கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்களால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே...

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் தற்போது முக்கிய அம்சங்களாகப் பொருத்தப்படுகிறது. இந்த பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் என்றால் என்ன? அதனால் கார் ஓட்டுநர்களுக்கு என்ன பயன் ? ழுமுமையாக காணலாம் வாருங்கள்

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

சமீபகாலமாக வெளியாகும் புதிய கார்களில் ஃபிளாட் பாட்டம் (தட்டையான அடிப்பாகம் கொண்ட )ஸ்டியரிங் வீல் என்ற ஒரு விஷயம் முக்கியமான அம்சமாக இடம் பெறுகிறது? சாதாரண ஸ்டியரிங் வீலுக்கும் இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீலுக்கும் உள்ள வித்தியாசம் இந்த ஸ்டியரிங் வீலின் கீழ்ப் பகுதி வளைவாக இல்லாமல் நேராக இருக்கும். இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? இதில் உள்ள நன்மைகள் என்ன? வாருங்கள் காணலாம்

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

முதலில் இந்த ஃபிளாட் பாட்டம் (அடிப்பாகத்தில் தட்டையாக இருக்கும்) வீல் குறித்த வரலாற்றை முதலில் காணலாம். இந்த ஃபிளாட் பாட்டம் வீல்கள் முதல் முதலில் ரேஸ் கார்களில் தான் பயன்படுத்தப்பட்டன. முக்கியமாக எஃப்1ரக ரேஸ் கார்களில் இந்த ரக ஸ்டியரிங் வீல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் இந்த ரக கார்களில் டிரைவர் அமரும் இருக்கை மிகவும் குறுகியதாக இருக்கும். டிரைவர் தன் முழு காலையும் நீட்டி அமரும் படி அமரும் படி அமைக்கப்பட்டிருக்கும்.

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

இப்படியான சீட்டில் உள்ள அமரும் போது ஸ்டியரிங் வீல் வட்டமாக இருந்தால் ஸ்டியரிங் வீலின் கீழ் பகுதி அவர்கள் கால்களுக்கு இடையே தட்டும் இதனால் அவர்களால் எளிதாக காருக்குள் ஏறவோ இறங்கவோ முடியாமல் இருக்கும். அந்த பிரச்சனைகளைச் சமாளிக்க முதன் முதலில் ரேஸ் கார்களில் இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் கொண்டுவரப்பட்டன. இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் தற்போது மற்ற கார்களிலும் கொண்டு வரப்படுகின்றன.

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

இப்படியாக ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் தற்போது வெளியாகும் கார்களில் பொருத்தப்படுகின்றன இது காருக்கு ஸ்போர்ட்ஸ் கார் லுக்கை மட்டும் கொடுக்கவில்லை மாறாக மற்ற பிற நன்மைகளையும் செய்கின்றன அதைப் பற்றித் தான் இங்குத் தெளிவாகக் காணப்போகிறோம்.

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீலை பொருத்தவரை ரேஸ்கார்களின் என்ன பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டதோ அதே பயன்பாட்டைச் சாதாரண கார்களிலும் வழங்குகிறது. அதாவது ஓட்டுநர்கள் கால் தட்டாதபடி அமர்ந்து டிரைவிங் செய்ய உதவுகிறது. இது குறிப்பாக நீண்டதூரம் பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் காருக்கும் டிரைவர் ஏறி இறங்கவும் வசதியாக இருக்கும்.

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

அடுத்ததாக இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் பார்க்க பிரிமியம் லுக்கை தருகிறது. இதுவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங்கை பொருத்தவரை 3 ஸ்போக் அலுமினியம் ரிம்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த அலுமினியம் ரிம்கள் எடை குறைவாக இருக்கும் அதனால் ஸ்டியரிங்கை சுலபமாகக் கையாள முடியும். ஒரே கையில் இந்த ஸ்டிரிங்கை பயன்படுத்தச் சுலபமாக இருக்கும். ஓட்டுநர்களுக்குச் சுலபமாக இருக்க இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் பயன்படுகிறது.

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

இதை எல்லாம் விட முக்கியமாக டிரைவர்கள் வீல்கள் நேராக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள இந்த ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் உதவுகிறது. இதனால் குழப்பம் இல்லாமல் டிரைவர் காரை ஒட்ட உதவி செய்யும் பலருக்குக் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது வீல் நேராக இருக்கிறதா? திரும்பிய நிலையில் இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. அதற்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்

கார்களில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்படுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே . . .

இதுதான் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரில் வீல் ஒரு காருக்கு தரும் நன்மைகள் இந்த ஃபிளாட்பாட்டம் ஸ்டியரிங் வீல் எதிர்காலத்தில் எல்லா கார்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இது வழக்கமான வட்ட வடிவ ஸ்டியரிங் வீலை மாற்றி எதிர்காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி

Article Published On: Saturday, May 21, 2022, 21:05 [IST]
English summary
What is flat bottom Stearing wheel what is the uses of it
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+