ஒரு சான்டரோ கார் கூட விக்கல... "வாழ்க்க நாடகமா" எனச் சோகத்தில் மூழ்கிய ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ காரை கடந்த மாதம் ஒருவர் கூட வாங்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ கார் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத கார். முதல் முறை கார் வாங்கும் பலர் இந்த காரை தான் தேர்வு செய்திருப்பர். ஆனால் இந்த கார் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் இந்த காரை அப்டேட் செய்து வெளியிட்டது.

ஒரு சான்டரோ கார் கூட விக்கல... வாழ்க்க நாடகமா எனச் சோகத்தில் மூழ்கிய ஹூண்டாய்

மீண்டும் அப்டேட் செய்து வெளியாகும் போது இந்த காருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்நிறுவனத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரீரிலீஸ் செய்த புதிதில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இந்த காரை மக்கள் பெரிய அளவில் விரும்ப வில்லை.

இதனால் இந்த 4 ஆண்டில் படிப்படியாக சான்ட்ரோ காருக்கான விற்பனை சரிந்து கொண்டே சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் மிகவும் சரிந்த நிலையில் கடந்த மே மாதம் ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரோ காரின் தயாரிப்பை ஒட்டு மொத்தமாக நிறுத்தியது. ஆனால் அதிகாரப்பூர்வமாக சான்டரோ காரின் விற்பனையை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை.

தற்போது அந்நிறுவனத்திடம் ஸ்டாக்கில் உள்ள காரை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக ஆன்லைன் மற்றும் ஷோரூம்களில் இந்த காரை புக்கிங் செய்து விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த சான்ட்ரோ காரின் பட்டியல் இருக்கத்தான் செய்கிறது. இணையதளம் மூலமாகவும் இந்த காரின் விற்பனையைச் செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் எல்லா நிறுவனங்களின் கார்களும் சிறப்பாக விற்பனையான நிலையில் ஹூண்டாய் நிறுவனத்திற்குச் சோக செய்தியாக ஒரு சான்ட்ரோ காரை கூட கடந்த மாதம் இந்நிறுவனம் விற்பனை செய்யவில்லை. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ மட்டுமல்ல எலெண்ட்ரா காரின் விற்பனையும் பூஜ்ஜியம் தான்.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மொத்தம் 2877 சான்ட்ரோ கார்கள் நாடு முழுவதும் விற்பனையாகியிருந்தது. ஆனால் இந்தாண்டு அக்டோபரில் 1 கார் கூட விற்பனையாகவில்லை என்பது சோகமாகச் செய்தி தான். இன்னும் எத்தனை கார்கள் ஹூண்டாயிடம் ஸ்டாக்கில் உள்ளது என்ற விபரம் தெரியவில்லை.

ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரோ காரை முதன் முதலாக அறிமுகப்படுத்திய போது ரூ3.9 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. பின்னர் இந்த காருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது, உதிரிப்பாகங்களின் விலையேற்றம் என பல்வேறு காரணங்களால் இந்த காரின் விலை 4 ஆண்டுகளில் ரூ5.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Zero Hyundai Santro cars sold in October 2022
Story first published: Saturday, November 19, 2022, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X