செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பற்றிய தகவல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக கசிந்துள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

வால்வோ நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த காரான எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) காரை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொது பார்வைக்கு கொண்டு வந்திருந்தது. அதன்பின் இந்த காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் அது நடக்கவில்லை. முன்னதாக டெலிவரி பணிகளை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்பதிவுகளை ஏற்கும் பணிகளே தொடங்காத நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார்களை டெலிவரி செய்யும் பணிகளையும் வால்வோ நிறுவனம் தொடங்காமல் இருந்து வருகிறது.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது தொடர்பான உறுதியான தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வால்வோ நிறுவனம் தனது இந்திய இணையதளத்தில் தற்போது பட்டியலிட்டுள்ளது.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த இணையதளத்தில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் விலை 75 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் சிபியூ (CBU - Completely Built Unit) வழியில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார் விற்பனை செய்யப்படவுள்ளது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். ஆனால் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி மற்றும் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்பதை வால்வோ இந்தியா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தைக்கான வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 75kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும்.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் டிசைன் என எடுத்து கொண்டால், ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட வால்வோ எக்ஸ்சி40 காரை போலவேதான் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரும் உள்ளது. கிட்டத்தட்ட 2 கார்களும் ஒன்றாகவே இருக்கின்றன என்றாலும், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன்படி வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் முன் பகுதியில், 'Recharge' பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஐசி இன்ஜின் மாடலின் பின் பகுதியில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் பகுதி, எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், பேட்டரியை சார்ஜ் செய்யும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 19-இன்ச் ட்யூயல்-டோன் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் இந்த காருக்கு பிரீமியமான தோற்றத்தை வழங்குகின்றன. பின் பகுதியை பொறுத்தவரை 'L' வடிவ எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. டெயில்கேட்டில் 'Volvo' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர மல்டிஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, ஏர்பேக்குகள், லேன் அஸிஸ்ட் மற்றும் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. மொத்தம் 5 விதமான வண்ண தேர்வுகளில், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கிடைக்கும்.

செமயா இருக்கு... வால்வோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவல்கள் கசிந்தன... விலை எவ்ளோனு தெரியுமா?

ப்ளாக் ஸ்டோன், டெனிம் ப்ளூ, ஃப்யூஷன் ரெட், க்ளாசியர் சில்வர் மற்றும் க்ரிஸ்டல் ஒயிட் ஆகிய 5 விதமான வண்ண தேர்வுகளில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை நீங்கள் தேர்வு செய்யலாம். ஒட்டுமொத்தத்தில் இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2022, 18:04 [IST]
English summary
Xc40 recharge electric suv important details leak via volvo india s official website
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+