வாகன ஓட்டிகளே விஷயம் தெரியுமா! பழைய வண்டிய அடித்து நொறுக்க மத்திய அரசு ரெடியாகிட்டு இருக்குது!

பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்யும் மையங்கள் செயல்பட சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் 11 மாநிலங்கள் இணைந்துள்ளது. இதில் தமிழகம் இடம் பெறவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ளது வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி என்றால் என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தன்னார்வ வாகன மேம்பாட்டுத் திட்டத்திற்கான தேசிய சிங்கிள் விண்டோ சிஸ்டத்திற்குள் நுழைந்துள்ளது. தன்னார்வ வாகன மேம்பாட்டுத் திட்டம் என்றால் என்ன இதில் தமிழகம் இருக்கிறதா? இதனால் மக்களுக்கு என்ன பலன்? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

வாகன ஓட்டிகளே விஷயம் தெரியுமா! பழைய வண்டிய அடித்து நொறுக்க மத்திய அரசு ரெடியாகிட்டு இருக்குது!

V-VMP

மத்திய அரசு கடந்த 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவித்தபடி இந்தியாவில் கடந்த 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி (V-VMP) நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் படி சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள் 20 ஆண்டுகள் பழமையான வாகனமாக இருந்தால் தன்னார்வமாக அரசு அமைக்கவுள்ள ஃபிட்னஸ் சென்டருக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு வாகனம் ஃபிட்டாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வாகனத்தைத் தொடர்ந்து இயக்கலாம்.

ஆனால் வாகனம் ஃபிட்டாக இல்லை என்றால் அதை கிராப் செய்யலாம். இப்படியாக வாகனம் ஸ்கிராப் செய்யப்பட்டதற்குச் சான்று வழங்கப்படும். வாகனத்தை ஸ்கிராப் செய்த நபர் குறிப்பிட்ட வாகனத்திற்குப் பதிலாகப் புதிதாக வாகனம் ஒன்றை வாங்கினால் முந்தைய வாகனத்தை ஸ்கிராப் செய்ததைக் காட்டி புதிய வாகனம் வாங்குவதில் சலுகைகளைப் பெறலாம். இப்படியாக வாகனங்களை ஸ்கிராப் செய்யச் சொந்த வாகனங்களுக்கு வாகனத்தின் வயது 20 தாண்டியும், கமர்ஷியல் வாகனங்களுக்கு வயது 15 தாண்டியும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளே விஷயம் தெரியுமா! பழைய வண்டிய அடித்து நொறுக்க மத்திய அரசு ரெடியாகிட்டு இருக்குது!

வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி

இந்த வாகனங்களை ஸ்கிராப் செய்ய இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஸ்கிராப்பிங் மையங்கள் மற்றும் டெஸ்டிங் மையங்கள் நிறுவ மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் வரை மொத்தம் 117பேர் பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப் மையங்களை நிறுவ விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 36 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்படி தற்போது இத்தனை மையங்களும் ஒரே விண்டோவின் கீழ் இயங்க மத்திய அரசுத் திட்டம் ஒன்றை வகித்துள்ளது. அதில் தற்போது குஜராத், உத்திர பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஓடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், கோவா, உத்தரகண்ட், சத்தீஷ்கர், ஆகிய மாநிலங்கள் இணைந்துள்ளன. இந்த சிங்கிள் விண்டோ சிஸ்டம் பதிவு செய்யப்பட்ட ஸ்கிராப்பிங் சென்டரில் வாகனத்தை ஸ்கிராப் செய்தால் அதற்கான சான்று ஒன்றாக இருக்கும்.

டெஸ்டிங் ஸ்டேஷன்கள்

இது மட்டுமல்ல வாகனத்தை ஸ்கிராப் செய்த தகவல்கள் ஒரே இடத்தில் இருப்பதால் மத்திய அரசும் இந்த தகவல்களை எளிதாக அணுகிவிடும். இது போக நாடு முழுவதும் 84 கூடுதல் டெஸ்டிங் ஸ்டேஷன்கள் 11 மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன. இது பயன்பாட்டிற்கு வந்ததும், டெஸ்டிங் ஸ்டேஷன்களில் டெஸ்ட் செய்யப்பட்டு டெஸ்டில் தோல்வியடையும் வாகனங்கள் ஸ்கிராப்பிங் மையத்தில் வைத்து ஸ்கிராப் செய்யப்படும். இந்த டெஸ்ட்டிங் மையத்திற்கு வாகனத்தைக் கொண்டு செல்வது கட்டாயம் கிடையாது.

மக்கள் விரும்பினால் மட்டுமே வாகனத்தை டெஸ்டிங் மையத்திற்குக் கொண்டு செல்லலாம். இல்லை என்றால் அதைப் பயன்படுத்தத் தடையில்லை. அதை அவர்கள் சொந்தமாகப் பயன்படுத்தாமல் வைத்திருந்தும் புதிய வாகனங்களை வாங்கலாம். இது மத்திய அரசு சாலையில் ஓடும் பழைய வாகனங்களை அகற்றவே இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. பழைய வாகனங்களால் அதிகமான மாசு ஏற்படுவதால் இந்த திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்தைக் காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2023, 16:40 [IST]
English summary
11 state and ut joins national single window system in vehicle scrapping policy
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+