இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

செடான் ரக கார்களை காட்டிலும் ஹேட்ச்பேக் ரக கார்களை வாங்குவது ஏன் சிறந்தது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

காரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பார்க்கின்றனர். சிலருக்கு கார் என்பது போக்குவரத்திற்கான ஒரு வாகனம். இன்னும் சிலருக்கு கார் என்பது தங்களுடைய அந்தஸ்தின் அடையாளம். இன்னும் சிலர் காரை வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கின்றனர். இருப்பினும் புதிய கார் வாங்கும்போது நம் அனைவருக்கும் நிறைய குழப்பங்கள் ஏற்படுவது இயற்கைதான்.

இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

இதில், செடான் ரக காரை வாங்குவதா? அல்லது ஹேட்ச்பேக் ரக காரை வாங்குவதா? என்ற குழப்பமும் அடங்கும். எனவே இந்த இரண்டு வகையான கார்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள், இரண்டு வகையான கார்களின் ப்ளஸ் மற்றும் மைனஸ் ஆகிய விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்கள்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் ரக கார்கள் பின்வருமாறு:

 • மாருதி சுஸுகி ஆல்டோ
 • மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
 • மாருதி சுஸுகி வேகன் ஆர்
 • மாருதி சுஸுகி பலேனோ
 • டாடா அல்ட்ராஸ்
 • டாடா டியாகோ
 • ஹூண்டாய் சாண்ட்ரோ
 • இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

  ஹேட்ச்பேக் கார்களின் ப்ளஸ்:

  • அதிக இடவசதி.
  • அதிக மறு விற்பனை மதிப்பு (ரீ-சேல் வேல்யூ).
  • சிறிய பானெட்கள். புதிதாக கார் ஓட்டி பழகுபவர்களுக்கு இது உகந்தது.
  • செடான் ரக கார்களை காட்டிலும் சிறப்பான மைலேஜ்.
  • அளவில் சிறியதாக இருப்பதால் பார்க்கிங் செய்வது எளிது.
  • போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கும் ஏற்றது.
  • ஹேட்ச்பேக் கார்களின் மைனஸ்:

   • செடான் ரக கார்களுடன் ஒப்பிடும்போது இன்ஜின் சக்தி குறைவாக இருக்கும்.
   • இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

    பிரபலமான செடான் ரக கார்கள்

    இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள செடான் ரக கார்கள் பின்வருமாறு:

    • மாருதி சுஸுகி டிசையர்
    • மாருதி சுஸுகி சியாஸ்
    • டாடா டிகோர்
    • ஹூண்டாய் அவ்ரா
    • ஹூண்டாய் வெர்னா
    • ஹோண்டா சிட்டி
    • ஹோண்டா அமேஸ்
    • இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

     செடான் ரக கார்களின் ப்ளஸ்:

     • இன்ஜின் சக்தி அதிகம். ஓட்டுவதற்கு 'ஸ்மூத்' ஆக இருக்கும்.
     • ஹேட்ச்பேக் ரக கார்களை விட செடான் ரக கார்கள் நீளமானது. எனவே அதிக 'லெக்ரூம்' இருக்கும்.
     • செடான் ரக கார்கள் குறைவான சத்தத்தையே உருவாக்கும்.
     • இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

      செடான் ரக கார்களின் மைனஸ்:

      • ஹேட்ச்பேக் ரக கார்களை விட செடான் ரக கார்களின் விலை அதிகம்.
      • மைலேஜ் சற்று குறைவு.
      • கார் நீளமாக இருக்கும் என்பதால், பார்க்கிங் செய்வது கடினம்.
      • போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதும் கடினம்.
      • இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

       ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்களின் சாதக, பாதகங்களை நாங்கள் இங்கே கூறி விட்டோம். எனினும் செடான் ரகத்தை சேர்ந்த கார்களை விட ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்களை வாங்குவதுதான் சிறந்த முடிவாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணங்களை பின்வரும் ஸ்லைடர்களில் தொடர்ந்து பார்க்கலாம்.

       இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

       நடைமுறை பயன்பாடு: கச்சிதமான பரிமாணங்கள் காரணமாக ஹேட்ச்பேக் ரக கார்கள் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவையாக உள்ளன. நாங்கள் ஏற்கனவே கூறியபடி பிஸியான சாலைகளில் ஹேட்ச்பேக் ரக கார்களை ஓட்டுவது எளிமையான விஷயம். நகர பகுதிகளில் தற்போது கார் பார்க்கிங்கிற்கு இட பற்றாக்குறை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஹேட்ச்பேக்குகள் சிறந்த தேர்வாக இருக்கும்.

       இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

       ஓட்டுவது எளிமையானது: ஹேட்ச்பேக் கார்களின் பானெட் சிறியது. எனவே பானெட் எங்கு முடிகிறது? என்பதை டிரைவர்களால் பார்க்க முடியும். இது காரின் முன் பகுதி, மற்ற வாகனங்கள் அல்லது பொருட்களின் மீது மோதுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் பலர் ஹேட்ச்பேக் ரக கார்களில் டிரைவிங் பழகுகின்றனர்.

       இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

       மைலேஜ்: செடான் ரக கார்களை காட்டிலும் ஹேட்ச்பேக் ரக கார்கள் நல்ல மைலேஜை வழங்குகின்றன. ஹேட்ச்பேக் ரக கார்களின் எடை மிகவும் குறைவு. இதன் காரணமாகவே ஹேட்ச்பேக் கார்களால் அதிக மைலேஜை வழங்க முடிகிறது. இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், மைலேஜ் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

       இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்... செடான் காரை காட்டிலும் ஹேட்ச்பேக் காரை வாங்குவதுதான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

       நாங்கள் இங்கே கூறியிருப்பது பொதுவான கருத்துக்கள் ஆகும். ஒவ்வொருவரின் தேவையை பொறுத்து எந்த ரக காரை வாங்குவது என்ற முடிவும் மாறுபடும். எனவே உங்களது தேவைகளை பொறுத்து ஹேட்ச்பேக் ரக காரை வாங்குவதா? அல்லது செடான் ரக காரை வாங்குவதா? என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள். ஆனால் செடான் ரக கார்கள் தற்போது செல்வாக்கை இழந்து வருகின்றன என்பது 100 சதவீதம் உண்மை.

Most Read Articles

English summary
What is the difference between hatchback and sedan
Story first published: Saturday, January 8, 2022, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X