இந்தியாவை ஒரு கை பாக்க 28ல் அறிமுகமாகிறது டாடாவின் மலிவு விலை இ-கார்! இந்த காருல என்ன வசதிகளை எதிர்பாக்கலாம்!
டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படும் டாப் 5 முக்கிய அம்சங்கள் பற்றிய விபரத்தைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நடப்பாண்டு 'உலக மின் வாகன தினம்' மிக சிறந்த நாளாக இந்தியர்களுக்கு அமைய இருக்கின்றது. ஆம், இந்த தினத்தை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதுமுக மின்சார வாகனங்களையும், எதிர்கால மின்சார வாகனங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இந்திய உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் டியாகோ இவி (Tiago EV) எலெக்ட்ரிக் காரை வெகு விரைவில் வெளியீடு செய்ய இருக்கின்றது.

நிறுவனம் வரும் செப்டம்பர் 28ம் தேதியையே காரை வெளியீடு செய்ய குறித்து வைத்துள்ளது. அன்றைய தினத்திலேயே கார்குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னரே குறிப்பிட்ட சில அம்சங்கள் இந்த காரில் இடம் பெற இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. அந்தவகையில், புதிய டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் வழங்கி உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டிகோர் இவி-யை போன்றிருக்காது:
புதிய டியாகோ இவி எலெக்ட்ரிக் இந்திய சந்தையை மலிவு விலை எலெக்ட்ரிக் காராக கலக்க வரவிருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் டிகோர் இவி-யை போல் இது இருக்காது. மிக துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் டிகோர் இவி-யைக் காட்டிலும் சற்று குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக்கையே இந்த கார் பெற இருக்கின்றது.

இதன் உருவம் மற்றும் பூட் ஸ்பேஸ் சற்று சிறியது என்பதால் இதில் குறைவான பேட்டரி பேக்குகளை மட்டுமே நிலைநிறுத்த முடியும். ஆகையால், டியாகோ இவி ஒரு ஃபுல் சார்ஜில் 300 கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில், டாடா சர்ப்ரைஸை வழங்குவதற்கு பெயர்போன நிறுவனம் என்பதால் இதைவிட சற்று கூடுதல் ரேஞ்ஜ் திறன் கொண்ட காராகவும் இந்த வாகனத்தை டாடா விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசைன் மாற்றம்:
வழக்கமான டியாகோவைக் காட்டிலும் எலெக்ட்ரிக் டியாகோ கணிசமான தோற்ற மாற்றங்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மின்சார வாகனம் என்பதனால் அது தனித்துவமான காட்சியை வழங்க வேண்டும் என்பதற்காக சில மாற்றங்களை அது செய்ய இருக்கின்றது. புதிய ஸ்டைலிலான க்ரில்லே முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இத்துடன் புதிய நிற தேர்வு, நீல நிற அக்செண்டுகள், இவி எனும் பேட்ஜ்கள் உள்ளிட்டவை இந்த வாகனத்தில் வழங்கப்பட உள்ளன. இந்த அம்சங்களினாலேயே டிகோர் இவி பெட்ரோல் வெர்ஷனிடம் மாறுபட்டு காட்சியளிக்க இருக்கின்றது. இதேபோல், கணிசமான மாற்றங்கள் காரின் உட்பகுதியிலும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிறப்பம்சங்கள்:
இந்த எலெக்ட்ரிக் காரில் புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே அம்சங்கள் கொண்ட 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் க்ளஸ்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவையுயம் எதிர்பார்க்கப்படுகின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்:
டாடாவின் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பு திறன்மிக்கவையாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், டிகோர் மற்றும் டியாகோ ஆகிய இரு கார் மாடல்களும் 4 ஸ்டார்கள் ரேட்டிங் பெற்ற வாகனங்களாக உள்ளன. இதே தரத்திலேயே புதிய டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
டியாகோ இவி தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து மின்சார கார்களைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 12 லட்சத்திற்கும் குறைவான விலையில் இவ்வாகனம் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பதை டாடா மோட்டார்ஸ் இதன் அறிமுகத்திற்கு பின்னரே அறிவிக்க இருக்கின்றது.

டாடாவின் இந்த புதுமுக எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நாட்டின் மிக மலிவு விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக விளங்கும். இதனால், இக்காரின் வருகையை எதிர்நோக்கில் இந்திய மின் வாகன சந்தைக் காத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பட்ஜெட் மின்சார கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்த வண்ணம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








