நீங்க கண்ணை மூடி ஒரு காரை நினைச்சா சிவப்பு கலர் கார் தான் உங்க கண்ணுக்குத் தெரியும் ஏன் தெரியுமா?
ஃபெராரி நிறுவனத்தின் கார்கள் எல்லாம் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என விசாரித்தால், இதற்குப் பின்னால் 100 ஆண்டு பழமையான பெரும் வரலாறே இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்

இந்த உலகின் காஸ்ட்லியான கார்கள் என நீங்கள் பட்டியலிட்டால் முதலில் ஃபெராராி காரை தான் எழுதுவீர்கள். அந்த அளவிற்கு இந்த கார்கள் மிகவும் பிரபலமானவை, அதன் வேகம் மற்றும் டிசைன் எல்லாமே மக்களைக் கவரும் வகையில் அமைந்ததால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்குகின்றனர். சரி இப்பொழுது ஒரு சின்ன டெஸ்ட் செய்வோம். நீங்கள் கண்களை மூடி ஒரு ஃபெராரி காரை நினைத்துப்பாருங்கள் உங்கள் கண்களுக்கு தெரியாது ஒரு சிவப்பு நிற ஃபெராரி கார் தான்.

இதற்கு முக்கியமான காரணம் இந்த உலகில் அதிகமாகச் சிவப்பு நிறத்தில்தான் ஃபெராரி கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிறத்தில் அந்த கார் பார்ப்பதற்கும் சூப்பராக இருக்கும். இது மட்டும் அந்த கார் அதிகம் சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுவதற்கான காரணமில்லை. இதற்குப் பின்னால் ஒரு பெரும் வரலாறே இருக்கிறது. இதைப் பற்றித் தான் இன்று பார்க்கப்போகிறோம்.

1907ம் ஆண்டு பாரீஸில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் கார் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சவால் ஒன்றை விடுத்தது. அந்த சவால் என்பது சீனாவின் பெக்கிங் (தற்போதைய பீஜிங்) பகுதியிலிருந்து பாரீஸிற்கு ரேஸ் நடந்தி ஜெயிக்க வேண்டும். எந்த நாட்டில் தயாரான கார் சிறந்தது என இந்த ரேஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம், என அறிவித்தது. இந்த போட்டி அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெக்கிங்கிலிருந்து பாரீஸ் ஒன்று அடுத்த நகரம் எல்லாம் இல்லை. இந்த இரு நகரங்களுக்கும் இடையே 9000 மைல்களுக்கும் அதிகமான தூரம் இருக்கிறது.

1907ம் ஆண்டு பாரீஸில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் கார் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சவால் ஒன்றை விடுத்தது. அந்த சவால் என்பது சீனாவின் பெக்கிங் (தற்போதைய பீஜிங்) பகுதியிலிருந்து பாரீஸிற்கு ரேஸ் நடந்தி ஜெயிக்க வேண்டும். எந்த நாட்டில் தயாரான கார் சிறந்தது என இந்த ரேஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம், என அறிவித்தது. இந்த போட்டி அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெக்கிங்கிலிருந்து பாரீஸ் ஒன்று அடுத்த நகரம் எல்லாம் இல்லை. இந்த இரு நகரங்களுக்கும் இடையே 9000 மைல்களுக்கும் அதிகமான தூரம் இருக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் 5 கார்கள் பங்கேற்றன. அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த போட்டியில் இத்தாலா மாட் கார் தான் வெற்றி பெற்றது. இந்த தூரத்தைக் கடக்க இந்த கார் 61 நாட்கள் எடுத்துக்கொண்டது. இத்தனை நாட்களும் கார்களை டிரைவர்கள் மாறி மாறி ஓட்டினர். இந்த கார் வெற்றி பெற்றது மக்கள் மத்தியில் இந்த கார் பிரபலமானது.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற காரை கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஆட்டோமொபைல் ஃபெடரேஷன் பிரான்ஸ் நாட்டின் ரேஸ்கார்களுக்கான தேசிய கலராக இந்த காரின் ரோஸா கார்ஸா காரின் கலரை நிர்ணயம் செய்தது.

இதன்பின் அந்நாட்டிலிருந்து ரேஸில் கலந்து கொள்ளும் எல்லா கார்களும் இந்த நிறத்திலேயே தான் வடிவமைக்கப்பட்டன. ஃபெராரி கார்களுக்கும் அந்நாட்டின் ரேஸ்கார்கள் பட்டியலில் சேர்ந்து ரேஸ் காராக போட்டிகளில் பங்கேற்ற போது பிரபலமானது.

அப்பொழுது போட்டியில் வெற்றி பெற்ற கார்களை போலவே மக்களும் கார்கள் வாங்க விரும்பினர். இதனால் ஃபெராராி காரை புக் செய்த பலர் குறிப்பிட்ட அந்த அந்நிறுத்திலேயே கார்களை ஆர்டர் செய்தனர்.

1990 வரை இந்த டிரெண்ட் அதிகமாக இருந்தது. அப்பொழுதுவரை மொத்தமாகத் தயாரிக்கப்பட்ட ஃபெராரி கார்களில் 85 சதவீதம் இந்த ரேஸிங் ரெட் கலரில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து என்சோ ஃபெராரி ஒரு முறை கூறும்போது : " நீங்கள் ஒரு சின்ன குழந்தையை அழைத்து கார் வரையச் சொன்னால்கூட அந்த குழந்தை காரை சிவப்பு நிறத்தில் தான் வரையும் அந்த அளவிற்குச் சிவப்பு நிற கார் பிரபலமாகிவிட்டது. இதற்கு ஃபெராரி முக்கியமான காரணம்" எனக் கூறினார்.

தற்போது ஃபெராரி கார் சில்வர், மஞ்சள், கிரீன், ப்ளூ, பிளாக், ஒயிட் என கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான கலர்களில் தற்போது ஃபெராரி இருக்கிறது. இது மட்டுமல்ல ஃபெராரி காரை வாங்குபவர்களுக்கு அந்நிறுவனம் வாடிக்கையாளர்கள் கேட்கும் நிறத்திலேயே காரை தயாரித்து வழங்கவும் செய்கிறது. இதுதான் ஃபெராரி கார்கள் எல்லாம் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணம்.


Click it and Unblock the Notifications








