இவ்ளோ கம்மி விலைக்கே சிஎன்ஜி கார்கள் விற்பனைக்கு கிடைக்குதா!.. மைலேஜ் இவ்ளோ தருமா! பைக்கே தோத்திடும்போல!
வாகன உற்பத்தி நிறுவனங்கள் (Vehicle Manufacturers) இந்தியாவில் சிஎன்ஜி கார் (CNG Car)-களைக் களமிறக்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றன. இந்தியாவில் அவற்றிற்கு வரவேற்பு அதிகம் என்பதால் வாகன உற்பத்தியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு சிஎன்ஜி கார்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு இருக்கின்றன.
இதனால்தான் பெட்ரோல், டீசல் கார்களைப் போலவே சிஎன்ஜி கார்களும் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. மைலேஜ் அதிகம், பெட்ரோல் - டீசல் வாகனங்களைப் போலவே பராமரிப்பு செலவு குறைவு மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இதுபோன்ற காரணங்களினால் சிஎன்ஜி வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலில் உங்களுக்கு இந்தியாவின் பெஸ்ட் செல்லிங், குறிப்பாக, ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்டை இந்த பதிவில் தொகுத்து வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சிஎன்ஜி காரை வாங்கலாம் என்கிற எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக இந்த பதிவை வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Alto K10): இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார் இதுவாகும். இதன் விலை ரூ. 5.96 லட்சம் ஆகும். ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 33.85 கிமீ மைலேஜ் தரும். ஆனால், ஆல்டோின் விஎக்ஸ்ஐ வேரியண்டில் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் கிடைக்கின்றது. இது ஓர் ஆரம்ப நிலை வேரியண்ட் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.
டாடா டியாகோ (Tata Tiago): இந்தியாவின் மற்றுமொரு விலை குறைவான சிஎன்ஜி காராக இது இருக்கின்றது. ரூ. 6.55 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் என இரு விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கிறது. இது ஒரு கிலோவிற்கு 26.49 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் ட்வின் சிலிண்டர் கொண்ட சிஎன்ஜி காராகும். ஆகையால், அதிக லக்கேஜை தாராளமாக ஏற்றிச் செல்ல முடியம்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios): ஹூண்டாய் விற்பனைக்கு வழங்கும் சூப்பரான சிஎன்ஜி மாடலாக இது இருக்கின்றது. மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு விதமான வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி ஹூண்டாய் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.58 லட்சம் ஆகும். இது ஒரு கிலோவிற்கு 25 கிமீ வரை மைலேஜ் தரும்.
மாருதி சுஸுகி பலினோ (Maruti Baleno): இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். மாருதி சுஸுகி இதிலும் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்குகின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 30.16 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆறு ஏர்பேக் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz): டாடா அல்ட்ராஸ் இதிலும் ட்வின் சிலிண்டர் எஞ்ஜினையே ஆப்ஷனை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதிலும் நம்மால் அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இதில் ஒரு கிலோ சிஎன்ஜியை நிரப்பினால் 26.20 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வாய்ஸ் ஆபரேட்டட் சன்ரூஃப், மழை வந்தால் தானாக வைப் செய்யும் வசதி, ஒயர் லெஸ் செல்போன் சார்ஜிங் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
டாடா பஞ்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் சிஎன்ஜி கார் மாடலாக பஞ்ச் இருக்கின்றது. இதில் ஒரு கிலோவை நிரப்பினால் சுமார் 26.99 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சன்ரூஃப், ட்வின் சிலிண்டர் செட்-அப், தாராளமாக திறக்கும் கதவு,ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, டூயல் ஏர் பேக் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஆரம்ப விலை ரூ. 7.10 லட்சம் ஆகும்.
இவையே இந்தியாவில் தற்போது மலிவு விலையில் சிஎன்ஜி கார் மாடல்களாகும். இதேபோல், ஒரு கிலோவிற்கு 27.1 கிமீ மைலேஜ் திறனுடன் ஹூண்டாய் எக்ஸ்டர், ஒரு கிலோவிற்கு 28.51 கிமீ மைலேஜ் திறனுடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் ஒரு கிலோவிற்கு 25.51 கிமீ மைலேஜ் தரும் திறுடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா என பல சிஎன்ஜி கார்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்கள் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதேவேளையில், அதிக சிறப்பம்சங்களுடன் குறைவான விலையிலும் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதனாலும் இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








