சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா? பண்ண கூடாதா? ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான்!

கார்களை சிக்னலில் நிற்கும் போது அதன் பெட்ரோல் செலவைக் குறைக்க இன்ஜினை ஆஃப் செய்து ஆன் செய்வது நல்லதா கெட்டதா? பலருக்கு இருக்கும் நீண்ட நாள் குழப்பத்திற்கு ஒரு தீர்வை காணலாம் வாருங்கள்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

நாம் எல்லோரும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்குள் அவ்வப்போது சிக்கிக்கொள்வோம். நாம் வாழ்வில் மிக மோசமான நேரம் அதுவாக தான் இருக்கும் போக்குவரத்து நெருக்கடி மட்டுமல்ல சிக்கல்களும் பெரும் இம்சையான ஒரு விஷயம் தான். அதுவும் நாம் சரியாக சிக்னலை கடக்க நினைக்கும் போது சிவப்பு சிக்னல் விழுந்துவிட்டால் அதை விட எரிச்சல் வேறு யாருக்கும் இருக்காது. அந்த அளவிற்குக் கடுப்பாக இருக்கும். சென்னை போன்ற பெரு நகரங்களில் 150 விநாடிகளுக்கும் மேல் சிக்னல்கள் போடப்படுகிறது.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

இப்படியாக சிக்னல்களில் நிற்கும் போது பலருக்கு கார் இன்ஜின் வீணாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெட்ரோல் எல்லாம் வீணாகிறது என்ற எண்ணம் வரும், அதனால் சிலர் காரின் இன்ஜினை சிக்னல் விழும் போது ஆஃப் செய்து வைத்துவிடுவர். மீண்டும் பச்சை சிக்னல் வரும் போது தான் காரை ஸ்டார்ட் செய்து பயணம் செய்வார்கள்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

இதனால் பெட்ரோல் பயன்பாடு குறையும் எனக் கருதுவார்கள். சிலர் இப்படிச் செய்வதால் பெட்ரோல் பயன்பாடு குறைவதற்குப் பதிலாகக் கூடும். காரை ஸ்டார்ட் செய்யும் போது அதிகமான பெட்ரோல் எடுக்கும் எனச் சொல்லுவார்கள். இந்த பதிவில் நாம் உண்மையாகக் காரை சிக்னலில் நிறத்தும் போது காரின் இன்ஜினை ஆஃப் செய்து விடுவது நல்லதா அல்லது ஆன்னில் வைத்திருப்பது நல்லதா? எது பெட்ரோலை மிச்சப்படுத்தும் விரிவாகக் காணலாம் வாருங்கள்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

அறிவியல் ரீதியில் பார்த்தால் ஒரு கார் சிக்னலில் நிற்கும் போது செலவாகும் பெட்ரோலைவிட சிக்னலில் இன்ஜினை ஆஃப் செய்து ஆன் செய்தால் பெட்ரோல் செலவு அதிகமாகுமா இல்லை என்பது நாம் எந்த காரை பயன்படுத்துகிறோம் என்பது பொருத்து மாறுபடும். நாம் அதிக பவர் கொண்ட இன்ஜின்களான எஸ்யூவி, எம்பிவி கார் இன்ஜின்களில் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்தால் அதிகமான பெட்ரோல்கள் குடிக்கும், இதுவே சிறிய மாருதி ஆல்டோ கே10 போன் கார்களில் இன்ஜின் குறைவான பெட்ரோலை தான் குடிக்கும்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

இன்ஜின் பொருத்து மட்டுமல்ல எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது என்பதைப் பொருத்தும் இது மாறுபடும்.உலக அளவில் 10 நொடிகளுக்கு மேல் காரை நிறுத்த வேண்டும் என்றால் காரின் இன்ஜினை ஆஃப் செய்வது தான் சிறந்தது என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆம் காரின் இன்ஜினை ஆப் செய்து மீண்டும் ஆன் செய்வதால் பெட்ரோல் செலவு குறையும். ஆனால் ஆட்டோமொபைல் வல்லுநர்கள் இதற்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. காற்று மாசுபாடு குறையும் என்பதும் ஒரு காரணம் தான்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

ஆனால் இதைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. பொதுவாக காரின் இன்ஜினை ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்து என்பது எல்லா நேரத்திலும் கை கொடுக்காது. உதாரணமாக ஒருவரின் காரின் பேட்டரி வீக்காக இருக்கும் போது சில நேரம் இப்படியாகக் காரை ஆஃப் செய்துவிட்டால் சில நேரம் கார் ஸ்டார்ட் ஆகாமல் சிக்னலை கொடுக்கும். இதனால் தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். இதனால்பேட்டரியின் வாழ்நாளும் குறையும்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

அடுத்தாக பெரும்பாலான வாகனங்களில் காரை ஸ்டார் செய்வதற்கு செல்ஃப் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த செல்ஃப் மோட்டார்களுக்கு வாழ்நாள் அது எத்தனை முறை செயல்படுத்தப்படுகிறது என்பதில் தான் இருக்கிறது. அதனால் சிக்னல்கள் தோறும் ஆஃப் செய்து ஆன் செய்தால் செல்ஃப் மோட்டாரின் ஆயுள் குறையும். இதனால் காரின் பராமரிப்பு செலவு அதிகமாகும். பெட்ரோல் செலவைக் குறைக்க நினைத்துப் பராமரிப்பு செலவை அதிகரித்துக்கொள்வோம்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

இது மட்டுமல்ல பெரும்பாலான கார்களில் இன்ஜினை ஆப் செய்துவிட்டால் காரின் ஏசி வேலை செய்யாது கார் வெயிலில் நீண்ட நேரம் நின்றால் காருக்குள் வேகமாக வெப்பம் அதிகமாகும். பின்னர் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து ஏசியை ஓட விடும் போது ஏசி அதிக லோடை எடுக்கும். இதனாலும் காரின் பெட்ரோல் செலவு அதிகமாகும். இதையெல்லாம் கருதினால் காரை ஆஃப் செய்வதை விட ஆனிலேயே வைத்திருப்பது தான் சிறந்தது என நமக்குத் தோன்றும்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் காரின் இன்ஜின் நீண்ட நேரம் ஸ்டார் செய்யப்பட்ட நிலையிலேயே ரேஸ் கொடுக்காமல் கார் நகராமல் இருந்தால் அதன் இன்ஜின் தானாக ஆஃப் ஆகும் படி புதிய தொழிற்நுட்பத்தை கொண்டு வந்துள்ளனர். இப்படியாக கார் நிற்கும் போது இன்ஜின் ஆஃப் ஆனாலும் ஏசி மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்கள் ஆஃப் ஆகாது. செல்ஃப் மோட்டார்கள் அதிக முறைக்குப் பயன்படுவது போல டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

அதனால் இதன் மூலம் நாங்கள் சொல்லவருவது என்னவென்றால் நீங்கள் காரில் சிக்னலில் சிக்கினால் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் கார் தானாக ஆஃப் ஆகி ஆன் ஆகும் தொழிற்நுட்பம் இருந்தால் அப்படியாகப் பயணிப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் நீங்கள் மேனுவலாக அப்படிச் செய்தால் எரிபொருளை மிச்சப்படுத்துவதாக நினைத்துப் பராமரிப்பு செலவுகளை உங்களுக்குத் தெரியாமலேயே அதிகப்படுத்தி விடுவீர்கள்.

சிக்னலில் நிற்கும்போது காரை ஆஃப் பண்ணணுமா . . . பண்ண கூடாதா . . . ரொம்ப நாள் குழப்பத்திற்குப் பதில் இதுதான் . . .

இன்று வெளியாகும் பெரும்பாலான கார்களில் கார் தானாகவே ஸ்டாப் ஆகி ஸ்டார் ஆகும் தொழிற்நுட்பம் வந்துவிட்டது. பழைய கார்களில் மட்டும் தான் இந்த பிரச்சனை இருக்கிறது. இந்த பிரச்சனையைச் சரி செய்ய மார்கெட்டிலும் கருவிகள் கிடையாது. அதனால் இந்த டிப்ஸில் சொல்லப்பட்டபடி நீங்கள் காரை ஆஃப் செய்து ஆன் செய்யாமல் ஐடியலில் விடுவது தான் சிறந்தது.

Most Read Articles
English summary
You have to idle or turn off your engine in traffic
Story first published: Monday, September 26, 2022, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X