இந்த பிராண்டுக்கு இப்படி ஒரு வரவேற்பா! 150 பேர் இந்த நாள்லதான் வேணும்னு அடம்பிடித்து வாங்கிட்டு போயிருக்காங்க!

கேரளத்து மக்கள் மத்தியில் இந்த பிராண்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா என ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு ஒரே நாளில் 150 பேருக்கு ஒற்றை நிறுவனத்தைச் சேர்ந்த கார்கள் மாடல்கள் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கேரளத்து மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் மாருதி ஆல்டோ (Maruti Suzuki Alto) போன்ற அதிக மைலேஜ் தரும் மற்றும் குறைவான பராமரிப்பு செலவை வழங்கும் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இப்போது இந்த நிலை அப்படியே மாறி இருக்கின்றது.

Volkswagen onam mega car delivery

ஆமாங்க, அம்மாநில வாசிகள் மத்தியில் தற்போது பிரீமியம் தரம் நிறைந்த மற்றும் பாதுகாப்பு வசதிமிக்க கார்களுக்கே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமான ஓர் சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது. ஒரே நேரத்தில் 150 கேரள வாசிகளுக்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது அதிக பாதுகாப்பு தரத்திற்கு பெயர்போனவையாக மாறி இருக்கின்றன. அதேவேளையில், பிரீமியம் வசதிக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏற்கனவே அதிக புகழ்பெற்றவையாக இருக்கின்றன. இந்தநிலையே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தர தொடங்கி இருக்கின்றது.

150 Unit cars delivered in single day

ஆமாங்க, கேரளாவில் மட்டுமில்லைங்க ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், கேரளாவில் கொஞ்சம் கூடுதலாகவே இந்த டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுவதை நம்மால் உணர முடிகின்றது. இதற்கு சான்றாகவே ஒரே நாளில் 150 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

அனைத்து கார்களும் கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணத்தை முன்னிட்டு சிங்கம் முதல் நாளில் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபோக்ஸ்வேகனின் முக்கிய தயாரிப்புகளான விர்சுஸ், டைகுன் மற்றும் டிகுவான் ஆகியவையே அந்த நாளில் டெலிவரிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Volkswagen onam mega delivery

இதுதவிர, ஃபோக்ஸ்வேகனின் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை பிராண்டான தஸ் வெல்ட் ஆட்டோ வாயிலாக 50 யூஸ்டு கார்கள் அதன் உரிமையாளர்களிடத்தில் டெலிவரிக் கொடுக்கப்பட்டன. சுமார் 200 யூனிட் கார்கள் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட இந்த நிகழ்வு கேரளாவில் தற்போது பெருத்த ஆச்சிரயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதேவேளையில், இதுபோன்று ஒரே நாளில் அதிக யூனிட்டுகள் கார்கள் டெலிவரி கொடுக்கப்படுவது முதல் முறையல்ல. ஏற்கனவே கியா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரத்தில், நீண்ட நாட்கள் கழித்து இப்போதே அதிக எண்ணிக்கையில் கார் டெலிவரி கொடுக்கும் நிகழ்வு கேரளாவில் அரங்கேறி இருக்கின்றது.

ஆகையால், இதனை ஃபோக்ஸ்வேகன் டீலர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். ஃபோக்ஸ்வேகன் சமீபத்திலேயே அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளின் விலையை உயர்த்தியது. அதில், டிகுவான் ஆகும். இதன் விரை ரூ. 47 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனால் இப்போது டிகுவான் காரின் ஆரம்ப விலை ரூ. 35.17 லட்சமாக அதிகரித்து இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். நிறுவனத்தின் விர்சுஸ் ரூ. 11.48 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. டைகுனின் ஆரம்ப விலை ரூ. 11.62 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மட்டுமில்லைங்க, உலக நாடுகளிலும் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் (Skoda Auto Volkswagen India pvt ltd) நிறுவனங்கள் இணைந்து இதுவரை இந்தியாவில் இருந்து 6 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது.

அனைத்தும் மேட்-இன் இந்தியா கார்கள் ஆகம். இந்த வரலாற்று சாதனையை வெகு சமீபத்திலேயே இந்த நிறுவனங்கள் செய்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இந்திய தயாரிப்பு ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்களுக்கு மெக்சிகோ, சஹாரா, வட ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள் மற்றும் ஜிசிசி (கல்ஃப்) நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலேயே மிகவும் வலுவான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளுக்கு இப்படி ஒரு வரவேற்பா என கூறும் அளவிற்கு மிக சிறப்பான விற்பனையை அந்நிறுவனத்தின் கார்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 150 கேரள வாசிகளுக்கு ஃபோக்ஸ்வேகன் கார்கள் டெலிவரி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 19, 2023, 9:20 [IST]
English summary
150 units volkswagen cars delivered in single day in kerala due to onam
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X