ஃபேக்டரி கன்டிஷனுக்கே கொண்டாந்துட்டாங்க! 1957மாடல் காரா இது? புதுசு போல ஜொலிக்குது.. ரோல்ஸ் ராய்ஸ்லாம் வேஸ்ட்!
1957 மாடல் கார் ஒன்றை அதன் உரிமையாளர் இப்போதுதான் ஷோரூமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார் என கூறும் அளவிற்கு புத்தம் புதிய நிலைக்கு மாற்றி இருக்கின்றார். குறிப்பாக, அந்த காரை ஃபேக்டரி கன்டிஷனுக்கே மீட்டெடுத்து இருப்பது ஒட்டுமொத்த வாகன காதலர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஏதோ வெளிநாட்டுல இது நடந்திருக்குமோ என நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவிலேயே இந்த அசத்தலான மாடிஃபிகேஷன் சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. பின்னொலியில் ஒலிக்கும் பாடல் தமிழாக இருந்தாலும், அதை மாடிஃபிகேஷன் செய்திருப்பது குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதபாத்தை மையமயாகக் கொண்டு இயங்கும் கணேஷ் மோட்டார்ஸ் என்பது தெரிய வந்திருக்கின்றது.

பழைய வாகனங்களை புத்தம் புதிய நிலைக்குக் கொண்டு வருவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள் ஆவார்கள். இதற்கு சான்றாக அவர்களின் இன்ஸ்டா பக்கம் இருக்கின்றது. எக்கசக்கமான கார்களை அவர்கள் ரீ-ஸ்டோர் செய்திருக்கின்றனர். அதாவது, புதிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஷோரூமில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்டதைப் போலவே அவர்கள் அனைத்து கார்களையும் மாற்றி இருக்கின்றனர் என்பதுதான்.
இதையே கணேஷ் மோட்டார்ஸ் சர்வ சதாரணமாக செய்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே இந்த 1957 விண்டேஜ் கார் மாடல் இருக்கின்றது. கூடுதல் அம்சங்கள் என எதையும் சேர்க்காமல் ஃபேக்டரி கன்டிஷனுக்கே மீட்டெடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போது விற்பனையில் இருக்கும் வாகனங்களின் சிலவற்றின் குறிப்பிட்ட பாகங்களைப் பெறுவதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கும், மாடிஃபிகேஷன் நிறுவனம் 1957இல் விற்பனையில் இருந்த வாகனத்தை அதே பழைய நிலைக்கு மீட்டெடுத்து இருக்கின்றனர். இது டாட்ஜ் கிங்ஸ்வே கார் மாடல் ஆகும்.
50ஸ் மற்றும் 60ஸ்-களில் செல்வந்தர்களின் மிகவும் பிரியமான இருந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய மிகவும் புத்தம் புதிய நிலைக்கு மீட்டெடுத்து இருக்கின்றனர். இந்த கார் சாலையில் மிதந்து செல்லும் கப்பலைப் போல் பயணிக்கும் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, "நெருப்புடா நெருங்குடா" என்கிற சூப்பர் ஸ்டாரின் படல் இந்த காருக்கவே எழுதியதைப் போல் உள்ளது. கார் காதலர்கள் பலரின் கவனத்தை இந்த கார் தற்போது ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்தும் வேற லெவலுக்கு மாறி இருக்கின்றது.
இந்த காரை கணேஷ் மோட்டார்ஸ் கையில் எடுக்கும் முன் அது துருவிற்கு பாதி இரையாகிய நிலையில் இருந்தது. வீடியோவில் இதுகுறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் இருந்தே மிகவும் அற்புதமான நிலைக்கு டாட்ஜ் கிங்ஸ்வே கார் மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த காரை கணேஷ் மோட்டார்ஸ் துருவில் இருந்து மட்டுமே மீட்டெடுக்கவில்லை. அதை ஒட்டுமொத்த அழிவில் இருந்து தற்போது மீட்டெடுத்திருக்கின்றது. காரின் குறிப்பிட்ட சில முக்கிய பாகங்கள் மிஸ்-அலைன்மென்ட்டும் அது ஆகி இருந்தது. இதில் இருந்தும் அவர்கள் காரை மிகவும் நேர்த்தியாக மீட்டெடுத்து இருக்கின்றனர்.
இந்த காரில் பயன்படுத்துவதற்காக ஒரு சில பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இது ஓர் புதிய லக்சூரி காரை வாங்குவதைக் காட்டிலும் அதிக செலவை ஏற்படுத்தி இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஏனெனில், காரில் இருக்கை முதல் கொண்டு பல பாகங்கள் இல்லாமல் இருந்திருக்கின்றன.
அவை அனைத்தும் ஃப்ரெஷ்ஷாகவே தற்போது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று அதிக செலவு மற்றும் அதிக வேலையைக் கொடுக்கும் என்பதனாலேயே பெரும்பாலானோர் விண்டேஜ் வாகனங்களை மீட்டெடுக்க தயங்குகிறார்கள். ஆனால், இதை கணேஷ் மோட்டார்ஸும், டாட்ஜ் காரின் உரிமையாளரும் பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் அதை புதிய நிலைக்கு மாற்றி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விண்டேஜ் கார்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் மிக அதிகம். ஆனால், அதைப் பயன்படுத்துவோர் மிக மிக குறைவே. அதில் அதிகம் செலவு ஏற்படும் என்கிற காரணத்தினால் பலர் விண்டேஜ் வாகனங்களை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், ஒரு சிலர் செலவை பற்றி பயப்படாமல் விண்டேஜ் வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்படியான ஓர் நபரே 1957 டாட்ஜ் காரை புதிய நிலை அப்கிரேட் செய்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









