ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் சமீபத்தில்தான் புனேவில் உள்ள சாகான் தொழிற்சாலையில் அதன் புதிய விர்டுஸ் செடான் காரின் தயாரிப்பு பணிகளை துவங்கியது. இந்த நிலையில் தற்போது ஃபோக்ஸ்வேகன் விர்டுஸின் விளம்பர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் புதிய பிரீமியம் ரக செடான் காராக விர்டுஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் வெண்டோ செடான் காருக்கு போட்டியாக கொண்டுவரப்படும் இதன் அதிகாரப்பூர்வ விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

ஏனெனில் மிக சமீபத்தில்தான் விர்டுஸ் கார்களின் தயாரிப்பு பணிகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் துவங்கியது. இதன்பின்னரே எக்ஸ்-ஷோரூம் விலைகள் வெளியிடப்படும். இதற்கிடையில்தான் தற்போது புதிய விர்டுஸ் செடான் காரின் புதிய டிவிசி (தொலைக்காட்சி கமர்ஷியல்) வீடியோவினை ஃபோக்ஸ்வே

இந்த வீடியோவில் புனே சாகான் தொழிற்சாலை எவ்வாறு உள்ளது என்பதும், இங்கு விர்டுஸ் கார் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதும் சில நொடிகள் கிளிம்ப்சாக காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தொழிற்சாலையில் உள்ள ரோபோ கைகள், அசெம்பிள் லைன் மற்றும் ஒவ்வொரு நிலையிலும் பணியாளர்களின் சோதனைகளை காண முடிகிறது. இந்தியாவிற்கான வெளிநாட்டு பிராண்ட்களின் கார்கள் சற்று தரம் குறைந்தவையாக இருப்பதாக பொதுவாகவே ஒரு கருத்து உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

இதனை தவிர்க்கும் வகையிலும், இந்தியாவிற்கான விர்டுஸ் கார்கள் எந்த அளவிற்கு எந்தவொரு சமரசமுமின்றி தயாரிக்கப்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டும் வகையிலும் இந்த வீடியோவினை ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் கூட்டணியில் உருவான இந்தியா 2.0 திட்டத்தில் வெளிவந்துள்ள 2வது ஃபோக்ஸ்வேகன் தயாரிப்பாக விர்டுஸ் விளங்குகிறது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

முன்னதாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி மாடல் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. விர்டுஸை போன்று, ஸ்கோடா பிராண்டில் இருந்தும் புதிய செடான் காராக ஸ்லாவியா கடந்த மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்கோடா ஸ்லாவியா & ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் என இரு செடான் மாடல்களும் ஏகப்பட்ட பாகங்களை ஒன்றுடன் ஒன்று பகிர்ந்து கொண்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

இருப்பினும் தோற்றத்திற்கு வரும்போது, பிராண்ட்களை வேறுப்படுத்தி காட்டும் விதமாக வெவ்வேறான ஸ்டைலில் தோற்றத்தினை இவை கொண்டுள்ளன. விர்டுஸை பொறுத்தவரையில், இது பக்கா ஃபோக்ஸ்வேகன் காருக்கு உண்டான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் க்ரோம் அவுட்லைன்களுடன் பிரீமியம் தரத்திலான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

சமீபத்திய மற்ற மாடர்ன் ஃபோக்ஸ்வேகன் கார்களை போன்று, விர்டுஸிலும் ஹெட்லேம்ப்கள் க்ரில்லின் நீட்டிப்புகள்போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப் அமைப்பில் பிரோஜெக்டர் எல்இடி யூனிட்கள், எல்இடி டிஆர்எல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. எல்இடி ஃபாக் விளக்குகள் முன்பக்க பம்பருக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் முழு-எல்இடி டெயில்லேம்ப்களை விர்டுஸ் கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

அலாய் சக்கரங்கள் இரட்டை-நிறத்தில் இருக்க, மேற்கூரை ஆனது பின்பக்கத்தில் சரிவதை போன்று வழங்கப்பட்டுள்ளது. விர்டுஸின் பிரீமியம் தரத்திலான கேபினில் லெதர் உள்ளமைவு, சூடான காற்றை வழங்கக்கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு புஷ் பொத்தான் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

இதன் டேஸ்போர்டில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர் இல்லா போன் சார்ஜர், கூல்டு க்ளோவ் பாக்ஸ் போன்றவற்றையும் பார்க்க முடிகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில்-ஹோல்ட், டயர் பழுதாக உள்ளதை எச்சரிப்பான், எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக், காரை சுற்றிலும் எந்தவொரு இடத்திலும் மோதல் ஏற்பட்டாலும் அவசரகால பிரேக் மற்றும் டாப் வேரியண்ட்களில் 6 காற்றுப்பைகள் உள்ளிட்டவற்றை இந்த செடானில் ஃபோக்ஸ்வேகன் வழங்கியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடானின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! தொழிற்சாலையில் இப்படிதான் தயாராகிறதா?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஸ்கோடா ஸ்லாவியாவை போல் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸிலும் இரு டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிலையான தேர்வாக வழங்கப்பட, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கூடுதல் தேர்வாக கொடுக்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2022, 11:59 [IST]
English summary
Volkswagen virtus new tvc shows production line of company chakan plant details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+