13 வருஷமாகியும் புத்தம் புதுசுபோல இருக்கும் ஃபோக்ஸ்வேகன் போலோ! 2லட்சம் கிமீ ஓடிருச்சு ஆனா சின்ன பிரச்னைகூட வரல

அறிமுகப்படுத்துவதற்கான அவசியம் இல்லாத இந்திய கார் மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo)-வும் ஒன்று. இந்த கார் இப்போது விற்பனையில் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்தியாவில் இருந்து இந்த கார் வெளியேற்றப்பட்டது. அதாவது, விற்பனையில் இருந்து அகற்றம் செய்யப்பட்டது.

இதன் வெளியேற்றம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலே பல ஆண்டுகளாக, பல லட்சம் கிலோ மீட்டரைக் கடந்து இயங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீடித்து உழைக்கும் வாகனங்களை பார்ப்பதே மிகவும் அரிதானதாக உள்ளது.

Volkswagen polo hatchback

உலகின் ஏதோ ஓர் மூலையிலேயே இந்த மாதிரியான வாகனங்ளைப் பார்க்க முடிகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் இந்த மாதிரியான ஓர் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ, 13 ஆண்டுகளைத் தாண்டி பயன்பாட்டில் இருக்கின்றது.

மேலும், இதுவரை 2 லட்சம் கிமீ அக்கார் ஓடி இருப்பதாக கூடுதல் போனஸ் தகவலும் வெளியாகி இருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பயன்பாட்டாளர்களையும் பெருமையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. தலைநகர் புது டெல்லியைச் சேர்ந்தவர் புனித் குப்தா.

Volkswagen polo

இவரே 13 ஆண்டுகள் பழைய ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் உரிமையாளர் ஆவார். இந்த 13 ஆண்டுகளில் தான் இந்த காரில் எந்தவிதமான இன்னல்களையும் அனுபவிக்கவில்லை என அவர் கூறி இருக்கின்றார். பேஸ் ஸ்பெக் மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ காரையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

1.2 லிட்டர், 3 சிலிண்டர், 75 பிஎஸ் பவரை வெளியேற்றும் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரை இப்போதும் புதிதுபோல் இருக்கின்றது. புனித் குப்தா அதனை தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இந்த அளவு மேம்பட்டதாக அவரால் வைத்திருக்க முடிந்திருக்கின்றது.

13 year old volkswagen polo

இந்த காரில் பயணிக்கும்போது ஸ்மூத்தான ரைடிங், ரிஃபைண்ட் மற்றும் வைப்ரேஷன் இல்லாத ஃபீலை தான் பெற்றதாக அவர் கூறினார். இந்தியாவில் பலர் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அதிக பராமரிப்பு செலவுக் கொண்டது என குற்றாம் சாட்டி வரும்நிலையில், குப்தா, தனுக்கு அது பெரிய தொந்தரவாக இருந்ததாக தெரியவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து, வாகனங்களின் தரத்தை பராமரிக்க நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் கூறினார். தான் இதை எல்லாம் கடைபிடித்த காரணத்தினாலேயே தன்னுடைய போலோ கார் நீடித்து உழைக்கும் வாகனமாக மாறி இருப்பதாக அவர் கூறி இருக்கின்றார்.

இந்த காரைத் தொடர்ந்து அவர் விரைவில் புதிய டைகுன் ஜிடி காரின் பயன்பாட்டிற்கு மாற இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். இதற்கான திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அவர் கூறினார். தன்னுடைய போலோ வாகனத்தில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே இந்த மாற்றத்தை அவர் செய்யப்போவதாக கூறி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போலோ காருக்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இருப்பினும், விற்பனையில் இருந்து அந்த கார் வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. மீண்டும் இதை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வருமா என்பது தெரியவில்லை. ஒருவேளை விற்பனைக்கு வந்தால் இதை வாங்க இப்போதும் ஒரு சிலர் தயாராக இருக்கின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், பெரிய அளவில் சந்தையை அது ஆளுமா என்பதில் சந்தேகம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 24, 2023, 13:42 [IST]
English summary
13 year old volkswagen polo still looks new here is video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X