது.இந்த வகையில் க்ரோம் ஹைலைட்களை விர்டுஸின் முன்பக்கத்தில் எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 20, 2022, 8:30 [IST]
English summary
Volkswagen Virtus New Teaser.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+