இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரின் உற்பத்தி பணிகள், இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஸ்கோடா நிறுவனம் ரேபிட் (Skoda Rapid) காருக்கு பதிலாக, ஸ்லாவியா (Skoda Slavia) என்ற புதிய செடான் ரக காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதேபோல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் வெண்ட்டோ (Volkswagen Vento) காருக்கு பதிலாக விர்டுஸ் (Volkswagen Virtus) என்ற புதிய செடான் ரக காரை இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வெகு சமீபத்தில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கான முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய சந்தையில் வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் இந்த காரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த சூழலில், விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்பாக, விர்டுஸ் செடான் காரின் உற்பத்தி பணிகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

சஹான் பகுதியில் உள்ள ஆலையில்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார், இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளின் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய கார்கள் கட்டமைக்கப்பட்டுள்ள அதே MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரும் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்தான்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் வழங்கப்படும். இதில் சிறிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

மறுபக்கம் பெரிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இதில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், தற்போது பிரபலமாகி வரும் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி, பின் பகுதி பயணிகளுக்கும் ஏசி வெண்ட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இதுதவிர முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், கீலெஸ் எண்ட்ரி, மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் வழங்கப்படவுள்ளன.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) உள்ளிட்ட கார்களுக்கு ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனையில் மிக கடுமையான சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஸ்கோடா ஸ்லாவியா செடான் காருடனும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கியது... மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஸ்கோடா நிறுவனம் தனது புதிய குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஸ்லாவியா செடான் ஆகிய கார்களின் மூலமும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் விர்டுஸ் செடான் ஆகிய கார்களின் மூலமும் இந்திய சந்தையில் தங்களது விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 30, 2022, 17:48 [IST]
English summary
Volkswagen virtus sedan production commences in india launch in may 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+