ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

இந்தியாவின் எதிர்பார்ப்பாக மாசற்ற இயக்கம் இருக்கின்றது. இந்த விஷயத்தில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாக மைல்டு ஹைபிரிட் கார்களை வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக நான்கு கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எக்ஸ்சி 40 (XC40), எக்ஸ்சி 60 (XC60), எக்ஸ்சி 90 (XC90) ஆகிய எஸ்யூவி ரக கார் மாடல்களையும், எஸ் 90 (S90) எனும் செடான் ரக காரையுமே நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

இந்த கார் மாடல்களையே நிறுவனம் தற்போது புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு சிறப்பு வசதிகளை அனைத்து கார் மாடல்களிலும் வால்வே சேர்த்துள்ளது. குறிப்பாக மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அனைத்து மாடல்களிலும் நிறுவனம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

உலகமே மாசற்ற இயக்கத்தை நோக்கி நகர தொடங்கியிருக்கின்ற இந்த வேலையிலேயே தனது பங்களிப்பை வழங்கும் விதமாகவே வால்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதன் அனைத்து வாகன மாடல்களையும் மின்சார வெர்ஷனில் விற்பனைக்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே, நாட்டில் டீசல் கார் விற்பனையை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக அனைத்து கார் மாடல்களையும் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, வால்வோ நிறுவனம். இந்த கார் மாடல்களில் எக்ஸ்சி 40-க்கு மட்டும் சிறப்பு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 43.20 லட்சம் என்கிற விலையே அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

இந்த விலையில் இன்னும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே எக்ஸ்சி40 கிடைக்கும். சலுகை காலம் முடிவடைந்த பின்னர் ரூ. 45.90 லட்சம் என்கிற விலையில் விற்க்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் விழாக் காலங்களை முன்னிட்டு இந்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாடல்களின் விலை விபரம்:

  • எக்ஸ்சி 60 - விலை ரூ. 65.90 லட்சம்
  • எக்ஸ்சி 90 - விலை ரூ. 94.90 லட்சம்
  • எஸ்90 - விலை ரூ. 66.90 லட்சம்
  • அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் சேர்த்து கணிசமான சில புதிய அம்சங்கள் சேர்ப்பையும் வால்வோ செய்திருக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்சி 40 கார் மாடலில் புதிய வெளிப்புற தோற்றத்தை வழங்கும் விதமாக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட்டுகள், புதிய பம்பர்கள் மற்றும் சீரமைப்பு செய்யப்பட்ட க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    கூடுதலாக, சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, கூகுள் சேவைகள் சிலவற்றை இந்த திரையில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 14 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஹர்மன் கர்டோன் ஆடியோ சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பைலட் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட்குறித்து தகவல் வழங்கும் வசதி, பார்க் அசிஸ்ட் போன்ற மிக முக்கியமான அம்சங்களும் எக்ஸ்சி 40 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    எஞ்ஜினை பொருத்தவரை இந்த காரில் 2.0 லிட்டர் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 197 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனிலேயே இயங்குகின்றது.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    எக்ஸ்சி 40 காரில் இடம் பெற்றிருப்பதைப் போலவே பன்முக சிறப்பு தொழில்நுட்ப வதிகளைக் கொண்ட வாகனமாக எக்ஸ்சி60 காட்சியளிக்கின்றது. இந்த காரிலும் கணிசமான மாற்றங்களை புதுப்பித்தலின் அடிப்படையில் வால்வோ செய்திருக்கின்றது. புதிய ஹெட்லைட், புதிய பம்பர் மற்றும் க்ரில் உள்ளிட்டவையே ஃபேஸ்லிஃப்டின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்றன.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    இத்துடன், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரும் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்கும் இந்த மோட்டார் அதிகபட்சமாக 250 எச்பி மற்றும் 350 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரிலும் நவீன கால சிறப்பு கருவிகள் பல வழங்கப்பட்டிருக்கின்றன. ஏர் ப்யூரியஃபையர், மசாஜ் செய்யும் இருக்கைகள் போன்ற அம்சங்கள் பல இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    வால்வோ நிறுவனம் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் கார் மாடல்களிலேயே மிக அதிக விலைக் கொண்டதாக எக்ஸ்சி 90 இருக்கின்றது. இதன் விலைக்கு ஏற்பவே அதில் வழங்கப்பட்டிருக்கும் சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மிக அதிகமானதாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், 19 ஸ்பீக்கர் போவர்கள் கொண்ட வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹெட்ஸ்-அப் திரை, பனோரமிக் சன்ரூஃப், ஆன்ட்ராய்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    மோட்டாரைப் பொருத்தவரையில் இக்காரிலும் 2.0 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 300 எச்பி பவரையும், 420 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் எக்ஸ்சி90-இல் கூடுதல் சிறப்பு வசதியாக வழங்கப்படுகின்றன.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    வால்வோ எஸ் 90, நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் ஒரே ஒரு செடான் ரக கார் மாடல் இதுவாகும். அதிக சொகுசு வசதிகள் நிறைந்த செடான் கார்களை விரும்பும் செல்வந்தர்களைக் கவரும் பொருட்டு இக்காரை நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே நிறுவனம் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

    ஒரு கார் மாடலையும் விட்டு வைக்கல... எல்லாத்துலையும் மாற்றத்தை செஞ்சிட்டாங்க! எதிர்பார்த்தது நடந்திருச்சு!

    புதுப்பித்தலின் அடிப்படையில் இக்காரிலும் கணிசமாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இம்மோட்டார் அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷனே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo launches mild hybrid range petrol cars in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X