மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக கடுமையான விதிகளை கொண்ட என்சிஏபி?

இருப்பதிலேயே மிக மோசமான விதிகளைக் கொண்ட என்சிஏபி எது என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

வாகனங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் விதமாக உலகளவில் பலதரப்பட்ட என்சிஏபி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்களின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்து, அதுகுறித்த தகவலை இந்த உலகிற்கு தெரியப்படுத்தும். இதுவே என்சிஏபி அமைப்பின் முக்கிய பணிகள் ஆகும்.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

தெளிவாகக் கூற வேண்டும் என்றால் விற்பனைக்காக தயாரிக்கப்படும் புதுமுக வாகனங்கள் பாதுகாப்பானவைதானா என்கிற ஆய்வை அது மேற்கொள்ளும். இதற்காக பல நிலைகளில் அந்த வாகனங்களை என்சிஏபி அமைப்புகள் மோதல் ஆய்விற்கு உட்படுத்துகின்றன. ஆம், விபத்தை ஏற்படுத்தியே அதன் பாதுகாப்பு தன்மையை என்சிஏபி மையங்கள் ஆய்வு செய்கின்றன.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

ஒவ்வொரு நாடும் தங்களுக்கென வெவ்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் என்சிஏபி மையங்களும் தங்களுக்கென தனித்துவமான விதிகளை உருவாக்கி அதன்படியே வாகனங்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி ஏசியன், யூரோ, குளோபல், லத்தீன் என பலதரப்பட்ட என்சிஏபி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

இவற்றில் ஒரு சில அந்தந்த குறிப்பிட்ட நாடுகளின் அரசு வங்கும் நிதியின் கீழும், ஒரு சில என்சிஏபி-கள் லாப நோக்கமற்ற அமைப்புகளாகவும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் எந்த அமைப்பு மிகக் கடுமையான விதிகளைக் கொண்டு வாகனங்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

என்சிஏபி என்றால் என்ன?

நம்மில் பலர் என்சிஏபி (NCAP) என்றால் என்ன என்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர். புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (New Car Assessment Program), இதன் பொருளாகும். அமெரிக்காவின் முயற்சியில் உருவாக்கப்பட்டதே இந்த திட்டம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலே குறிப்பிட்டதைப் போலவே ஒரு சில என்சிஏபி அமைப்புகள் லாப நோக்கமற்றதாக செயல்பட்டு வருகின்றன.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

அந்தவகையில், குளோபல் என்சிஏபி ஓர் உதாரணம். இந்த அமைப்பு பல்வேறு என்சிஏபி-களுக்கு இடையே ஓர் இணைப்பானாக செயல்பட்டு வருகின்றது. 2011இல் இருந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கான வாகனங்களை இந்த அமைப்பு சோதனைக்கு உட்படுத்தி வருகின்றது.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு நாடுகளின் நிதியில் இயங்கக் கூடிய என்சிஏபி அமைப்பாக யூரோ என்சிஏபி இருக்கின்றது. இது 1997 ஆம் ஆண்டில் செயல்பட்டு வருகின்றது. இங்கிலாந்தின் போக்குவரத்து துறைக்கான போக்குவரத்து ஆராய்ச்சி ஆய்வகத்தால் நிறுவப்பட்டதே இந்த அமைப்பாகும்.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

என்சிஏபி மையங்கள் எப்படி செயல்படுகின்றன?

முன்னதாக கூறியதைபோல்தான் ஒவ்வொரு என்சிஏபி-யும் தனித்துவமான விதிகளைக் கொண்டு வாகனங்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றது. நடைமுறைகள் வித்தியாசம் என்பதால் இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாது. உதாரணமாக யூரோ என்சிஏபி, ஓர் வாகனத்தின் பக்கவாட்டு, முழு முன் பக்கம், சைடு போல் மற்றும் ஃப்ரண்ட் ஆஃப்செட் ஆகிய பகுதிகளை தனித்தனியாக மோதல் ஆய்விற்கு உட்படுத்துகின்றது.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

ஆனால், குளோபல் என்சிஏபி-யோ முன் பக்க மோதலை மட்டுமே முக்கிய ஆய்வாக செய்யப்படுகின்றது. இது யூரோ என்சிஏபி-யைக் காட்டிலும் குறைவான விதிகளின் கீழ் குளோபல் என்சிஏபி மோதல் ஆய்வு மேற்கொள்ளப்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றது. இந்த செயல்முறையின்போது மணிக்கு 64 கிமீ வேகத்தில் அந்த வாகனங்கள் இயக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

ரேட்டிங் எதன்கீழ் வழங்கப்படுகின்றது?

ஓர் காரின் தர மதிப்பீடானது, மோதல் ஆய்வின்போது அக்கார் சந்திக்கும் சேதம் மற்றும் காருக்குள் மனிதர்களுக்கு பதிலாக நிலை நிறுத்தப்படும் மனித உருவ டம்மிக்கள் சந்திக்கும் சேதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக ஐந்து ஸ்டார்களின்கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. உச்சபட்ச புள்ளிகளைப் பெறும் கார்களுக்கு ஐந்து ஸ்டார்களும், அதைக் குறைவான புள்ளிகளைப் பெறும் வாகனங்களுக்கு நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று ஆகிய ஸ்டார்கள் வழங்கப்படுகின்றன.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

நிர்ணயிக்கப்பட்ட குறைந்த புள்ளிகளைக்கூட எட்டாத கார்களுக்கு பூஜ்ஜியம் ஸ்டார்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மதிப்பு புள்ளிகளானது காரின் பாதிப்பையும், மனித டம்மிகளுக்கு ஏற்படும் புள்ளிகளைப் பொருத்தும் வழங்கப்படுகின்றன. டம்மியின் கழுத்து, தலை, மார்பகம், இடுப்பு, முழங்கால், மூட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் சேதங்களே கணக்கில் எடுக்கப்பட்டு மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

பெரியவர்களை போல் சிறுவர்களுக்கான பாதுகாப்பும் மோதல் ஆய்வின்போது கணக்கிடப்படுகின்றது. இதற்கென தனி டம்மி சிறுவர்களை குறிக்கும் வகையில் கார்களில் பயன்படுத்தப்படும் என்பது கவனித்தகுந்தது. சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கார்களில் சைல்டு சேஃப்டி இருக்கைகள், மும்முனை சீட் பெல்டுகள், ஐசோஃபிக்ஸ்குகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

எந்த என்சிஏபி பெஸ்ட்?

என்சிஏபி அமைப்புகள் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விதிகளை உருவாக்கி மோதல் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. ஆகையால், இவற்றில் பெஸ்ட் எது என்பதைக் கண்டறிவது இயலாத ஒன்றாக இருக்கின்றது. அந்தந்த அமைப்புகள் அந்தந்த நாடுகளுக்கு தேவையான விதங்களில் மோதல் ஆய்வை செய்து அதுகுறித்த தகவல்களை வழங்கிவிடுகின்றன. ஆகையால், இவற்றில் என்சிஏபி-யை ஒப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. மேலும், எந்தவொரு என்சிஏபியும் வெறும் கண்துடைப்பிற்காக மட்டுமே ஆய்வுகளை செய்யவில்லை என்பதையும் நாங்கள் உறுதியாக கூற விரும்புகின்றோம்.

மோதல் ஆய்வு என்ற பெயர்ல கண் துடைப்பு செய்யுறாங்களா?.. இருப்பதுலேயே எது மிக மோசமான விதிகளை கொண்ட என்சிஏபி?

மேலும், நம்மில் பலர் யூரோ என்சிஏபி-யே மிகுந்த கடுமையான விதிகளைக் கொண்டதாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம். இதில், அதிக பாதுகாப்பு டெஸ்டிங்குகள் மேற்கொள்ளப்படுவதைக் காரணம் காட்டியே இவ்வாறு நினைக்கின்றனர். உதாரணமாக, பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு என்று தனி மோதல் ஆய்வை யூரோ என்சிஏபி செய்வது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பார்த்தால், லத்தீன் என்சிஏபி பெரியவர்களுக்கு ஒன்று மற்றும் சிறுவர்களுக்கு ஒன்று என இரண்டு விதமான ஸ்டார் ரேட்டிங் தொகுப்புகளைக் கொண்டிருக்கின்றன என்பது கவனித்தகுந்தது. இதன் காரணத்தினாலேயே இவர்கள் யாரையும் ஒப்பிட முடியாத நிலை தென்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 20, 2022, 8:30 [IST]
English summary
Which ncap has the strict rules in existence
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+