உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு குவியும் புக்கிங்! இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி?..

உலகின் முதல் சோலார் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

உலகின் முதல் சோலார் எலெக்ட்ரிக் காராக சோனோ சியோன் (Sono Sion) உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகளை மிக சமீபத்திலேயே சோனோ மோட்டார்ஸ் (Sion Motors) தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இந்த உலகின் முதல் சோலார் எலெக்ட்ரிக் காருக்கு ரிசர்வேஷன் பணிகள் நாட்டில் தொடங்கின. இந்த பணிகள் தொடங்கப்பட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில் தற்போது பல ஆயிரம் புக்கிங்குகள் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

2022 செப்டம்பர் 1 அன்றைய நாளின் நிலவரப்படி 20 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நபர்களும் 2 ஆயிரம் யூரோக்கள் கட்டணத்தின் அடிப்படையில் தங்களுக்கான சோனோ சியோன் சோலார் எலெக்ட்ரிக் காரை புக் செய்திருக்கின்றனர். ஜெர்மனியின் முனிச்-ஐ மையமாகக் கொண்டு இயங்கும் சோனோ மோட்டார்ஸ் கடந்த 2017ம் ஆண்டே இந்த சோலார் மின்சார வாகனத்தை முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தது.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

இதுவே இந்த உலகில் முழுக்க முழுக்க சோலார் பேனல்களால் உருவாக்கப்பட்ட வாகனம் அறிமுகம் செய்யப்படுவது முதல் முறையாகும். ஆகையால், இந்த நிகழ்வு ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கியது. குறிப்பாக, மின்சார வாகன பிரியர்களின் கவனத்தை முழுமையாக கவர்ந்தது. இதன் விளைவாகவே ரிசர்வேஷன் பணிகள் தொடங்கி சில தினங்களே ஆகின்ற நிலையில் 20 ஆயிரம் புக்கிங்குகள் மிகவும் அசால்டாகக் கிடைத்திருக்கின்றது.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

சோனோ மோட்டார்ஸ் அதன் உலகின் முதல் சோலார் எலெக்ட்ரிக் காரை 25,126 யூரோக்களுக்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 20,02 லட்சம் என்கிற விலையில் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், உலகின் முதல் சோலார் காராக மட்டுமின்றி உலகின் விலைக் குறைவான சோலார் எலெக்ட்ரிக் காராகவும் இது இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

பின்லாந்தில் உள்ள வால்மெட் ஆட்டோமோட்டிவ் (Valmet Automotive) ஆலையில் வைத்தே இந்த கார் உற்பத்தி செய்யப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்த காரின் உற்பத்தி பணிகளை கூடுதலாக விரிவாக்கம் செய்ய சோனோ மோட்டார்ஸ் திட்டமிட்டப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குள் 2.57 லட்சம் யூனிட்டுகள் சோனோ சியோன் காரை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

ஏற்கனவே கூறியதைப் போல் இந்த காரின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து பாடி பேனல்களும் சோலார் பேனல்களாகும். அதாவது, ரூஃப், ஃபெண்டர், ஹூட் உள்ளிட்ட அனைத்திலும் மின்சாரத்தை உருவாக்கக் கூடிய சோலார் பேனல்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், முன் பக்கத்தில் மட்டும் சோலார் செல் பேனல்கள் பொருத்தப்படவில்லை.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

ஒரு வேலை இதை மாற்ற நேரிட்டால் குறைவான விலையில் மாற்றிக் கொள்வதற்காக இந்த இடத்தில் மட்டும் சோலார் பேனல் பயன்படுத்தப்படவில்லை. சோனோ சியோன் சோலார் எலெக்ட்ரிக் காரில் ஒட்டுமொத்தமாக 456 சோலார் செல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை சிங்கிள் சார்ஜில் 112 கிமீ தூரம் பயணிப்பதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

மிக தெளிவான சூரியன் தெரியும் நேரங்களில் பயணிக்கும்போது இந்த ரேஞ்ஜ் திறன் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் ஓர் முழுமையான சார்ஜில் 305 கிமீ பயணிக்கும் திறனை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கும் இக்காரில் இடம் பெறும் என கூறப்படுகின்றது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 54 kWh பேட்டரி பேக் இந்த சோலார் காரில் பொருத்தப்பட உள்ளது.

உலகின் முதல் சோலார் மின்சார காருக்கு புக்கிங் குவியும் புக்கிங்... இவ்ளோ தரமான வாகனத்துக்கு இதுகூட இல்லனா எப்படி!!

அனைத்து விதமான சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள ஏதுவான வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், சோலார் பேனலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. மழை மற்றும் பிற நேரங்களில் தேவைக்கேற்ப சார்ஜிங் மையங்களில் வைத்தும் இந்த காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வாகனமாகவே சியோன் விரைவில் உலக சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது. இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 8:29 [IST]
English summary
World s first solar ev sono sion gets 20000 reservations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+