ADAS தொழில்நுட்பம் இருக்கும் தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடிய எக்ஸ்யூவி700 உரிமையாளர்!

அடாஸ் தொழில்நுட்பம் இருக்கும் தைரியத்தால் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) கார் உரிமையாளர் ஸ்டியரிங் வீலை தனியாக விட்டுவிட்டு காருக்குள் சூது விளையாடியுள்ளார். இந்த சம்பவம் அடாஸ் தொழில்நுட்பம் அவ்வளவு பாதுகாப்பானதா?, என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இதுகுறித்து விளக்கும் பதவே இது. வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

மஹிந்திரா நிறுவனம் விற்பனைச் செய்து வரும் மிக சூப்பரான கார் மாடல்களில் எக்ஸ்யூவி 700 எஸ்யூவி ரக காரும் ஒன்று. இந்த காரில் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக எக்கசக்கமான பாதுகாப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நிறுவனம் வழங்கியிருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் அட்வான்ஸ்ட் லெவல்-2 அடாஸ் (Advanced Level-2 ADAS) அம்சமும் ஒன்று.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

இந்த அம்சத்துடன் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் காரும் இதுவே (மஹிந்திரா எக்ஸ்யூவி700) ஆகும். இந்த அம்சத்தின் செயல் திறனையே சோதித்து பார்க்கும் வகையில் இளைஞர் ஒருவர் ஓர் காரியத்தைச் செய்திருக்கின்றனர். தன்னுடைய அந்த செயல்பாட்டை ஓர் சிறிய வீடியோவாக எடுத்து அவர் சமூக வலைதளத்தில் பதிவும் செய்திருக்கின்றார்.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

அதுவே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அடாஸ் தொழில்நுட்பத்தை ஆக்டிவேட் செய்த அந்த இளைஞர் இரு கைகளையும் ஸ்டியரிங் வீலில் இருந்து எடுத்துவிட்டு, தன்னுடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் சக நண்பர்களுடன் சேர்த்து சீட்டு விளையாடத் தொடங்குகின்றார். இந்த நிகழ்வுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அடாஸ் இருக்கும் தைரியத்திலேயே இளைஞர் இவ்வாறு செய்திருக்கின்றார். இத்தகைய அம்சத்தை இளைஞர் சமூக வலைதளத்தில் ஃபேமஸாவதற்காக பயன்படுத்தியிருக்கும் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழும்பிய வண்ணம் உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளை சில வேண்டாத செயல்களுக்கு பயன்படுத்துவது நல்லதுக்கு என பலர் அவர்களை வசைபாட தொடங்கியிருக்கின்றனர்.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

ஏனெனில், கடந்த காலங்கலில் இதுபோன்ற வீணான செயல்களை மேற்கொண்டு சிக்கல்களைச் சந்தித்தவர்கள் பலர் இருக்கின்றனர். குறிப்பாக, அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் இதுமாதிரியான செயலில் ஈடுபட்டு விபத்தை பலர் சந்தித்திருக்கின்றனர். அதில் வழங்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு உரிய நேரத்தில் செயல்பட தவறி விபத்து அரங்கேறிய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்தியாவில் இத்தகைய சம்பவத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் பயன்பாட்டாளர்கள் அரங்கேற்றியிருக்கின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் வழங்கப்பட்டிருக்கும் லெவல் 2 தன்னாட்சி அம்சம் காரை லேனுக்குள்ளேயே செல்ல வைக்க உதவும். இதுமட்டுமின்றி, முன்னால் செல்லும் வாகனத்தை கண்டறிந்து அதற்கேற்ப தன்னிச்சையாக பிரேக்கை அப்ளை செய்து அது வாகனத்தின் வேகத்தை குறைக்கும். இதுமட்டுமின்றி, அவசர காலங்களில் தன்னிச்சையாகவே செயல்பட்டு முழுமையாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தை அது நிறுத்தவும் செய்யும்.

பயணிகளைப் பாதுகாக்கும் விதமாக அது இவ்வாறு செய்யும். இத்தகைய சூப்பரான அம்சம் எக்ஸ்யூவி700 காரில் இருப்பதை உணர்ந்தே நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது காரில் இளைஞர்கள் சூது விளையாடியிருக்கின்றனர். என்னதான் பாதுகாப்பானா காராக எக்ஸ்யூவி 700 இருந்தாலும் இவ்வாறு விளையாடுவது மிகுந்த ஆபத்தானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இன்னும் பல அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது ஓட்டுநர் இரு கைகளையும் ஸ்டியரிங் வீலில் இருந்து அகற்றினால், உடனடியாக எச்சரிக்கை செய்யும். மேலும், ஸ்டியரிங் வீலை அது வைப்ரேட் செய்ய வைக்கும். இந்த செயலுக்கு பின்னரே தானாகவே அடாஸ் சிஸ்டம் ஆக்டிவேட் ஆகும். இந்த மாதிரியான நேரத்தில், சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டை (லேன்) கடைபிடித்தே கார் இயங்கும்.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

அப்போது, சாலையில் வெள்ளை கோடு சரிவர போடாமல் இருக்கும் எனில் கதை கந்தல்தான். பெருத்த ஆபத்தில் அது கொண்டு போய் விடலாம். இதனால்தான் தேவையில்லாமல் காரின் தன்னாட்சி அம்சத்தைச் சோதித்து பார்க்க வேண்டாம் கூறப்படுகின்றது. அதேவேலையில் மிக மிக சூப்பரான அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 1 வருட காலம் காத்திருப்பு காலம் நிலவுதாக தெரிவிக்கின்றன. 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளில் எக்ஸ்யூவி700 கிடைக்கின்றது.

ADAS தொழில்நுட்பம் இருக்க தைரியம்.. ஸ்டியரிங் வீலை கை விட்டுட்டு சூது விளையாடி எக்ஸ்யூவி700 உரிமையாளர்... வைரலாகும் வீடியோ!

இவை அதிக பவர்ஃபுல்லான கார்களாகும். குறிப்பாக, பெட்ரோல் எஞ்ஜின் 200 பிஎஸ் பவரையும், டீசல் எஞ்ஜின் 155 பிஎஸ் பவரையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளன. இதேபோல், இவை 380 என்எம் மற்றும் 360 என்எம்-ஐ வெளியேற்றும் திறனையும் இந்த மோட்டார்கள் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 12, 2022, 8:30 [IST]
English summary
Youngsters playing cards while car moving here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+