நல்லா மைலேஜ் குடுக்கும்தான்! ஆனா ஒரு ரூபாயை கூட மிச்சம் பண்ண முடியாது, ஹைபிரிட் கார்ல இப்படி ஒரு பிரச்சனையா?

இன்று டீசல் காருக்கு மாற்றாக ஹைபிரிட் கார்கள் மார்கெட்டில் களம் இறங்கியுள்ளன. இப்படியாக டீசல் காருக்கு பதிலாக ஹைபிரிட் கார்களை வாங்குவது லாபமா? இதை எப்படிக் கணக்கிட்டுத் தெரிந்து கொள்வது? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

ஒரு காலத்தில் கார்கள் என்றாலே இரண்டு வகையான கார்கள் தான் இருந்தது. ஒன்று பெட்ரோல் இன்ஜின் கார்கள், மற்றொன்று டீசல் இன்ஜின் கார்கள். இதில் டீசல் இன்ஜின் கார்களை மக்கள் அதிக மைலேஜ் மற்றும் எரிபொருள் விலை குறைவு காரணமாக அதிகம் விரும்பினர். ஆனால் இன்று இந்தியாவில் பிஎஸ் 6 மாசு தரக்கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. இதனால் இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட டீசல் இன்ஜினை தயாரிக்க முடியாமல் பல நிறுவனங்கள் திணறி வருகின்றனர். இதனால் பல நிறுவனங்கள் டீசல் இன்ஜினையே கைவிட்டு விட்டனர்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

ஆனால் மக்களுக்கு கார்களில் அதிக மைலேஜ் என்பது முக்கியம். அதனால் டீசலுக்கு மாற்றாக தற்போது மார்கெட்டில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. உண்மையில் ஹைபிரிட் கார்கள் மக்களுக்கு பெட்ரோலை விடச் சிக்கனத்தை ஏற்படுத்துகிறதா? நீண்ட கால பயன்பாட்டில் என்ன விதமான மாற்றம் இருக்கும்? வாருங்கள் விரிவாகக் காணலாம்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

அதற்காக நாம் மார்கெட்டில் உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரையும் (ஸ்டிராங்க் ஹைபிரிட்) மற்றும் கியா செல்டோஸ் டீசல் ஆட்டோமெட்டிக் காரையும் ஒப்பீடு செய்து பார்க்கப்போகிறோம். இது மட்டுமல்ல ஹோண்டா சிட்டி காரின் ஹைபிரிட் காரையும் டீசல் இன்ஜின் காரையும் ஒப்பீடு செய்து பார்க்கப்போகிறோம். டீசல் கார்களை விட ஹைபிரிட் சிறந்ததா? டீசல் இன்ஜினிற்கு பதிலாக ஹைபிரிட்டை பயன்படுத்தலாமா என விரிவாகக் காணலாம் வாருங்கள்

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

முதலில் இந்த கார்களில் இன்ஜின் குறித்த தொழிற்நுட்ப விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஹைரைடர் ஸ்டிராங்க் ஹைபிரிட் காரை பொருத்தவரை 1.5 லிட்டர், 3 சலிண்டர் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் இன்ஜின் 92 எச்பி பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், எலெக்டரிக் மோட்டாரை பொருத்தவரை 80 எச்பி மோட்டாரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இரு இன்ஜின்களும் சேர்ந்து கூட்டாக 116 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

செல்டோஸ் டீசல் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4-சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இது 115 எச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை கொண்டது. ஹோண்டா சிட்டி ஹைபிரிட் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர், 4 சிலிண்டர் ஹைபிரிட் இன்ஜினை கொண்டது. இது 98 எச்பி பவரையும், 127 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இதன் எலெக்டரிக் மோட்டாரை பொருத்தவரை 109 எச்பி பவரையும் 253 என்எம் டார்க் திறனயும் வெளிப்படுத்தும், இரண்டும் சேர்ந்து 126 எச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

ஹோண்டா சிட்டி டீசல் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4-சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இது 100 எச்பி பவரயும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்த கார்களில் உள்ள இன்ஜினின் தொழிற்நுட்ப தகவல்கள் இப்பொழுது இந்த காரின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் குறித்துத் தொடர்ந்து காணலாம்

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

டொயோட்டா ஹைரைடர் காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில் அதன் மைலேஜை டெஸ்ட் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மாருதி கிராண்ட் விட்டாரா காரை மைலேஜ் டெஸ்ட் செய்தோம். இந்த கார் 23.77 கி.மீ வரை ரேஞ்ச் கிடைத்தது. சிட்டி பகுதியில் 20.39 கி.மீ மைலேஜூம், ஹைவேயில் 22.08 கி.மீ மைலேஜூம் கிடைத்தது. கிராண்ட் விட்டாரா காரில் உள்ள ஹைபிரிட் இன்ஜினும் ஹைரைடர் காரில் உள்ள ஹைபிரிட் இன்ஜினும் ஒரே இன்ஜின் தான் (மாருதி-டொயோட்டா இணைந்து உருவாக்கியது). காரின் எடையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் அதனால் இதன் மைலேஜூம் ஒரே மாதிரி தான் இருக்குமெனக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

கியா செல்டோஸ் டீசல் ஆட்டோமெட்டிக் காரை பெருத்தவரைச் சிட்டியில் 12.9 கி.மை மைலேஜூம், ஹைவேயில் 17.8 கி.மீ மைலேஜூம் சராசரியாக 15.35 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது. மைலேஜ் விவகாரத்தில் ஹைரைடர் தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்குப் பல முக்கியமான காரணம் இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் ஹைரைடர் கார் சிட்டி மோடில் முழுவதுமாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் திறன் கொண்டது. சிட்டி பகுதிக்குள் அதிகமாக கார் ஓட்டும் பலர் இந்த மேடை மட்டுமே பயன்படுத்தலாம்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

ஹைவேயில் எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் சேர்ந்து இயங்குவதால் அதிகமான மைலேஜ் கிடைக்கிறது. சிட்டிக்குள் முழுவதுமாக இவி மோடில் காரை இயக்கினால் கொஞ்சம் கூட பெட்ரோல் செலவு இல்லாமல் பயணிக்கலாம் என டொயோட்டா நிறுவனம் கூறுகிறது.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காரை பொருத்தவரை சிட்டியில் 19.8 கி.மீ மைலேஜூம் ஹூவேயில் 22.5 கி.மீ மைலேஜூம் கிடைக்கிறது. சராசரியாக இந்த கார் 21.15 கி.மை மைலேஜ் வழங்குகிறது. ஹைரைடர் கார் மாதிரி இந்த காரை வெறும் இவி மோடில் மட்டும் போட்டு ஓட்ட முடியாது. இந்த காரின் சிஸ்டம் அதற்குத் தகுந்தார் போல டிசைன் செய்யப்படவில்லை. ஹோண்டா சிட்டி டீசல் காரை பொருத்தவரை சிட்டியில் 16.2 கி.மீ மைலேஜூம், ஹைவேயில் 19.2 கி.மீ மைலேஜூம், சராசரியாக 17.7 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ102 என் விலையிலும் டீசல் லிட்டருக்கு ரூ94 என்ற சராசரி விலையிலும் விற்பனையாகிறது. இந்த விலையில் பெட்ரோல் போட்டு டொயோட்டா ஹைரைடர் காரை ஓட்டினால் ஒரு லிட்டருக்கு டீசல் செலவு மட்டும் சராசரியாக 22.08 கி.மீ மைலேஜிற்கு, ஒரு கி.மீ பயணிக்க ரூ4.6 செலவாகிறது, ஆனால் டொயோட்டா செல்டோஸ் காருக்கு ரூ6.10 செலவாகிறது. அதாவது செல்டோஸை விட ஹைரைடர் கார் ஒரு கி.மீ தூரம் பயணிக்க ரூ1.5 வரை மிச்சப்படுத்துகிறது.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

சரி இப்பொழுது காரின் விலையுடன் ஒப்பிடுவோம். இரண்டு கார்களின் டாப் வேரியன்ட்டை ஒப்பிடும்போது ஹைரைடர் காரின் விலை ரூ18.99 லட்சம், கியா செல்டோஸ் விலை ரூ18.35 லட்சம் அதாவது செல்டோஸை விட ஹைரைடர் காருக்கு ரூ64,000 அதிகம் செலுத்த வேண்டும். அப்படி என்றால் நீங்கள் ஹைரைடர் காரை வாங்கினால் அதற்கு நீங்கள் அதிகமாகக் கொடுக்கும் பணத்தை மைலேஜ் மூலம் மிச்சப்படுத்த சுமார் 42,600 கி.மீ காரை ஓட்ட வேண்டும். இந்த 42,600 கி.மீக்கு பிறகு தான் உங்களுக்கு இந்த காரின் ரூ1.5 மைலேஜ் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

இதுவே ஹோண்டா சிட்டிக்கான ஒப்பீட்டைப் பார்ப்போம். ஹைபிரிட் காரை பொருத்தவரை சராசரியாக 21.15 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. அதாவது ஒரு கி.மீக்கு ரூ4.7 செலவாகிறது. டீசல் காரை பொருத்தவரை ஒரு லிட்டருக்கு 17.7 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. அதை வைத்துக் கணக்கிட்டால் ஒரு கி.மீ பயணிக்க ரூ5.3 செலவாகிறது. அப்படி என்றால் ஹைபிரிட் காரை பயன்படுத்துவதால் ஒரு கி.மீ -க்கு 60 காசு மிச்சப்படுத்த முடியும்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

இப்பொழுது இதை காரின் விலையுடன் ஒப்பிடுவோம். ஹோண்டா சிட்டி ஹைபிரிட் கா் ரூ19.89 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதுவே டீசல் டாப் மாடல் கார் 15.52 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. அதாவது வித்தியாசம் மட்டும் ரூ4.37 லட்சம் ஆகும். இந்த வித்தியாசம் உள்ள பணத்தை ஈடுகட்ட நீங்கள் ஹைபிரிட் காரை வாங்கினால் குறைந்தது 7.2 லட்சம் கி.மீ ஓட்டினால் தான் இந்த பணம் அதன் பின்பு லாபத்தைப் பார்க்க முடியும் இது சாத்தியமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

இதைப் பார்க்கும் போது ஹைரைடர் காரை வாங்கினால் ஓரளவிற்கு லாபம் தான் போல என உங்களுக்குத் தோன்றலாம். கியா செல்டோஸை வாங்குவதை விட ஹைரைடர் காரை வாங்கலாம் என நினைப்பவர்கள், ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும், நீங்கள் ஒரு காரை ஒரு ஆண்டிற்கு 10,000 கி.மீ வரை ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஹைபிரிட்டால் லாபம் என்ற இல்லை நோக்கி நகர முடியும். இதுவே ஹோண்டா சிட்டியில் லாபம் என்பது நடக்காத காரியம் தான்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

இதுவும் நீங்கள் கடன் மூலம் கார் வாங்கினால் ஹைரைடர் காருக்கு நீங்கள் அதிகமாகக் கொடுக்கும் ரூ64,000 பணத்திற்கு ஆண்டிற்கு 8 சதவீதம் வட்டி என வைத்துக்கொண்டாலும் 4 ஆண்டுகளில் நீங்கள் கடனை அடைத்தால் அந்த பணத்திற்கு மட்டும் ரூ20,480 4 ஆண்டுகள் வட்டி கட்டியிருப்பீர்கள், அப்படி என்றால் அதையும் லாபமாக மாற்ற வேண்டும் என்றால் மேலும் 13,653 கி.மீ ஓட்ட வேண்டும். அப்படி என்றால் மொத்தம் 56,253 கி.மீ பயணத்திற்குப் பிறகு தான் லாபத்தை நோக்கி நகர முடியும்.

நல்லா மைலேஜ் கொடுக்கும் . . . ஆனா ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது . . . ஹைபிரிடில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதான் . . .

இதனால் லாப நோக்கில் ஹைபிரிட்டை தேர்வு செய்வது என்பது பெரிய அளவில் பலன் தராது. ஆனால் டீசலை விட ஹைபிரிட் கார்கள் குறைவான மாசுவை வெளியேற்றும், இப்படியாக நம் இயற்கைக்கு முடிந்த அளவிற்குத் தீங்கு விளைவிப்பதைக் குறைக்க நினைத்தால் நீங்கள் ஹைபிரிட்ட தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, October 17, 2022, 13:44 [IST]
English summary
Which is more cost effective hybrid or diesel cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+